விபத்தில் பல முறை உருண்ட டாடா நெக்ஸான் கார் ; காரில் இருந்தவருக்கு கீறல் கூட இல்லையாம்

ஹரியானா மாநிலத்தில் நடந்த விபத்தில் சிக்கி 2-3 முறை உருண்டா டாடா நெக்ஸான் காரில் இருந்தவர் ஒரு காயமும் இல்லாமல் உயிர் தப்பியுள்ளார். உயிர் தப்பியவர் டாடா நிறுவனத்திற்கு நன்றியும் செலுத்தியுள்ளார்.

By Balasubramanian

டில்லி - அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டாடா நெக்ஸான் காரின் பின்புறத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கார் 2-3 முறை உருண்டு விபத்திற்குள்ளானது.

விபத்தில் பல முறை உருண்ட டாடா நெக்ஸான் கார் ; காரில் இருந்தவருக்கு கீறல் கூட இல்லையாம்

இந்த விபத்தில் காரின் உரிமையாளர் மட்டுமே பயணம் செய்தார். அவருக்கும் எந்த விதமான அடியும் படாமல் உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்தின் போது கார் உரிமையாளர் டிரைவர் சீட்டில் சீட் பெல்டுடன் அமர்ந்துள்ளார். அவர் தலையில் டர்பன் அணிந்துள்ளார் அது அவரை தலையில் ஏற்படும் காயத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது.

விபத்தில் பல முறை உருண்ட டாடா நெக்ஸான் கார் ; காரில் இருந்தவருக்கு கீறல் கூட இல்லையாம்

இதையடுத்து காரின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். விபத்திற்குள்ளான காரை பார்க்கும் போது கனரக வாகனம் மோதியதாகவே தெரிகிறது. மேலும் காரின் கதவுகள் திறக்கும் நிலையில் இல்லை. காரின் ஏர்பேக்குகளும் சரியான வேலை செய்துள்ளது. இதை நீங்கள் படத்தில் காணலாம்.

விபத்தில் பல முறை உருண்ட டாடா நெக்ஸான் கார் ; காரில் இருந்தவருக்கு கீறல் கூட இல்லையாம்

இது குறித்து விபத்தித்தில் சிக்கியவர் கூறும்போது :" ஹரியானா மாநிலத்தில் எனது கார் விபத்தில் சிக்கியது. அப்பொழுது காரின் நான் மட்டும் தான் சென்று கொண்டிருந்தேன். நான் விபத்தில் உயிர் பிழைத்ததற்கு டாடா நெக்ஸானின் பாடி பில்ட் தான் காரணம்.

விபத்தில் பல முறை உருண்ட டாடா நெக்ஸான் கார் ; காரில் இருந்தவருக்கு கீறல் கூட இல்லையாம்

நான் விபத்தில் ஒரு காயமும் இல்லாமல் உயிர் பிழைத்ததை ஒரு அதிசயமாகவே கருதுகிறேன். விபத்து குறித்து டாடா டீலரிடம் கூறியபோது அவர் அடுத்த ஆறு நாட்களில் எனக்கு புதிய டாடா நெக்ஸான் காரையே வழங்கிவிட்டார். " இவ்வாறு கூறினார்.

விபத்தில் பல முறை உருண்ட டாடா நெக்ஸான் கார் ; காரில் இருந்தவருக்கு கீறல் கூட இல்லையாம்

கார் விபத்தில் சிக்கி 2-3 முறை உருண்டபோதும் காரில் இருந்தவருக்கு எதுவும் ஆகவில்லை என்பது காரின் கட்டுமான உறுதியை காட்டுகிறது. காரின் கட்டுமானத்தில் உறுதியில்லை என்றால் அதன் விளைவு கார் விபத்தில் சிக்கும் போது காரில் இருப்பவர்களை அதிகம் பாதிக்கும். கட்டுமான உறுதியில்லாத கார் விபத்தில் சிக்கி காரில் இருந்தவர்கள் இறக்கும் வகையிலான விபத்துக்கள் கூட நிகழ்ந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Tata Nexon compact SUV rolls multiple times in an accident; Owner thanks Tata build quality. Read in Tamil
Story first published: Friday, March 30, 2018, 13:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X