நானோ கார் தயாரிப்பு செலவை குறைக்க டாடா கையாண்ட யுக்திகள்!!

Posted By:

இன்றைக்கும் உலகின் குறைவான விலை தயாரிப்பு நிலை கார் மாடல் என்ற பெருமையுடன் டாடா நானோ கார் வலம் வருகிறது. ஒரு லட்ச ரூபாய் கார் என்ற பிரகடனத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட நானோ காரின் பேஸ் மாடல் விலை இன்று இரண்டு லட்சங்களை தொடுகிறது.

பல குறைபாடுகளை களைந்து ஓர் முழுமையான ஹேட்ச்பேக் கார் மாடலாக மேம்படுத்தப்பட்டிருப்பதால், விலையும் இரண்டு லட்சங்களை தொடுகிறது. மேலும், குறைவான விலை கார் என்ற முத்திரையையும் அழிக்கும் முயற்சிகளை டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், நானோ காரில் தயாரிப்பு செலவீனத்தை குறைப்பதற்காக வடிவமைப்பில் மேற்கொள்ளப்பட்ட சில யுக்திகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 01. சக்கரங்கள்

01. சக்கரங்கள்

நானோ காரின் சக்கரங்கள் 3 போல்ட்டுகள் மட்டுமே கொண்டது. ஆனால், பிற கார் மாடல்கள் 4 முதல் 5 போல்ட்டுகளை கொண்டிருக்கும். தயாரிப்பு செலவை குறைக்கவே இந்த யுக்தியை பயன்படுத்தியுள்ளனர்.

02. இடவசதி

02. இடவசதி

மொத்த நீளத்தை மாருதி 800 காருடன் ஒப்பிடும்போது குறைவு. ஆனால், மாருதி 800 காரைவிட சிறப்பான இடவசதி கொண்டது. இதற்காக, தடிமன் குறைவான இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இப்போது வரும் பெரும்பாலான கார்களில் சிக்கனத்திற்காக ஹெட்ரெஸ்ட் இணைந்த தடிமன் குறைவான இருக்கைகள் பல கார்களில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

 03. பெட்ரோல் நிரப்பும் மூடி

03. பெட்ரோல் நிரப்பும் மூடி

பெட்ரோல் நிரப்புவதற்கான மூடி வெளிப்புறத்தில் இல்லாமல், காரின் பானட்டிற்குள் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் நிரப்பும்போது காரின் பானட்டை திறந்துதான் நிரப்ப முடியும். வெளிப்புறத்தில் மூடி கொடுத்தால் அதற்கான அமைப்பிற்கு கூடுதல் செலவு பிடிக்கும்.

04. ஸ்டீயரிங் வீல்

04. ஸ்டீயரிங் வீல்

டாடா நானோ காரின் மீட்டர் கன்சோல் டேஷ்போர்டில் நடுவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லும்போது ஸ்டீயரிங் வீலை இடதுபுறம் எளிதாக மாற்றுவதற்காக இப்படி டிசைன் செய்யப்பட்டது.

05. வசதிகள் இல்லை

05. வசதிகள் இல்லை

ஸ்டான்டர்டு பேஸ் மாடலில் ஏசி, பவர் ஸ்டீயரிங் உள்ளிட்ட பல முக்கிய வசதிகள் இல்லை.

06. ஸ்டெப்னி வீல்

06. ஸ்டெப்னி வீல்

பெரும்பாலான கார்களில் பின்புற டெயில்கேட், பூட்ரூம் அல்லது காரின் அடிப்பகுதியில் ஸ்டெப்னி வீல் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், டாடா நானோ காரில் முன்புற பகுதியில், ஸ்டெப்னி வீல் வைக்கப்பட்டுள்ளது.

07. ஸ்பேர் டயர்

07. ஸ்பேர் டயர்

டாடா நானோ காரில் 135/70-R12 அளவு கொண்ட ஸ்பேர் டயர் கொடுக்கப்படுகிறது. இடநெருக்கடியை தவிர்க்கவும், விலை குறைவு என்பதால் இந்த டயர் கொடுக்கப்படுகிறது.

08. வைப்பர்

08. வைப்பர்

முன்புற விண்ட் ஷீல்டு முழுமையை சுத்தம் செய்வதற்கு ஏற்ப ஒரேயொரு வைப்பர் கொடுக்கப்பட்டுள்ளது.

