இது காருதானா! ரயில் மோதியும் நெக்ஸானுக்கு பெருசா எதுவுமே ஆகல.. டாடா இந்த காரை எதை கொண்டுதான் தயாரிக்குதோ!

டாடா நெக்ஸான் ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த ஐந்து நட்சத்திர ரேட்டிங் மட்டுமல்ல இன்னும் பல நட்சத்திர ரேட்டிங்கை இந்த காருக்கு கொடுத்தாலும் அதற்கு உகந்த வாகனம் தான் என்பதை நெக்ஸான் தொடர்ச்சியாக உறுதிப்படுத்திக் கொண்டு இருக்கின்றது.

சமீபத்தில், டாடா நெக்ஸான் ரயில் உடன் மோதலைச் சந்திக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது. இந்த சம்பவத்தில் வேறு ஏதேனும் கார் சிக்கி இருந்தால், ஜூஸுக்காக மெஷினுக்குள் நுழைந்த கரும்பைபோல வெறும் சக்கையாக மட்டுமே அந்த கார் வெளியில் வந்திருக்கும். ஆனால், டாடா நெக்ஸான் பிரமாண்ட் தோற்றம் கொண்ட ரயில் மோதிய பின்னரும் மிகப் பெரிய சேதம் இன்றி தப்பி இருக்கின்றது.

Tata nexon hit by train

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் காரின் ஒரு பக்கம் மட்டுமே ரயிலுடனான விபத்தின் காரணமாக சேதத்தைச் சந்தித்து இருக்கின்றது. இதன் வாயிலாக இந்த கார் மிக மிக அதிக பாதுகாப்பானது என்பது மீண்டும் உறுதியாகி இருக்கின்றது. இதற்கு முன்னதாகவும், இந்த கார் விபத்தில் சிக்கி இருக்கின்றது.

அந்த விபத்துகளிலும் தான் ஓர் உறுதித் தன்மைக் கொண்ட கார் என்பதை நெக்ஸான் நிரூபித்துக் காட்டி இருக்கின்றது. ஆனால், நெக்ஸான் ரயிலுடன் விபத்தைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். மேலும், விபத்திற்கான காரணம், விபத்து எப்படி அரங்கேறியது என்பது பற்றிய துள்ளியமான விபரங்கள் வெளியாகவில்லை.

Tata nexon survives after hit by train

ரயில்வே கேட்டை கடக்க முயற்சிக்கும்போது இந்த விபத்து அரங்கேறி இருக்கலாம் என கூறப்படுகின்றது. இதேபோல், விபத்தின்போது என்ன வேகத்தில் வந்து டாடா நெக்ஸான் மீது ரயில் மோதியது என்பதும் தெரியவில்லை. ரயில்கள் மிக லேசான வேகத்தில் வந்து மோதினாலும், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்பு மிக பெரியதாகவே இருக்கும்.

இத்தகைய மிக மோசமான தாக்கத்தையே டாடா நெக்ஸான் அசால்டாக தாங்கி இருக்கின்றது. குறிப்பாக எளிதில் நொறுங்கக் கூடிய கண்ணாடிகள் கூட அப்படி நல்ல நிலையில் இருப்பதைக் காண முடிகின்றது. மோதலைச் சந்தித்த பக்கத்தில் இருக்கும் கண்ணாடிகள் மட்டுமே நொறுங்கி இருக்கின்றன. ஆகையால், தற்போது இந்த கார் மீண்டும் பாராட்டுகளுக்கு ஆளாகி இருக்கின்றது.

Nexon damages after hit by train

மேலும், வந்து மோதியது ரயில் என்பதால், அதற்கு எதுவும் ஆபத்து ஏற்படவில்லை. அதுவே, நெக்ஸான் உடன் மாற்று பிராண்டின் கார் மாடல் ஏதேனும் மோதி இருந்தால் அது மிகப் பெரிய பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கும். இதற்கு முன்னதாக அரங்கேறிய விபத்துச் சம்பவங்களே இதற்கு சான்றாக இருக்கின்றது.

ஆமாங்க, நெக்ஸான் உடன் மோதிய மற்ற பிராண்ட் வாகனங்கள் விபத்தின்போது நெக்ஸானைக் காட்டிலும் மிக அதிக பாதிப்பை அவையேச் சந்தித்து இருக்கின்றன. இதனால்தான் பலர் டாடா நெக்ஸானுக்கு மிகப் பெரிய ஃபேனாக இருக்கின்றனர். இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களையும், நவீன தொழில்நுட்ப வசதிகளையும் மிக தாராளமாக டாடா வழங்கி இருக்கின்றது.

Tata nexon

ஆறு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ், இபிடி, ஐசோஃபிக்ஸ் சைல்டு இருக்கை ஆங்கரிங் பாயிண்டுகள், பார்க்கிங் சென்சார்கள், அவசரக கால மற்றும் பிரேக் டவுன் கால் அசிஸ்டன்ஸ் உள்ளிட்ட அம்சங்களே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், நவீன கால தொழில்நுட்ப வசதிகள் பலவும் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.

அந்தவகையில், 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதி உடன் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டமும் இந்த திரை உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், 10.25 அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 2 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல், கூல்டு குளோவ் பாக்ஸ், ஃபேன்சி ஷிஃப்டர், ரியர் பகுதிக்கான ஏசி வெண்டுகள், இரண்டாம் தலைமுறை ஐஆர்ஏ இணைப்பு தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் 382 லிட்டர் பூட் ஸ்டோரேஜ் ஆகிய வசதிகளும் புதிய நெக்ஸானில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா நெக்ஸான் காருக்கு என தனி ரசிகப் பட்டாளமே உண்டு. இந்த ரசிக பட்டாளத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவே இந்த விபத்து சம்பவம் அமைந்திருக்கின்றது. டாடா சமீபத்திலேயே நெக்ஸானின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விற்பனைக்குக் களமிறக்கியது. அதன் விலை ரூ. 8.10 லட்சம் ஆகும். ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே இது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 8, 2023, 18:23 [IST]
English summary
Tata nexon mets accident with train
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X