டாடா நெக்ஸான் காரை வாங்கியவங்க கஷ்டப்பட்டதா வரலாறே கிடையாதே!! சுவரில் மோதிய பின்பும் கல்லு போல்...
டாடா நெக்ஸான் (Tata Nexon) கார் ஒன்று எதிர்பாராத விதமாக சுவர் ஒன்றில் மோதிய பின்பும், பெரியதாக எந்தவொரு சேதாரமும் இன்றி காட்சி தந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
சாலை விபத்துகளுக்கு இந்தியா பிரபலமானது என்று கூட சொல்லலாம். பெரிய நாடு என்பது மட்டுமின்றி, போதிய தரத்தில் சாலை வசதி இல்லாததும் இதற்கு காரணமாகும். இதனாலேயே, கார் தயாரிப்பு நிறுவனங்கள் முடிந்தவரையில் தரமான, வலிமையான மற்றும் பாதுகாப்பு வசதிகள் மிகுந்த கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த முயல்கின்றன.

இந்த வகையில், டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்திய தரமான கார் நெக்ஸான் ஆகும். காம்பெக்ட் எஸ்யூவி காரான இது க்ளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் 5-க்கு 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த ஒரு விஷயத்தினால் தான் நெக்ஸான் கார்களை பல்லாயிரக்கணக்கான மக்கள் வாங்கி வருகின்றனர். அந்த வரிசையில், நெக்ஸான் காரை வாங்கிய உரிமையாளர் ஒருவர் தனது காரில் விபத்தை சந்தித்துள்ளார்.
தனது நெக்ஸான் காரில் சாலையில் இயங்கி கொண்டிருந்த அவர் திடீரென கண்ட்ரோலை இழந்து அருகில் இருந்த சுவரில் மோதியுள்ளார். இதுதவிர்த்து, இந்த விபத்திற்கான காரணம் என்ன? யார் இந்த நெக்ஸான் காரின் உரிமையாளர்? இந்த விபத்தில் யாரேனும் காயம் அடைந்துள்ளார்களா? என்ற கேள்விகளுக்கான பதில்கள் நம்மிடத்தில் இல்லை.

இந்த விபத்து குறித்து இணையத்தில் வெளியாகியுள்ள படங்களில், சுவரில் மோதிய நெக்ஸான் காரையும், மோதிய வேகத்தில் காரின் பாதி சுவருக்கு அந்த பக்கமும், மீதி பாதி சுவருக்கு இந்த பக்கமும் என சிக்கி கொண்டு இருப்பதையும் காண முடிகிறது. இயக்கி கொண்டிருக்கும்போது கண்ட்ரோலை இழக்கும் கார்கள் சுவரில் மோதுவது வழக்கமான ஒன்றே.
இருப்பினும், இவ்வாறு முன்னாலும் செல்ல முடியாமல், பின்னாலும் செல்ல முடியாமல் கார் ஒன்று சிக்கி கொள்வதை இதற்குமுன் எங்காவது பார்த்துள்ளீர்களா? இதனை காட்டிலும் இந்த விபத்தில் நம்மை வசீகரிக்கும் விஷயம் என்னவென்றால், விபத்தில் சிக்கிய காரில் பெரியதாக சேதாரமும் இல்லாமல் இருப்பதுதான். இவ்வளவு ஏன், காரின் கண்ணாடி கூட உடையாமல் உள்ளது. பொதுவாகவே சுவரை உடைத்து கொண்டு செல்லும் காரின் முகப்பு பகுதி பலத்த சேதமடையும்.

சற்று வேகமாக மோதியதால், காரின் முன்பக்கம் முற்றிலுமாக இல்லாமல் போன சம்பவங்களை கூட பார்த்துள்ளோம். ஆனால் இந்த நெக்ஸான் காரில் முன் பம்பரையும் முன்பக்க ஃபெண்டரையும் இணைக்கும் பகுதி மட்டும் லேசாக சேதம் அடைந்துள்ளது. நமக்கு கிடைத்துள்ள படங்களில் காரின் முகப்பு பகுதியை முழுவதுமாக பார்க்க முடியவில்லை. தெரிபவையை வைத்து பார்க்கும்போது, பெரியதாக எந்த சேதமும் இல்லை என்பது போல்தான் தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: காரில் பெரியதாக சேதம் இல்லாததை வைத்து பார்க்கும்போது கார் குறைந்த வேகத்திலேயே சுவரில் மோதியுள்ளது என்பதை அறிய முடிகிறது. குறைந்த வேகத்தில் மோதினால் மட்டுமே காரின் அளவுக்கு ஏற்ப மட்டுமே ஓட்டை ஏற்பட்டு, இவ்வாறு கார் சிக்கிக் கொள்ளும். அதுமட்டுமின்றி, மோதலுக்கு உள்ளான சுவர் சிமெண்ட் பூசப்படாமல் வலிமையற்றதாக இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications









