காருனா இப்படி இருக்கனும்.. விபத்தை சந்தித்த மாதிரியே தெரியல.. கம்பீரமாக நின்னு மெய்சிலிர்க்க வச்சிருச்சு!!

விபத்தைச் சந்தித்து இருக்கும் இரண்டு கார்களும் இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல் என்று கூறலாம். குறிப்பாக, டாடா (Tata)-வின் தயாரிப்பு பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக இப்போதும் இருக்கின்றது. அது வேறு ஒன்றுமில்லை நெக்ஸான் இவி (Nexon EV) கார் மாடலே அது ஆகும். இந்த கார் மாடலின் பின்னாலேயே சிவப்பு நிற காரொன்று வேகமாக வந்து மோதி இருக்கின்றது. இந்த மோதலில் அந்த சிவப்பு நிற காரின் முன் பக்கம் மிகப் பெரிய அளவில் சேதமடைந்திருக்கின்றது.

சொல்லப்போனால் அது தற்போது முகத்தை முழுமையாக இழந்து நிற்கின்றது. ஹெட்லைட், பம்பர், பான்னெட் என அனைத்தும் விபத்தினால் கடுமையாக சேதமடைந்திருக்கின்றன. முன்பக்க கதவுகள் வரை பாதிப்பு நீண்டிருக்கின்றது. ஆனால், டாடா நெக்ஸான் இவி-க்கோ பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. சிறு சிறு சிராய்ப்புகளை மட்டுமே சந்தித்து இருக்கின்றது.

Volkswagen polo and tata nexon collision

இது டாடா காரின் உறுதியையும், தரத்தையும் வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. முகத்தை இழந்து நிற்கும் அந்த சிவப்பு நிற கார் மாடல் ஃபோக்ஸ்வேகன் (Volkswagon)இன் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றான போலோ (Polo) கார் மாடல் ஆகும். பிரீமியம் அம்சங்களை அதிகம் விரும்பும் கார் காதலர்கள் பலரின் ஃபேவரிட் கார் மாடலாக இது விளங்குகின்றது.

ஆனால், இந்த கார் இப்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை. இதை ஃபோக்ஸ்வேகன் விற்பனையில் இருந்து அகற்றி பல மாதங்கள் ஆகிவிட்டன. இருப்பினும், பலரின் ஃபேவரிட் கார்கள் லிஸ்ட்டில் போலோ ஹேட்ச்பேக் இப்போதும் உள்ளது. இந்த காரே விபத்தில் சிக்கி முகத்தை முழுமையாக இழந்திருக்கின்றது.

Tata nexon collision

அதேவேளையில், டாடா நெக்ஸான் இவி விபத்தில் சிக்கிவிட்டு ஒன்னும் தெரியாத பிள்ளையை நின்றிருக்கின்றது. இது பலருக்கு ஆச்சரியத்தையும், வியப்பையும் தரும் வகையில் அமைந்திருக்கின்றது. முதலில் சிவப்பு நிற போலோ காரை பார்த்த பலரும் இந்த காருடன் மோதலைச் சந்தித்த காருக்கு என்ன ஆகியிருக்குமோ என்றே அஞ்சினர்.

அந்த நேரத்திலேயே அருகில் இந்த கருப்பு நிற டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் நின்றுக் கொண்டிருந்திருக்கின்றது. இதை பார்த்த பலரும், இது ஏன் இங்கு சும்மா நிற்கின்றது என்றே நினைத்தனர். வீடியோவை பார்த்த நாம்மில் பலரும் அப்படியே நினைத்தோம். இப்படியாக நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்யும் விதமாக சிவப்பு நிற போலோ உடன் விபத்தைச் சந்தித்ததே அந்த காருதான் என்பது தெரிய வந்தது.

பார்த்த உடன் புலப்பட வகையிலேயே டாடா காரில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனாலேயே இந்த குழப்பம் பலருக்கும் எழும்பியிருக்கின்றது. டாடா காரின் இந்த திறனுக்கு அதன் அதிர்வுகளை அதிகம் உள்வாங்கும் கட்டமைப்பே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதனால்தான் டாடாவின் பெரும்பாலான கார் மாடல்கள் விபத்தைச் சந்தித்தாலும் பேரிழப்புகளில் இருந்து தப்பிவிடுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நெக்ஸான் பாதுகாப்பு விஷயத்திற்கு பெயர் போனதாகக் காட்சியளிக்கின்றது. தன்னுடைய இந்த திறமையையே அந்த கார் தற்போது வெளிக்காட்டி இருக்கின்றது. விபத்தில் இருந்து தப்பிப்பது மட்டுமல்ல உயிர்களை பாதுகாப்பதிலும் கை தேர்ந்தவையாக டாடாவின் கார் மாடல்கள் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 6, 2025, 10:52 [IST]
English summary
Tata nexon ev survives a collision with a volkswagen polo
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X