டப்பா சைஸில் காரை வெச்சிக்கிட்டு இதையெல்லாம் செய்யலாமா? இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
டாடா நானோ (Tata Nano) காரில் ஓவர்-ஸ்பீடில் ஓவர்டேக் செய்ய முயற்சித்தால் என்ன ஆகும் என்பதற்கு சாட்சியாக ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்த விபத்தின் போது காட்சிப்படுத்தப்பட்ட வீடியோ தான் தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகில் அதிக சாலை விபத்துகள் நிகழக்கூடிய நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்றாக உள்ளது. நம் நாட்டில் சாலை வசதிகள் பரந்து விரிந்துள்ளது. அதற்கேற்ப வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால் சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், சாலையின் தரம், சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு போன்றவையும் காரணமாக உள்ளதை மறுக்க முடியாது.

குறிப்பாக, பாதுகாப்பான சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நம்மில் சிலரிடம் இல்லாதது சாலை விபத்துகளை அதிகளவில் உண்டாக்குகிறது. முன்னெச்சரிக்கை இன்றி, வாகன ஓட்டியவரால் ஏற்பட்ட சாலை விபத்துகளை பற்றி இதற்குமுன் பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில், முட்டாள்தனமாக டாடா நானோ காரை ஓட்டியவரால் பரிதாபமாக பைக் ஓட்டி ஒருவரும் விபத்தில் சிக்க நேர்ந்துள்ளது.
இந்த விபத்து இந்தியாவில் சரியாக எந்த பகுதியில் நடைபெற்றது என்பது தெரியவில்லை. சாலையோரங்களில் அதிகளவில் தென்னை மரங்களை பார்க்கும்போது, இந்த விபத்து தென்னிந்தியாவில் தான் ஏதேனும் ஒரு மாநிலத்தில் நடைபெற்றிருக்க வேண்டும். இந்த விபத்து தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே செய்தியின் இறுதியில் காணலாம்.

வெறும் 20 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக உள்ள இந்த வீடியோவின் துவக்கத்தில், ஒருவர் தனது பைக்கை மிதமான வேகத்தில், யாருக்கும் தொந்தரவு அளிக்காத வண்ணம் இயக்கிக் கொண்டு செல்கிறார். திடீரென டாடா நானோ கார் ஒன்று அவரை ஓவர்டேக் செய்ய முயற்சிக்கிறது. ஆனால், நானோ போன்ற அளவில் சிறிய காரில் ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்வது ஆபத்தானது.
இதனை அறியாத இந்த நானோ கார் ஓட்டுனர் பைக்கை ஓவர்டேக் செய்ய முயற்சிக்க, ஒரு கட்டத்தில் கார் முழுவதுமாக திரும்பிவிட்டது. ஆனால், அந்த சமயத்தில் பைக் மீது கார் மோதவில்லை. இன்னும் சொல்லப்போனால், பைக்கிற்கு சில அடி தூரத்திற்கு முன்பாகவே கார் சாலையை கடந்துவிடுவதை வீடியோவில் காணலாம். இதனை கண்ட பைக் ஓட்டி உடனே தனது வேகத்தை குறைத்துக் கொண்டுள்ளார்.

சாலையின் ஓரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதிய கார், அதில் ஏற்பட்ட விசையால் பின்னோக்கி வந்துள்ளது. அதாவது, கார் மீண்டும் சாலைக்கே வந்துள்ளது. ஏற்கனவே பைக்கின் வேகத்தை குறைத்துக் கொண்ட பைக் ஓட்டி, கார் மீண்டும் ரிவர்ஸில் வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை போல. ரிவர்ஸில் வந்த கார், சரியாக பைக் மீது மோதிவிட்டது. இந்த மோதலில் பைக் ஒரு திசையிலும், ஓட்டுனர் ஒரு திசையிலும் தூக்கி எறியப்பட்டனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விபத்திற்கு முக்கிய காரணம், நானோ கார் ஓட்டுனர் தான். ஏனெனில், நானோ போன்ற அளவில் சிறிய காரை மெதுவாக ஓட்டுவது எளியதாக இருக்கலாம். ஆனால், ஹை ஸ்பீடு ஓட்டும்போது மிகுந்த கவனம் தேவை. பாதையில் ஏதேனும் ஒரு பொருள் இடையூறாக வரும்போது முற்றிலுமாக காரின் கண்ட்ரோலை இழந்துவிடுவோம்.


Click it and Unblock the Notifications









