பள்ளத்தாக்கின் விளிம்பிற்கு சென்ற டாடா நெக்ஸான்... இளைஞர்களின் முயற்சியால் பெரும் ஆபத்து தவிர்ப்பு!

ஆபத்தான சூழ்நிலையில், பள்ளத்தாக்கின் விளிம்பில் நின்றுக் கொண்டிருந்த டாடா நெக்ஸான் காரை, இளைஞர்கள் ஒன்று வெளியேற்றிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பள்ளத்தாக்கின் விளிம்பிற்கு சென்ற டாடா நெக்ஸான்... இளைஞர்களின் முயற்சியால் பெரும் விபத்து தவிர்ப்பு... வீடியோ!

இந்திய எஸ்யூவி கார்கள் சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் காரும் ஒன்று. இந்த கார் அதிகம் விற்பனையாவதற்கு, அந்த காரில் உள்ள பல்வேறு சிறப்பு அம்சங்களே முக்கிய காரணமாக இருக்கின்றன. அந்தவகையில், சப்-4 மீட்டர் ரகத்திலான இந்த எஸ்யூவி ரக கார் பாதுகாப்பில் சிறந்த காராக இருக்கின்றது.

பள்ளத்தாக்கின் விளிம்பிற்கு சென்ற டாடா நெக்ஸான்... இளைஞர்களின் முயற்சியால் பெரும் விபத்து தவிர்ப்பு... வீடியோ!

அதனை உறுதி செய்யும் விதமாக கடந்த ஆண்டு நடைபெற்ற க்ராஷ் டெஸ்ட்டில் டாடா நெக்ஸான், ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்று இந்தியாவின் முதல் பாதுகாப்பான கார் என்ற பெருமையைச் சூடியது. இதன்காரணமாகவே, இந்த கார் இந்தியாவில் அதிகம் விற்பனையைப் பெற்று வருகின்றது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த காருக்கு நல்ல வரவேற்பு நிலவி வருவது குறிப்பிடத்தகுந்தது.

பள்ளத்தாக்கின் விளிம்பிற்கு சென்ற டாடா நெக்ஸான்... இளைஞர்களின் முயற்சியால் பெரும் விபத்து தவிர்ப்பு... வீடியோ!

அதேசமயம் மற்ற சப்-4மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களில் காணப்படும் 4டபிள்யூடி அல்லது 4X4 சிஸ்டம்கள் வழங்கப்படவில்லை என்பது பெரும் குறையாக இருக்கின்றது. இது, முரண்பாடான சூழ்நிலைகளில் உதவக்கூடிய ஓர் அம்சமாகும் ஆகும். இதுபோன்ற சிறப்பு வசதி வழங்கப்படாத காரணத்தால், மிக உயரமான பாதையில் டாடா நெக்ஸான் கார் சிக்கலைச் சந்தித்து வருகின்றது.

பள்ளத்தாக்கின் விளிம்பிற்கு சென்ற டாடா நெக்ஸான்... இளைஞர்களின் முயற்சியால் பெரும் விபத்து தவிர்ப்பு... வீடியோ!

இதனை உறுதிச் செய்யும் விதமாக, வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதனை டிக்டாக் பயனாளி ஒருவர் அபவரது பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோவில், டாடா நெக்ஸான் கார் மிகப் பெரிய ஆபத்தில் சிக்கியிருப்பது தெரியவருகின்றது. இந்த காட்சியான ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ரோஹ்தாங் பாஸ் எனும் சாலையில் எடுக்கப்பட்டதைப் போன்று காட்சியளிக்கின்றது.

பள்ளத்தாக்கின் விளிம்பிற்கு சென்ற டாடா நெக்ஸான்... இளைஞர்களின் முயற்சியால் பெரும் விபத்து தவிர்ப்பு... வீடியோ!

தற்போது அந்த பகுதியில் பனிப் பொழிவு ஏற்பட்டிருப்பதால், அந்த மலைப்பாதையில் முழுவதிலும் புத்தம் புதிய பனியின் படலம் சூழ்ந்தவாறு இருக்கின்றது. காரின் டயருக்கும், சாலைக்கும் இருக்கும் தொடர்பைத் துண்டித்து, வழுக்கிச் செல்லும் சூழல் ஏற்படுத்தியுள்ளது. இதனால், தற்போது அந்த பாதையில் செல்லும் வாகனங்கள் கடுமையான அவதியைச் சந்தித்து வருகின்றன.

பள்ளத்தாக்கின் விளிம்பிற்கு சென்ற டாடா நெக்ஸான்... இளைஞர்களின் முயற்சியால் பெரும் விபத்து தவிர்ப்பு... வீடியோ!

