சென்னை சூப்பர் கிங்ஸிற்கு பெரிய விசில் போடும் டாடா நெக்ஸான் கார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீம்மில் டிசைன் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் காரின் புகைப்படங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீம்மில் டிசைன் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் காரின் புகைப்படங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

ஐபிஎல் பேட்டிக்கான வரவேற்ப்பை வைத்து தனது டாடா நெக்ஸான் காரை பிரபலப்படுத்த டாடா நிறுவனம் முடிவெடுத்தது. இதையடுத்து டாடா நிறுவனம் ஐ.பி.எல் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.

அதன் படி தினமும் நடக்கும் போட்டியில் சிறந்த வீரர்களுக்கான பரிசை வழங்கி வருகிறது. அது மட்டும் இல்லாமல் டாடா நெக்ஸான் சூப்பர் கேட்ச் என்ற ஒரு பரிசையும் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

மேட்சில் சிக்ஸ் அடிக்கப்படும் பந்தை ஒற்றை கையால் பிடிப்பவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஐ.பி.எல். தொடரில் அதிக எண்ணிக்கையில் கேட்ச் பிடிப்பவர்களுக்கு டாடா நெக்ஸான் கார் பரிசாக வழங்கப்படுகிறது.


இந்தவாரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீம்மில் காரை டிசைன் செய்து மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் தீம் நெக்ஸான் கார் சிறப்பு வெள்ளை நிற காரில் மஞ்சள் நிறம் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் காரில் சிஎஸ்கேவின் சிங்கமுக லோகோவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

காரின் முன் பக்கத்ததில் இன்டிகேட்டர் மற்றும் பம்பரின் கீழ் பகுதியில் மஞ்சள் நிறம் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. காரின் கண்ணாடிகள் முழுமையாக மஞ்சள் நிறத்தை பெற்றுள்ளன.

காரின் மேற்கூரை முழுவதும் க்ரே கலராக மாற்றப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டு பகுதிகளில் மஞ்சள் நிற லைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் காரின் க்கூப்பே பகுதியிலும் மஞ்சள் நிற லைன் கொடுக்கப்பட்டுள்ளது.

காரின் நான்கு ஆலாய் வீலும் மஞ்சள் நிறத்தால் டிசைன் செய்யப்பபட்டுள்ளது. மேலும் வீல் ஆர்ச் பகுதிகளிலும் மஞ்சள் நிறம் பட்டையாக வழங்கப்பட்டுள்ளது.

காரின் பின் பகுதியிலும் மஞ்சள் நிற லைன்கள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் காரில் ஆங்காங்கே மஞ்சள் நிறத்தை புகுத்தி முற்றிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீமில் கார் விடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் காரின் முன்பக்கம் இடது பகுதியில் உள்ள வீல் ஆர்ச் பகுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சின்னமான சிங்கத்தை க்ரே கலரில் பொறித்துள்ளனர்.

காரின் நம்பர் பிளேட்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் சின்னத்துடன் நெக்ஸான் என்ற எழுத்தும் இடம் பெற்றுள்ளது.

காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் டாடா நெக்ஸான் சிறந்த தேர்வாக இருக்கிறது. விற்பனையிலும் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இந்த சூழலில், இதுபோன்ற கூடுதல் கவர்ச்சிகரமான அலங்கார விஷயங்கள், ஐபிஎல் ரசிகர்களாக உள்ள வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.

இந்த அலங்கார பணிகள் டீலர் அளவிலேயே செய்து தரப்படுகிறது. நிறுவனத்தின் சார்பில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. சற்றே கூடுதல் கட்டணத்தில் இந்த அலங்காரத்தை டீலர் செய்து தருவதாகவும் தெரிய வந்துள்ளது.

ஐபிஎல் விளையாட்டிற்கு முக்கியமான ஸ்பான்ஸராக டாடா நிறுவனம் இருப்பதால் ஐபிஎல் போட்டிகளில் நெக்ஸான் காரை ஷோகேஸ் செய்து வருகின்றனர். ஐ.பி.எல் மூலம் ஏற்கனவே நல்ல விளம்பரத்தை பெற்று வரும் டாடா நெக்ஸான் இப்படியாக தீம் கார்களை வெளியிடுவது மூலமும் மேலும்நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.
Picture credit: Smart Mani G K
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications








