Just In
- 7 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
குடியரசு தின விழா அணிவகுப்பில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் குடியரசு தினம் நேற்று (ஜனவரி 26) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற இதற்கான விழாவில், இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். விவசாயிகள் போராட்டம், கொரோனா அச்சுறுத்தல் ஆகிய பிரச்னைகளுக்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் இந்த விழாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. ஆம், குடியரசு தின விழாவின் கண்கவர் அணிவகுப்பில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் பங்கேற்றுள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அணிவகுப்பில் பங்கேற்றதை கீழே உள்ள வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் வாகனத்தில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வைக்கப்பட்டிருந்தது. 'உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்' என்ற மத்திய அரசின் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அந்த திட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி பவனி வந்தது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு ஆகும். இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் காராக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி திகழ்கிறது.

கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஏற்கனவே விற்பனையில் உள்ள ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் சவாலான விலையில், நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் விற்பனைக்கு வந்த காரணத்தால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அத்துடன் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நேரடி போட்டியாக எந்த மாடலும் இல்லை.

ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனையில் சவால் அளித்தாலும், அவை நேரடி போட்டி கிடையாது. ஆனால் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வந்த பின், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

டாடா நிறுவனத்தை போல், மஹிந்திரா நிறுவனமும் தனது ஐசி இன்ஜின் எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது கேமரா கண்களில் சிக்கியுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை தூண்டியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி நடப்பாண்டு விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களை களமிறக்கும் பணிகளில் தற்போது மஹிந்திரா நிறுவனம் தீவிரமாக உள்ளது. இந்த 2 புதிய மாடல்களுக்கு பிறகு எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.