தலைகீழாக கவிழ்ந்த டாடா கார்! தூசியை தட்டி விட்டு வெளியே வந்த பயணிகள்! எமன்லாம் இனி வேற வேலைதான் பாத்துக்கணும்!

டாடா நெக்ஸான் கார் ஒன்று விபத்தில் சிக்கியது. அந்த காரின் பில்டு குவாலிட்டி காரணமாக காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்த விரிவான தகவல்களை காணலாம்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் தங்களுக்கு சொந்தமான வெள்ளை நிற டாடா நெக்ஸான் காரில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் வேகமாக பயணம் செய்து கொண்டிருந்தனர். கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு திருப்பம் வந்தது. அந்த திருப்பத்தில் காரை ஓட்டிய டிரைவருக்கு காரை கண்டரோல் செய்ய முடியவில்லை. இதனால் கார் ரோட்டின் அருகே இருந்த தடுப்பு கம்பியில் மோதி விபத்தில் சிக்கியது.

காரை விபத்தில் சிக்கிய போது கார் ரோட்டிலிருந்து கீழே இறங்கி 2-3 முறை உருண்டு தலைகீழாக போய் விழுந்துள்ளது. இதை விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் உடனடியாக பதறிபோய் காரின் உள்ளே இருந்தவர்களுக்கு என்ன ஆனது? என சென்று பார்த்தனர். கார் தலை கீழாக கிடந்தது, காரின் உள்ளே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இருந்தனர். 4 பேரும் சுய நினைவுகளுடன் லேசாக காயங்களுடன் உயிர் தப்பியிருந்தனர்.

தலைகீழாக கவிழ்ந்த டாடா கார்! தூசியை தட்டி விட்டு வெளியே வந்த பயணிகள்! எமன்லாம் இனி வேற வேலைதான் பாத்துக்கணும்!

உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து 4 பேரையும் பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விபத்து நடந்த இடத்தை பார்க்கும் சாலையில்அருகே பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட கம்பியையும் இடித்துக் கொண்டு கார் விபத்தில் சிக்கியிருந்தது. ஆனால் விபத்தின் இம்பேக்ட் பெரும் அளவிற்கு காருக்குள் இருந்தவர்களுக்கு செல்லவில்லை.

கார் விபத்தில்சிக்கி தலைகீழாக கடக்கும் போது காரின் பில்லர்கள் பாதுகாப்பாகவே இருந்தன. பொதுவாக விபத்துக்களில் கார் தலைகீழாக இருந்தால் காரின் பில்லர்களுக்கு ஏற்படும் பாதிப்பைபொருத்து தான் காரின் உள்ள இருப்பவர்களின் உயிர் இருக்கும். காரின் பில்லர் பாதிக்கப்பட்டிருந்தால் உள்ளே இருந்தவர்களுக்கு பயங்கரமான காயம் ஏற்பட்டிருக்கும் என எடுத்துக்கொள்ளலாம். இந்த விபத்தில் பில்லர்களில் எந்த பாதிப்புகம் இல்லாததால் உள்ளே இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயர் தப்பினர்.

மேலும் காரின் முன்பக்க சீட்களில் இருந்த ஏர்பேக்கள் வெளியாகி காரில் முன்னே அமர்ந்திருந்தவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. காரின் உள்ளே மற்றவர்கள் சீட் பெல்ட் அணிந்திருந்தார்களா என்ற விபரம் தெரியவில்லை. டாடா நெக்ஸான் காரின் ஸ்டிாராங்கான பில்டு குவாலிட்டி தான் கார் இவ்வளவு பெரிய விபத்தில் சிக்கியும் உள்ள இருந்தவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளது.

டாடா நெக்ஸான் கார் கடந்த 2016ம் ஆண்டு முன்முறையாக க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது. பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் டெஸ்ட் செய்யப்பட்ட பின்பு 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுவிட்டது. 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற முதல் இந்திய கார் இது தான். இந்த டெஸ்டில் மொத்தம் 17 மதிப்பெண்களுக்கு டாடா நெக்ஸான் கார் 16.06 மதிப்பெண்களை பெற்றது. இந்தியாவில் தயாரான வேறு எந்த காரும் இந்த அளவிற்கு மதிப்பெண்களை பெறவில்லை.

முதன்முதலாக 4 ஸ்டார் ரேட்டிங்கை இந்த கார் கடந்த 2016ம் ஆண்டு எந்த நிறுவனத்திடம் வாங்கியதோ அதே நிறுவனத்திடம் தான் 2018ம் ஆண்டு 5 ஸ்டார் ரேட்டிங்கையும் வாங்கியது. இந்த 2 ஆண்டுகளில் டாடா நிறுவனம் நெக்ஸான் காரின் பாடி ஷெல்லையோ, பிளாட்ஃபார்மையோ அல்லது வடிவமைப்பையோ மாற்றவில்லை அந்நிறவனம் 2 விஷயங்களை தான் மாற்றியது. முழு ஏபிஎஸ் வெர்ஷனை ஸ்டார்ண்டர்டு செய்தது. பின்னர் டிரைவர் மற்றும் பாசஞ்சர் சீட்பெல்ட் ரிமைண்டரை பொருத்தியது. இந்த முறை அந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுவிட்டது.

சரி இப்பொழுது இந்த விபத்திற்கான காரணம் என்ன வென்று முதலில் பார்க்கலாம். இந்த விபத்திற்கான முக்கியமான காரணம் வேகமாக காரில் பயணித்தது. விபத்தில் சிக்கியது எஸ்யூவி கார். எஸ்யூவி கார்களின் வடிவமைப்பை பொருத்தவரை உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ், உயரமான டிசைனை கொண்ட கார். இதனால் காரின் சென்டர் ஆஃப் கிராவிட்டி உயரமாக இருக்கும். இதனால் காரை கையாள்வது சற்று சிரமாக இருக்கும்.

காரில் உள்ள சாஃப்டர் சஸ்பென்சன் செட்டப் மறஅறம் உயரமாக சென்டர் ஆஃப் கிராவிட்டி எஸ்யூவி கார்களை கையாள்வதை சிரமமாக்கி விடும். அதனால் வேகமாக செல்லும் போது காரை திருப்புவது சிரமமாக இருக்கும். வேகமாக சிறிய கார்களை போல இந்த காரை திருப்பி விட முடியாது.

அதிக வேகத்தில் செல்லும் போது காரின் லேனை மாற்றவது அல்லது திருப்புவது என்பது கார் கட்டுப்பாட்டை இழக்கும் நிலைமைக்கு கொண்டு சென்று விடும். வேகமாக செல்லும் போது சிறிய திருப்பம் கூட காருக்கு அதிக டிகிரி பாடிரோலை கொடுக்கும். இந்த விஷயம் தான் இந்த விபத்திலும் நடந்துள்ளது. அதனால் எஸ்யூவி கார் வைத்திருப்பவர்கள் கவனமாக இருங்கள். அதிக வேகத்தில் எஸ்யூவி காரில் பயணிக்க வேண்டாம். செடான் காரை போல எஸ்யூவி கார் கிடையாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

Article Published On: Monday, November 7, 2022, 19:02 [IST]
English summary
Tata nexon car met with accident in maharashtra build quality saved 4 people
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+