09. ஏர்பேக்

09. ஏர்பேக்

டாப் வேரியண்ட்டில் கூட ஏர்பேக் வழங்கப்படுவதில்லை. இதுவும் ஒரு சிக்கன முயற்சியாகும்.

10. டெயில் கேட்

10. டெயில் கேட்

இந்த காரில் டெயில்கேட் இல்லை. பூட்டித் திறக்கும் வசதியை கொடுப்பதற்கு கூடுதல் செலவாகும் என்பதால் தவிர்க்கப்பட்டு, பானட் பகுதியில் இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் டெயில்கேட் கொண்ட மாடலிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

11. எஞ்சின்

11. எஞ்சின்

இந்த காரில் 624சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் சக்திகொண்ட எஞ்சினை பொருத்தினால், காரின் பாடி, சஸ்பென்ஷன் அமைப்பு, கியர்பாக்ஸ் உள்ளிட்டவையும் சற்று உறுதிமிக்கதாக தேவைப்படும் என்பதால் குறைவான சக்திகொண்ட எஞ்சினை பயன்படுத்தியுள்ளனர்.

12. ரியர் வியூ கண்ணாடி

12. ரியர் வியூ கண்ணாடி

ஆரம்பத்தில் இந்த காரில் வலது பக்கம் மட்டுமே ரியர் வியூ கண்ணாடி கொடுக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் உயர்வகை வேரியண்ட்டுகளில் இரண்டு பக்கமும் ரியர் வியூ கண்ணாடிகள் கொடுக்கப்பட்டன.

 13. பவர் விண்டோ சுவிட்சுகள்

13. பவர் விண்டோ சுவிட்சுகள்

டாடா நானோ காரில் பவர் விண்டோ சுவிட்சுகள் முன்பக்க இருக்கைகளுக்கு நடுவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இரண்டு கதவுகளிலும் சுவிட்சுகள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஓட்டுனர், சக பயணி இருவரும் எளிதாக பவர் விண்டோ சுவிட்சை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 14. வெல்டிங் குறைவு

14. வெல்டிங் குறைவு

டாடா நானோ காரின் பல இணைப்புகள் வெல்டிங்கிற்கு பதில் பசை மற்றும் பிளாஸ்டிங் பாகங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. வெல்டிங் செய்யும்போது தயாரிப்பு செலவு மிக அதிகமாக இருக்கும் என்பதே காரணம்.

15. பெயர் காரணம்

15. பெயர் காரணம்

நானோ கார் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை தொடர்ந்து காணலாம். நானோ என்றால் குஜராத்தி மொழியில் சிறிய என்று பொருள்படுகிறது. ஆங்கிலத்திலும் அதே பொருள்படுவதால், இந்த பெயரை சூட்டினர்.

16. கின்னஸ் சாதனை

16. கின்னஸ் சாதனை

2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபோது உலகின் மிக குறைவான விலை கார் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்தது.

17. காப்புரிமைகள்

17. காப்புரிமைகள்

நானோ காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்களுக்காக 34 காப்புரிமைகளை டாடா மோட்டார்ஸ் விண்ணப்பித்தது.

18. கிரவுண்ட் கிளிரயன்ஸ்

18. கிரவுண்ட் கிளிரயன்ஸ்

நம் நாட்டு சாலைகளுக்கு கிரவுண்ட் கிளிரயன்ஸ் சிறப்பாக இருப்பது அவசியம். அந்த வகையில், டாடா நானோ கார் 180 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, பொலிரோ போன்ற எஸ்யூவி மாடல்களுக்கு இணையான கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

19. ஒரு லட்ச ரூபாய் கார்

19. ஒரு லட்ச ரூபாய் கார்

முதலில் ஒரு லட்ச ரூபாய் கார் என்று விளம்பரத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட டாடா நானோ காரின் பேஸ் மாடல் விலை இன்றைய நிலவரப்படி, ரூ.2.30 லட்சம் அடக்க விலைக்கு கிடைக்கிறது.

 
English summary
Let's take a look at 19 facts about the Tata Nano. Some of them were intended to just keep the cost low, but some focused on giving more with less.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark