Tata Nexon EV வேண்டவே வேண்டாம்னு தலை தெறிக்க ஓடும் வாடிக்கையாளர்கள்! டாடாவோட மானத்தையே வாங்கிருச்சு!

இந்திய கார் சந்தையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) திகழ்ந்து வருகிறது. பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel), சிஎன்ஜி (CNG) மற்றும் எலெக்ட்ரிக் (Electric) என பல்வேறு வகையான கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது.

இதில் எலெக்ட்ரிக் கார் சந்தையை பொறுத்தவரையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் தற்போது முதலிடத்தில் உள்ளது. டாடா மோட்டார்ஸ் அளவிற்கு, வேறு எந்த நிறுவனத்தாலும் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய முடியவில்லை. தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் இவி-தான் (Tata Nexon EV) இந்தியாவில் அதிகம் விற்பனையாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரக கார் ஆகும்.

Tata Nexon EV Fire

ஆனால் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்கள் தொடர்ச்சியாக தீப்பிடித்து வரும் சம்பவங்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக கடந்த 2022ம் ஆண்டு மும்பை நகரில், ஹோட்டல் ஒன்றுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் தீப்பற்றி எரிந்தது.

இந்த சூழலில், புனே நகரில் தற்போது மீண்டும் ஒரு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் தீக்கிரையாகியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்து சம்பவத்தில், காரில் இருந்த பயணிகள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பானெட்டிற்கு அடியில்தான் முதலில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது.

எனவே இந்த தீ விபத்திற்கு பேட்டரி காரணமில்லை என தெரிகிறது. ஏனெனில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் ஃப்ளோர், அதாவது அடிப்பகுதியில்தான், பேட்டரி இடம்பெற்றுள்ளது. இங்கு தீப்பற்றியிருந்தால், ஒட்டுமொத்த காரும் எரிந்து சாம்பலாகி இருக்கும். ஆனால் பானெட்டிற்கு அடியில் தீப்பற்றியதால், முன் பகுதி மட்டுமே கடுமையாக சேதமடைந்துள்ளது.

எனவே பானெட்டிற்கு அடியில் உள்ள பாகங்களில் ஏதாவது ஒன்றுதான் இந்த தீ விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இது தொடர்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

எனினும் பானெட்டிற்கு அடியில் உள்ள ஒயர்களை எலிகள் கடித்ததாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஒயர்கள் சேதமடைந்ததாலோ தீப்பற்றியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர தரமில்லாத ஆஃப்டர் மார்கெட் ஆக்ஸஸெரீஸ்கள் ஏதாவது பயன்படுத்தப்பட்ட காரணத்தால் கூட தீப்பற்றியிருக்கலாம். இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உரிய விசாரணை நடத்தி, தீ விபத்திற்கான காரணத்தை விரைவில் அறிவிக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

தற்போது தீ விபத்தில் சிக்கியுள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வாங்கப்பட்டு வெறும் 9 மாதங்கள் மட்டுமே ஆவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குள்ளாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் தீப்பற்றியுள்ள சம்பவம், வாடிக்கையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

இந்த சம்பவம் எதிரொலியாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை வாங்கும் முடிவில் இருந்து வாடிக்கையாளர்கள் பலர் பின் வாங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் நேரடி போட்டி மாடலான மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை (Mahindra XUV400 EV) வாங்க பலரும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பற்றும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டே வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) தொடர்ச்சியாக தீப்பற்றிய சம்பவங்கள் உங்களுக்கு நினைவிருக்கலாம். இது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் என்பதால், எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 18, 2023, 15:43 [IST]
English summary
Tata nexon ev fire video pune all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+