ரன்னிங்ல ஆக்ஸலரேட்டர் கையோட வந்துருச்சு! அந்த நிறுவனத்தின் காரா இது! நம்ப வெச்சு கழுத்தை அறுத்துட்டாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV). தற்போதைய நிலையில் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக டாடா நெக்ஸான் இவி இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொண்டிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில், விலை (Price), ரேஞ்ச் (Range) மற்றும் வசதிகள் (Features) போன்றவை மிகவும் முக்கியமானவை ஆகும். இப்படிப்பட்ட சூழலில், டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் மிகப்பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது.

சாலையில் ஓடி கொண்டிருந்தபோதே ஆக்ஸலரேட்டர் பெடல் (Accelerator Pedal) திடீரென உடைந்திருப்பதுதான் இந்த சர்ச்சைக்கு காரணம். ஐதராபாத் நகரை சேர்ந்த அங்கிட் சோந்தி என்ற டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் உரிமையாளர்தான், இந்த குற்றச்சாட்டை முன் வைத்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆனால் ஆக்ஸலரேட்டர் பெடல் திடீரென உடைந்திருந்தாலும் கூட, அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இந்த சம்பவம் நடைபெற்றபோது, கார் அதிவேகத்தில் ஓட்டப்பட்டிருந்தால், பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கலாம். இது தொடர்பாக சமூக வலை தளத்தில், அங்கிட் சோந்தி எழுதியிருப்பது பின்வருமாறு:

''மக்களே எச்சரிக்கையாக இருங்கள். எனது டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை ஓட்டி கொண்டிருந்தபோதே, ஆக்ஸலரேட்டர் பெடல் உடைந்து விட்டது. இது 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய கார் என டாடா கூறுகிறது. ஆனால் அவர்கள் கார்களை எப்போதாவது பரிசோதிக்கிறார்களா?'' என அங்கிட் சோந்தி எழுதியுள்ளார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களை மக்கள் விரும்பி வாங்குவதற்கு முக்கியமான காரணமே பாதுகாப்புதான். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் பல்வேறு கார்கள், குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில், 5 ஸ்டார் மற்றும் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்குகளை வாங்கியுள்ளன.
அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தின் கார் மீது, பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 14.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 17.19 லட்ச ரூபாயாக உள்ளது.
இது டாடா நெக்ஸான் இவி ப்ரைம் (Prime) மாடலின் விலையாகும். இதைக்காட்டிலும் மேம்பட்ட மேக்ஸ் (Max) என்ற மாடலையும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 16.49 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 19.54 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தரமான தயாரிப்பை வழங்க வேண்டிய பொறுப்பு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு உள்ளது. கார் ஓடி கொண்டிருக்கும்போது ஆக்ஸலரேட்டர் பெடல் உடைவது சாதாரண பிரச்னை அல்ல. இது மிகவும் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு பிரச்னை.


Click it and Unblock the Notifications








