கடவுள் மாதிரி சரியான நேரத்தில் வந்தார்! பெட்ரோல், டீசல் கார்களில் இதை எல்லாம் நெனைச்சி பார்க்கவே முடியாது!

எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் தற்போதைக்கு உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால், நாடு முழுவதும் இவி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் இல்லாதது ஆகும்.

இந்தியாவில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளை வழங்கும் பணிகளில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருகின்றன. இருப்பினும், பெட்ரோல் பங்குகளை (Petrol Bunk) போன்று இவி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் நாடு முழுவதும் கொண்டுவரப்படுவதற்கு இன்னும் சில காலம் ஆகும். இதனாலேயே எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களது கார்களை எளிமையாக சார்ஜ் செய்துக் கொள்ள மற்றொரு வழியை வழங்குகின்றன.

rescued by curvv ev owner

அதுதான், வைகல்-டூ-லோடு (V2L) வசதி ஆகும். இதன் மூலமாக, ஒரு எலக்ட்ரிக் வாகனத்தில் இருந்து இன்னொரு எலக்ட்ரிக் வாகனத்திற்கு பேட்டரி சார்ஜை பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம். நாம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய மொபைல் போனில் கூட இவ்வாறான ஒரு வசதி வராத நிலையில், எலக்ட்ரிக் கார்களில் இப்படியொரு வசதியை வழங்கி வருகின்றனர்.

வைகல்-டூ-லோடு வசதி அவசர காலங்களில் எந்த அளவிற்கு உதவியாக இருக்கும் என்பதை காட்டும் வகையில் இங்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. ராகேஷ் கஸ்வான் என்பவர் தனது டாடா கர்வ் இவி (Tata Curvv EV) எலக்ட்ரிக் காரில் நெடுஞ்சாலை ஒன்றில் சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Nexon EV Max) எலக்ட்ரிக் கார் ஒன்று சாலையின் ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்துள்ளது.

rescued by curvv ev owner

இதை பார்த்ததும், அந்த நெக்ஸான் இவி மேக்ஸ் எலக்ட்ரிக் கார் சார்ஜ் இல்லாமல் நின்றுள்ளது என்பதை ராகேஷ் கஸ்வான் புரிந்து கொண்டார். இதனையடுத்து, அந்த நெக்ஸான் இவி மேக்ஸ் எலக்ட்ரிக் கார் டிரைவருக்கு உதவி செய்ய ராகேஷ் கஸ்வான் முடிவு செய்தார். அதன்படி, தனது கர்வ் இவி எலக்ட்ரிக் காரில் உள்ள வைகல்-டூ-லோடு வசதியை பயன்படுத்தி அந்த நெக்ஸான் இவி கார் டிரைவருக்கு உதவ முன்வந்தார்.

சரியான நேரத்தில் ராகேஷ் கஸ்வான் மட்டும் வரவில்லை என்றால், பெரிய சிக்கலாகி இருக்கும் என நெக்ஸான் இவி மேக்ஸ் கார் டிரைவர் தெரிவித்துள்ளார். ஏனெனில், கார் சார்ஜ் இல்லாமல் நின்று போன இடத்தில் இருந்து சார்ஜிங் நிலையம் ஆனது 5இல் 6கிமீ தொலைவில் உள்ளது. இந்த 5- 6கிமீ தொலைவிற்கு நெக்ஸான் இவி மேக்ஸ் கார் இயங்கும் அளவிற்கு கர்வ் இவி எலக்ட்ரிக் காரில் இருந்து சார்ஜ் ஏற்றப்பட்டது.

கர்வ் இவி எலக்ட்ரிக் காரில் முன்பக்கத்தில் சார்ஜிங் பாயிண்ட் வழங்கப்படும் நிலையில், நெக்ஸான் இவி மேக்ஸ் எலக்ட்ரிக் காரில் பின் சக்கரத்திற்கு மேலே வழங்கப்படுகிறது. ஏனெனில், இந்த நிகழ்வில் சார்ஜ் இல்லாமல் நின்று போன நெக்ஸான் இவி மேக்ஸ் ஆனது ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடுக்கு முன்பு இருந்த கார் ஆகும். தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவி மேக்ஸ் எலக்ட்ரிக் கார் தோற்றத்தில் மெருக்கேற்றப்பட்டதாக உள்ளது.

ஏற்கனவே கூறியதுபோல், வைகல்-டூ-லோடு வசதியானது இவ்வாறான அவசர கால சூழலில் மிகவும் உதவிக்கரமாக இருக்கும். இந்த வசதி ஆனது இன்றைய கால மாடர்ன் எலக்ட்ரிக் கார்கள் அனைத்திலும் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக, உங்களது எலக்ட்ரிக் காரை சார்ஜிங் நிலையத்திற்கு கொண்டுப்போய் தான் சார்ஜ் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

வேறொரு எலக்ட்ரிக் வாகனத்தில் இருந்தே சார்ஜை பெறலாம். இன்னும் சொல்லப்போனால், சரியான அடாப்டர் (Adapter) இருந்தால் உங்களால் உங்களது எலக்ட்ரிக் காரின் பேட்டரியின் சார்ஜை பயன்படுத்தி தொலைக்காட்சிகள், இண்டக்‌ஷன் ஸ்டவ், காஃபி மெஷின்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்களையும் இயங்க வைக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல், டீசல் கார்களில் இவ்வாறு செய்வது என்பது முற்றிலும் கடினமான காரியம் ஆகும். கார் ஒன்றில் இருந்து பெட்ரோல் அல்லது டீசலை வெளியே எடுக்கவே நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரின் உதவி வேண்டும். அவரும் வந்த உடனே, உடனடியாக பெட்ரோல் (அ) டீசலை எடுத்து தந்துவிட மாட்டார்; சில வேலைகள் உள்ளன. ஆனால், எலக்ட்ரிக் கார்களில் இந்த பிரச்சனை எல்லாம் இல்லை என்பதை இந்த நிகழ்வை பார்த்தாலே தெரிந்திருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 25, 2025, 11:27 [IST]
English summary
Tata nexon ev max electric car rescued by curvv ev owner by using vehicle to load feature
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+