ஏழை மக்களை பறக்க வைப்பதற்காக இளைஞர் செய்த காரியம்! சூரரை போற்று சூர்யாவையே மனுஷன் தூக்கி சாப்பிட்டுட்டாரு!

விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்குமே உள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும்தான் இந்த கனவு கை கூடுகிறது. டிக்கெட் கட்டணம் அதிகம் என்பது போன்ற காரணங்களால், விமானத்தில் பறக்கும் ஆசையை பலரால் இன்னமும் நிறைவேற்றி கொள்ள முடியவில்லை.

குறிப்பாக கிராமப்புற மக்கள் பலருக்கு விமான பயணங்கள் என்பது இன்று வரை எட்டாகனியாகதான் இருந்து வருகிறது. ஆனால் தன் ஊரை சேர்ந்த மக்களுக்கு, விமானத்தில் பறப்பது போன்ற அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர் மிகவும் வித்தியாசமான காரியத்தை செய்துள்ளார். தற்போது அனைவர் மத்தியிலும் மிகவும் பிரபலமாகியுள்ள அந்த இளைஞர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஏழை மக்களை பறக்க வைப்பதற்காக இளைஞர் செய்த காரியம்! சூரரை போற்று சூர்யாவையே மனுஷன் தூக்கி சாப்பிட்டுட்டாரு!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அசம்கர் பகுதியை சேர்ந்தவர் சல்மான். இவர் கார்பெண்டராக வேலை செய்து வருகிறார். இவரது ஊரில் உள்ள மக்களால், அதிக கட்டணம் கொடுத்து விமானத்தில் பயணம் செய்ய முடியவில்லை. எனவே தனது டாடா நானோ (Tata Nano) காரை அவர் தற்போது ஹெலிகாப்டராக (Helicopter) மாற்றியுள்ளார். டாடா நானோ காரை ஹெலிகாப்டராக மாற்றுவதற்கு சல்மான் சுமார் 3 லட்ச ரூபாயை செலவு செய்துள்ளார்.

இந்த பணிகளை முடிப்பதற்கு அவர் சுமார் 4 மாதங்களை எடுத்து கொண்டுள்ளார். இந்த ஹெலிகாப்டர் கார் தற்போது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பலர் கூட்டம் கூட்டமாக வந்து சல்மானின் ஹெலிகாப்டரில் காரில் பயணம் செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் இங்கே குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. சல்மானின் ஹெலிகாப்டர் கார் பறக்காது. மற்ற கார்களை போலவே, சாலையில் மட்டுமே ஓட்ட முடியும்.

இருந்தாலும் விமானத்தில் பறப்பது போன்ற அனுபவம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக சல்மான் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார். எனவே சல்மானின் இந்த முயற்சியை தற்போது பலரும் மனதார பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து சல்மான் கூறுகையில், ''எனது கிராமமும், மாவட்டமும் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. நான் இந்த முயற்சியை செய்ததற்கு, இதுவும் ஒரு காரணம். அரசும், பெரி நிறுவனங்களும் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

எங்களின் பறக்கும் கனவுகளை நிஜமாக்க அவர்களின் உதவியை வேண்டுகிறோம். நிலம், நீர் மற்றும் ஆகாயம் என அனைத்திலும் இயக்க கூடிய வகையிலான நிஜ ஹெலிகாப்டரை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும் என்ற லட்சியம் எனக்கு உள்ளது'' என்றார். ஆனால் இந்தியாவில் டாடா நானோ கார் ஒன்று, ஹெலிகாப்டரை போன்று வடிவமைக்கப்பட்டிருப்பது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் டாடா நானோ காரை, ஹெலிகாப்டரை போல் வடிவமைத்திருந்தார்.

உலகம் முழுவதும் பறக்கும் கார்களை உருவாக்கும் முயற்சியில் பெரிய நிறுவனங்கள் பலவும் தற்போது ஈடுபட்டு வருகின்றன. இந்த சமயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய இந்திய இளைஞர்கள் இத்தகைய வித்தியாசமான முயற்சிகளை முன்னெடுப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரிய விஷயம்தான். பொருளாதார ரீதியிலான உதவிகளும், சரியான வழிகாட்டுதலும் கிடைத்தால் இந்திய இளைஞர்களால் மிகப்பெரிய அளவில் சாதிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கிடையே டாடா நானோ கார் தொடர்பான புதிய தகவல் ஒன்றும் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த ஆதிக்கத்தை அதிகரித்து கொள்வதற்காக, நானோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டாடா நானோ கார் எலெக்ட்ரிக் அவதாரத்தில் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்திய வாடிக்கையாளர்கள் பலரிடமும் ஏற்கனவே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Article Published On: Thursday, December 22, 2022, 10:09 [IST]
English summary
Tata nano helicopter car uttar pradesh carpenter
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+