ஸ்டார்ட் செய்த உரிமையாளர்... பிறந்த நாள் வாழ்த்து சொன்ன டாடா கார்... எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்...

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், அதன் உரிமையாளருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி, மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்டார்ட் செய்த உரிமையாளர்... பிறந்த நாள் வாழ்த்து சொன்ன டாடா கார்... எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்...

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் நடப்பாண்டு தொடக்கத்தில், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் வழங்கிய அமோக வரவேற்பின் காரணமாக, அதிகம் விற்பனையாகும் மின்சார கார்களின் பட்டியலில் வேகமாக முதலிடத்திற்கு சென்று விட்டது. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்கள் இன்னும் பெரிய அளவில் பிரபலமடையவில்லை.

ஸ்டார்ட் செய்த உரிமையாளர்... பிறந்த நாள் வாழ்த்து சொன்ன டாடா கார்... எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்...

சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன. இருந்தாலும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. அனேகமாக இந்திய வாடிக்கையாளர்கள் ஒரு எலெக்ட்ரிக் காரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்? என்பதை டாடா கண்டறிந்து விட்டது போல் தெரிகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ஸ்டார்ட் செய்த உரிமையாளர்... பிறந்த நாள் வாழ்த்து சொன்ன டாடா கார்... எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்...

அதற்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு காரை வழங்குவதுதான், இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி தற்போது சந்தித்து வரும் வெற்றிக்கு காரணமாக இருக்க கூடும். இப்படிப்பட்ட சூழலில், உரிமையாளர் சற்றும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் ஒன்றை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வழங்கியுள்ளது.

ஸ்டார்ட் செய்த உரிமையாளர்... பிறந்த நாள் வாழ்த்து சொன்ன டாடா கார்... எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்...

சிவா சாய் என் என்பவர் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் சிவா சாய் என் சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்த்து, அவரது காரிடம் இருந்து கிடைத்துள்ளது. ஆம், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் தனது உரிமையாளரை, அவரது பிறந்த நாளன்று வாழ்த்தியுள்ளது.

ஸ்டார்ட் செய்த உரிமையாளர்... பிறந்த நாள் வாழ்த்து சொன்ன டாடா கார்... எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்...

அவரது பிறந்த நாளின்போது, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பலூன் மற்றும் கேக்குகள் உடன் ஆங்கிலத்தில் 'Happy Birthday' என்ற மெசேஜை காட்டியுள்ளது. காலையில் காரை ஸ்டார்ட் செய்யும்போது கிடைத்த சிறப்பு வாய்ந்த இந்த வாழ்த்தால், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் உரிமையாளர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி விட்டார்.

ஸ்டார்ட் செய்த உரிமையாளர்... பிறந்த நாள் வாழ்த்து சொன்ன டாடா கார்... எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்...

காரை வாங்கிய நேரத்தில் செய்யப்பட்ட கேஒய்சி-ஐ (KYC), டாடா நிறுவனத்தை சேர்ந்த யாரோ ஒருவர், டெலிமேட்டிக்ஸ் அமைப்புடன் (Telematics System) ஒருங்கிணைத்திருக்கலாம் என நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் உரிமையாளர் நம்புகிறார். இதன் மூலம் அவரது பிறந்த நாளின்போது கார் வாழ்த்து மெசேஜை காட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஸ்டார்ட் செய்த உரிமையாளர்... பிறந்த நாள் வாழ்த்து சொன்ன டாடா கார்... எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்...

இதுகுறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை. இதன் மூலம் டாடா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதோடு, அவர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து கொள்கிறது.

ஸ்டார்ட் செய்த உரிமையாளர்... பிறந்த நாள் வாழ்த்து சொன்ன டாடா கார்... எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்...

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை பற்றி குறிப்பிட வேண்டுமானால், தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் அதற்கு நேர் எதிர் போட்டியாக எந்த காரும் இல்லை. இருந்தாலும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய மாடல்களுக்கு, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனையில் சவால் அளித்து வருகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tata Nexon Electric SUV Wishing Its Owner A Happy Birthday - Here Is How. Read in Tamil
Story first published: Wednesday, November 11, 2020, 19:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X