அவ்வளவு பெரிய பேருந்து மோதியும் ஒண்ணும் ஆகல!! டாடா தயாரிப்பு என்றால் சும்மாவா!

டாடா நெக்ஸான் (Tata Nexon) கார் ஒன்று பேருந்தின் மோதலுக்கு உள்ளான போதிலும் மிகவும் குறைவாகவே சேதத்திற்கு உள்ளாகி இருப்பது பலரதை கவனத்தை ஈர்த்துள்ளது. நெக்ஸான் காரின் பாதுகாப்பு தரத்தை வெளிக்காட்டுவதாக விளங்கும் இந்த விபத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸின் கார்கள் அவற்றின் பாதுகாப்பு தரத்தினால் பிரபலமானவை ஆக விளங்குகின்றன. இதன் மூலம், க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் சில டாடா கார்கள் முழு 5 நட்சத்திர மதிப்பெண்களை பெற்றுள்ளன. அத்தகைய டாடா கார்களுள் ஒன்றுதான் நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி ஆகும்.

nexon car accidents with buses

விபத்தில் இருந்து நெக்ஸான் கார்கள் பயணிகளின் உயிர்களை காப்பாற்றிய சம்பவங்கள் பலவற்றை இதற்கு முன் பார்த்துள்ளோம். அந்த வரிசையில், சமீபத்தில் பேருந்தின் மோதலுக்கு உள்ளான நெக்ஸான் கார் பெரியதாக எந்தவொரு சேதாரமும் இன்றி கல்லு போல் நின்றுள்ளது. இந்த விபத்து தொடர்பாக யுடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே செய்தியின் இறுதியில் காணலாம்.

பிரதீக் சிங் என்பவரது யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், இரு வேறு நெக்ஸான் கார் விபத்து சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன. இதில் ஒன்று, குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற விபத்து ஆகும். இந்த விபத்தில் சிக்கியிருக்கும் கார் டாடா நெக்ஸான் இவி என்ற எலக்ட்ரிக் கார் ஆகும். இந்த விபத்தில் வேகமாக வந்த பேருந்து சாலையில் சென்றுக் கொண்டிருந்த டாடா நெக்ஸான் இவி மீது மோதியுள்ளது.

nexon car accidents with buses

பேருந்து சென்றுக் கொண்டிருந்த சாலைக்கு குறுக்கே சென்ற மற்றொரு சாலையில் இந்த நெக்ஸான் இவி கார் வந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார் ஓட்டுனர் மீது எந்த தவறும் இல்லை. சாலையை குறுக்காக சரியான நேரத்தில் சரியான முறையில்தான் கடந்துள்ளார். ஆனால், பேருந்து ஓட்டுனரோ அதிவேகத்தில் வந்ததாக கூறப்படுகிறது.

அதிவேகமாக வந்ததினாலே குறுக்கே கார் ஒன்று கடப்பதை கண்ட போதிலும் பேருந்து ஓட்டுனரால் சரியான நேரத்தில் பேருந்தை நிறுத்த முடியவில்லை. இந்த மோதலில் நெக்ஸான் இவி காரின் பம்பர், ஃபெண்டர் மற்றும் கதவுகள் சேதமடைந்தன. அத்துடன், காரின் முன்பக்கத்தில் இடது பக்க சக்கரம் சேதமடைந்து இருப்பதையும் வீடியோவில் காணலாம்.

nexon car accidents with buses

மற்றொரு நெக்ஸான் கார் விபத்து சம்பவம், கேரள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்த போதிய விபரங்கள் இல்லை. இந்த விபத்திலும், நெக்ஸான் கார் மீது அரசு பேருந்து மோதியுள்ளது. ஆனால், இந்த விபத்தில் சிக்கி இருப்பது நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார் கிடையாது. பெட்ரோல்/ டீசல் என்ஜினை கொண்ட டாடா நெக்ஸான் கார் ஆகும்.

இந்த விபத்தில், பேருந்து நெக்ஸான் காரின் பின்பக்கத்தில் மோதியுள்ளது. இந்த மோதலினால், ஏர்பேக் வெளியே வந்த போதிலும், காருக்கு பெரியதாக சேதாரம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரின் பின்பக்கத்தில் பேருந்து மோதியதால், அந்த பகுதியில் மட்டுமே பலத்த சேதாரம் ஏற்பட்டுள்ளது. பின்பக்க டெயில் லைட்களும் சேதமடைந்துள்ளன.

nexon car accidents with buses

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரு விபத்துகளும் எவ்வாறு நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. குறிப்பாக, அகமதாபாத்தில் நடைபெற்ற விபத்தில் நெக்ஸான் கார் மீது பலமாக பேருந்து மோதியுள்ளது. இருப்பினும், இந்த இரு விபத்துகளிலும் உயிரிழப்புகள் எதுவும் நல்லவேளையாக ஏற்படவில்லை. இதற்கு நாம் டாடா நெக்ஸான் கார்களின் வலிமையான உடல் கட்டமைப்புக்கு தான் நன்றி சொல்லியாக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 10, 2023, 22:46 [IST]
English summary
Tata nexon car accidents with buses check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X