என்னங்க இந்த டாடா காரு குத்துகல்லு மாதிரி நிற்குது.. லிஃப்டோட கார் ஒன்று வந்து விழுந்தும் ஒன்னும் ஆகல!!
அதிக பாதுகாப்பிற்கும், உறுதித் தன்மைக்கும் பெயர்போனவையாக டாடா (Tata) நிறுவனத்தின் கார்கள் இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் அரங்கேறிய ஓர் நிகழ்வு பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். டாடாவின் முக்கிய தயாரி்பபுகளில் ஒன்றான நெக்ஸான் (Nexon) காரின் மீது, லிஃப்ட் உடன் வேறொரு காரும் விழுந்திருக்கின்றது. இருந்தும் நெக்ஸானுக்கு ஒன்றுமே ஆகவில்லை. இதன் வாயிலாக மீண்டும் ஒரு முறை தான் ஓர் அதிக பாதுகாப்பான மற்றும் உறுதி தரம் மிக்க கார் மாடல் என்பது உறுதியாகி இருக்கின்றது.
மல்டி கார் பார்க்கிங் மையத்திலேயே இந்த நிலை நெக்ஸான் காருக்கு ஏற்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. லிஃப்டின் எடையுடன் சேர்த்து, காரையும் தாங்கி நிற்கும் நெக்ஸான் பற்றிய படங்களே இப்போது வெளியாகி இருக்கின்றது. இந்த படத்தை காரின் உரிமையாளரான ஷைல்யா ஜக்கி என்பவரே பகிர்ந்திருக்கின்றார்.

இதுமட்டுமல்ல அவர் அந்த நேரத்தில் என்ன மனநிலையில் இருந்தார் என்பது பற்றிய தகவலையும் அந்த தகவல் பகிர்ந்திருக்கின்றார். இதோ அவருடைய பதிவு பற்றிய சுருக்கமான தகவல், "விபத்து நிகழ்வு குறித்து பார்க்கிங் நிர்வாகத்திடம் அழைப்பு வந்தது. அப்போது, எங்களுடைய கார் பேன் கேக்கை போல நசுங்கி இருக்கும் என நாங்கள் நினைத்தோம்.
ஆனால், சம்பவ இடத்திற்கு சென்றபோதே அந்த அதிசயத்தை பார்த்தோம். பெரிய அளவில் கார் சேதமடையாமல் இருந்தது எங்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை தந்தது" என தெரிவித்து இருக்கின்றார். இதுபோன்று நெக்ஸான் கார் பாதுகாப்பு விஷயத்தில் உரிமையாளரின் கவனத்தை ஈர்ப்பது முதல் முறையல்ல.

பலரின் உயிரை மிக மோசமான விபத்தில் இருந்து காப்பாற்றியதற்காகவும் அது பலரின் பாராட்டுக்களைப் பெற்றிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. டாடா நெக்ஸான் ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல் ஆகும். இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி ஆகிய வெர்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இதுமட்டுமல்ல மின்சார அவதாரத்திலும் இது நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஐசிஇ வெர்ஷன்களைப் போலவே இதற்கும் மிக சிறப்பான நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே இப்போது அரங்கேறிய இருக்கும் சம்பவம் அமைந்திருக்கின்றது. இந்தியாவில் இந்த கார் ரூ. 8.89 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு கிடைக்கின்றது.

இது பெட்ரோல் ஆப்ஷனின் ஆரம்ப விலை ஆகும். இதேபோல், இதன் டீசல் மோட்டார் ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்து 990 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. எலெக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கும் நெக்ஸான் இவி ரூ. 12.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நெக்ஸான் கார் மிக மோசமான விபத்திலும் மிக சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, உயிர்களைப் பாதுகாப்பதில் இந்த கார் கடவுளுக்கு நிகராக செயல்பட்டு இருக்கின்றது. இதனாலேயே இந்த காரை பலரும் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த நிலையிலேயே அதிக பாரத்தைச் சுமக்கும் காராகவும் இது தன்னைக் காண்பித்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









