எந்த கண்களாலும் நம்ப முடியல.. கம்பீரமாக நின்ற மாருதி கார்.. கரப்பான் பூச்சிபோல குப்புற கவிழ்ந்த டாடா கார்..

இரும்புப் பெட்டகத்திற்கே சவால் விடுக்கும் அளவிற்கு அதிக பாதுகாப்பைத் தரக் கூடியதாக டாடா (Tata Motors) நிறுவனம் தயாரிக்கும் கார்கள் இருக்கின்றன. அப்பேற்பட்ட டாடா நிறுவன காரையே, மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று விபத்தில் கரப்பான் பூச்சியைப் போல கவிழ்த்து போட்டு இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த விபத்து சம்பவத்திற்கு பின்னர் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.

அதில் டாடா கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சிகளும், அதற்கு அருகாமலேயே முகத்தை முழுமையாக இழந்த நிலையில் ஓர் மாருதி கார் நிற்கும் காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதில் பலரையும் ஷாக்காக்கும் வகையில் இருப்பது டாடா கார் தலை கீழாக கவிழ்ந்து கிடந்ததுதான்.

Tata nexon and maruti ertiga crash

அதுவும் மாருதி சுஸுகியின் கார் மோதி இந்த நிலைமை அதற்கு வந்திருப்பது பேரதிர்ச்சியையே ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக பார்த்த யாராலும் நம்ப முடியாத நிகழ்வாகவே இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றது. டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) இந்த இரண்டே விபத்தில் சிக்கிய கார்கள் ஆகும்.

இந்த நெக்ஸான் என்ன அவ்ளோ ஸ்பெஷலானதா.. என அதை பற்றி அறியாத சிலர் கேட்கலாம். அத்தகையோருக்கான எங்களுடைய பதில், ஆம், அது மிகவும் ஸ்பெஷலான கார்-தான் என்பதே ஆகும். பாதுகாப்பு விஷயத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்ற கார் மாடலே இதுவாகும்.

ஆனால், மாருதி எர்டிகா பாதுகாப்பு ரேட்டிங் விஷயத்தில் டாடா நெக்ஸானைவிட மிகவும் பின் தங்கியே இருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்னர் கூட ஆப்பிரிக்கா நாட்டிற்கான மேட்-இன் இந்தியா எர்டிகாவை குளோபல் என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த சோதனையில் அக்கார் மாடல் ஒரே ஒரு ஸ்டார் ரேட்டிங்கையே பெற்றது.

இத்தகைய காருதான் இந்த விபத்தில் அதிக ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்ற நெக்ஸான் காரை கவிழ்த்து போட்டிருக்கின்றது. இதனால்-தான் பலரும் ஷாக்கில் உறைந்திருக்கின்றனற். இதை எப்படி எர்டிகா செய்தது என்பது பற்றிய துள்ளியமான தகவல் கிடைக்கவில்லை. நெக்ஸானை அது பக்கவாட்டில் இருந்து வேகமாக மோதியிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

இவ்வாறு மோதினால் மட்டுமே வேகத்தின் காரணமாக ஓர் கார் கவிழ நேரிடும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல இன்னும் சில காரணங்களாலும் கார்கள் கவிழ நேரிடுகின்றன. மேலும், இந்த விபத்தில் டாடா நெக்ஸான் கவிழ்ந்துவிட்டதால் அது பாதுகாப்பு தரமற்ற கார் என்று சொல்லிவிட முடியாது. இது ஓர் அதிக பாதுகாப்பான கார் மாடலே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிக மிக மோசமான விபத்துகளில்கூட டாடா நெக்ஸான் கார் உயிர்களைக் காப்பாற்றியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு சான்றாக இப்போதும் பல வீடியோக்கள் இணையத்தில் உள்ளன. இதனாலேயே டாடா நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக நெக்ஸான் உள்ளது. இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றாகவும் நெக்ஸான் இருப்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 13, 2025, 23:17 [IST]
English summary
Tata nexon and maruti ertiga collision understanding safety ratings and incident details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+