எங்கள கேட்டீங்கனா டாடாவோட இந்த காரை கொஞ்சம்கூட தயங்காம வாங்கலாம்னு சொல்லுவோம்.. ஏன் என்பதற்கான காரணம் இதோ!

பொதுவாக ஓர் காரை பற்றி புகழ்ந்து பேசினால் அதை புரமோஷன் என்றே பலரும் நினைத்துக் கொள்வார்கள். ஆனால், இந்த பதிவு அப்படியானது அல்லது. ஓர் சமூக அக்கறையுடனேயே இந்த பதிவை நாங்கள் வெளியிட்டு இருக்கின்றோம். சாலை விபத்தால் இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

இதற்கு போக்குவரத்து விதிமீறல்கள் ஓர் முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், காரின் பாதுகாப்பு திறனற்ற தன்மை மற்றுமொரு மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. சோப்பு போன்ற கார்கள் விபத்தின்போது பயணிகளை காப்பாற்ற தவறிவிடுகின்றன. அதேவேளையில், என்ன மாதிரியான விபத்தாக இருந்தாலும் பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் திறன் கொண்ட கார்கள் சிலவும் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

Tata nexon crashes into truck

அவற்றில் ஒன்றே டாடாவின் தயாரிப்பான நெக்ஸான் ஆகும். இது ஓர் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல் ஆகும். அதாவது, விபத்தில் இருந்து பயணிகளை பாதுகாப்பதில் மிகவும் திறம்வாய்ந்த கார் மாடல் இது காட்சியளிக்கின்றது. இந்த தரத்தையே மீண்டும் ஓர் முறை நிரூபித்துக் காட்டியிருக்கின்றது, டாடா நெக்ஸான் எஸ்யூவி.

அதீத வேகத்தினால் கட்டுப்பாட்டை இழந்த டாடா நெக்ஸான் அதைவிட பலமடங்கு பெரிய உருவம் கொண்ட லாரி ஒன்றுடன் மோதியதாகக் கூறப்படுகின்றது. இதனை அந்த காரின் உரிமையாளரே யூட்யூப் சேனல் ஒன்றிற்கு தெரிவித்திருக்கின்றார். அத்துடன், விபத்தினால் கார் எத்தகைய சேதத்திற்கு ஆளாகிய என்கிற படங்களையும் வெளியிட்டிருக்கின்றனர்.

Tata nexon crashes

இந்த மிக மோசமான விபத்தினால் காரின் முன் பக்கம் முழுவது உருக்குலைந்து போயிருக்கின்றது. அதேவேளையில், காருக்குள் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றனர். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இரும்பு அரணாக இருந்து இந்த கார் பயணிகளை பாதுகாத்திருக்கின்றது.

இந்த கார் விபத்து சம்பவம் யமுனா விரைவுச் சாலையில் உள்ள மதுரா எனும் பகுதிலேயே அரங்கேறி இருக்கின்றது. மாபெரும் விபத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றியதன் காரணத்திற்காகவே காரின் உரிமையாளர் மற்றும் அதில் பயணித்த பயணிகள் அந்த காருக்கு நன்றிகளை தெரிவித்து இருக்கின்றனர்.

காரின் முன் பக்க கிரில், ஹெட்லைட், பம்பர், ரேடியேட்டர் மற்றும் குளிரூட்டும் கருவிகள் என அனைத்தும் முழுவதும் உருக்குலைந்த நிலையில் அந்த கார் காட்சியளிக்கின்றது. காருக்குள் இருந்தவர்களுக்கு மிக மோசமான நிலைமையே ஏற்பட்டு இருக்கும் என கூறும் அளவிற்கே அது கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கின்றது.

இருப்பினும் காரில் இருந்த பயணிகள் அனைவரும் ஆபத்தின்றி பாதுகாக்கப்பட்டு இருக்கின்றனர். இதனால்தான் அந்த காருக்கு அதன் உரிமையாளரும், உரிமையாளரின் உறவினர்களும் நன்றிகளைத் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இத்தகைய திறனைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காரை தாராளமாக தயக்கமின்றி வாங்கலாம் என நாங்கள் தலைப்பில் குறிப்பிட்டிருந்தோம்.

அதேவேளையில், இந்த கார் உங்களின் பொருளாதாரத்திற்கு ஏற்றதா மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யுமா என்பதையும் ஒரு முறை பார்த்துக் கொள்ளவும். டாடா மோட்டார்ஸ் இந்த காரை இந்தியாவில் ரூ. 8.15 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த விலையிலேயே மிக தராளமான பாதுகாப்பு அம்சங்களையும், நவீன தொழில்நுட்ப வசதிகளையும் டாடா, நெக்ஸானில் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ், இபிடி, ஐசோஃபிக்ஸ் சைல்டு இருக்கை ஆங்கரிங் பாயிண்டுகள், பார்க்கிங் சென்சார்கள், அவசரக கால மற்றும் பிரேக் டவுன் கால் அசிஸ்டன்ஸ் போன்ற மிக மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதேபோல், நவீன கால தொழில்நுட்ப வசதிகளையும் இந்த காரில் மிக தாராளமாக டாடா வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதி உடன் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டமும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அம்சங்கள் மட்டுமின்றி, 10.25 அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 2 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல், கூல்டு குளோவ் பாக்ஸ், ஃபேன்சி ஷிஃப்டர், ரியர் பகுதிக்கான ஏசி வெண்டுகள், இரண்டாம் தலைமுறை ஐஆர்ஏ இணைப்பு தொழில்நுட்பம் ஆகிய ஸ்பெஷல் மற்றும் பிரீமியம் அம்சங்களையும் இந்த காரில் வழங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 28, 2024, 5:00 [IST]
English summary
Tata nexon accident with truck passengers saved without injuries
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+