அதேபோன்று, டாடா நெக்ஸான் காரும் இதுபோன்ற ஓர் சூழ்நிலையைத்தான் சந்தித்துள்ளது. ஆனால், இவ்வளவு ஆபத்தான சூழ்நிலைக்கு அந்த கார் எவ்வாறு சென்றது என்ற தகவலை இதுவரை முழுமையாக தெரியவில்லை. ஆனால், வீடியோவில் பல இளைஞர்கள் ஒன்று கூடி ஆபத்தின் விளிம்பில் இருக்கும் நெக்ஸான் காரை காப்பாற்றும் காட்சிகள் மட்டுமே அதில் இடம் பெற்றிருந்தது.

டாடா நெக்ஸான் கார், முன் பக்க வீல்கள் இயக்கம் திறன் கொண்டவை. இதன்காரணமாகவே, இந்த கார் தற்போது எளிமையாகக் காப்பற்றப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் வீடியோ அமைந்துள்ளது. வீடியோக் காட்சியில், பள்ளத்தாக்கின் விளிம்பில் நின்றுக்கொண்டிருக்கும் டாடா நெக்ஸான் காரின் முன்பக்க இரு இளைஞர்கள் அமர்ந்து முன்சக்கரத்திற்கு இழுவை சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

பள்ளத்தாக்கின் விளிம்பிற்கு சென்ற டாடா நெக்ஸான்... இளைஞர்களின் முயற்சியால் பெரும் விபத்து தவிர்ப்பு... வீடியோ!

அதேசமயம், காருக்குள் உள்ளே அமர்ந்துக்கொண்டிருந்த அதன் உரிமையாளர், காரை முன்நோக்கி செலுத்தும் விதமாக காரை இயக்குகின்றனர். மேலும், சிலர் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடாத வண்ணம், காரை தங்களின் கைகளால் இழுத்த வண்ணம் இருக்கின்றனர். இவ்வாறு, பல இளைஞர்களின் கைகள் ஒன்று கூடி, ஆபத்தில் இருந்த நெக்ஸான் காரை காப்பாற்றினர்.

பள்ளத்தாக்கின் விளிம்பிற்கு சென்ற டாடா நெக்ஸான்... இளைஞர்களின் முயற்சியால் பெரும் விபத்து தவிர்ப்பு... வீடியோ!

இதுபோன்று மலைப்பாதையில் வாகனங்கள் சிக்கும்போது நாம் செய்ய வேண்டியவை:

மலைப் பாதை என்றாலே கரடு முரடான ஆபந்து நிறைந்ததாகவே இருக்கின்றன. இதுபோன்ற பாதையில் வாகனம் சிக்கும்போது, உதவிக்கு மற்ற வாகனங்களை எதிர்பார்ப்பது நல்லது. அவ்வாறு, மற்ற வாகனத்தின்மூலம், ஆபத்தில் சிக்கியிருக்கும் வாகனத்தை கயிறு கட்டி இழுப்பது நல்லது. இல்லையெனில் இதற்காக பிரத்யேக இருக்கும் வாகனங்களை உதவிக்கு அழைப்பது நல்லது.

பள்ளத்தாக்கின் விளிம்பிற்கு சென்ற டாடா நெக்ஸான்... இளைஞர்களின் முயற்சியால் பெரும் விபத்து தவிர்ப்பு... வீடியோ!

இவையனைத்தும் கிடைக்காதபட்சத்தில், காரின் டயரில் உள்ள காற்றை, அனைத்து வீல்களிலும் சமமான அளவில் இறக்கிவிட்டு பின்னர், காரை முன்னோக்கி இயக்க வேண்டும். டயரில் காற்றை இறக்கிவிடுவதன்மூலம் காருக்கு கூடுதல் இழு விசை கிடைக்கும். ஆகையால், மாலைப் பாதையில் பயணத்திற்கு செல்பவர்கள், முன்னேற்பாடாக காற்றடிக்கும் பம்ப் மற்றும் கயிறு போன்றவற்றை எடுத்து செல்லவது சால சிறந்தது.

பள்ளத்தாக்கின் விளிம்பிற்கு சென்ற டாடா நெக்ஸான்... இளைஞர்களின் முயற்சியால் பெரும் விபத்து தவிர்ப்பு... வீடியோ!

டாடா நெக்ஸான் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்கு கிடைக்கின்றது. அதில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் 110 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. அதேபோன்று, 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் 110 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றது. மேலும், இந்த எஞ்ஜின் சிக்ஸ் ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக கிடைக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tata Nexon Gets Stuck At Rohtang Pass Gets Out With People Power. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X