108 கிமீ வேகத்தில் பறந்த கார்! திடீர்னு குறுக்கே வந்த நபர்! மனசை தைரியமாக்கிகிட்டு இந்த வீடியோவை பாருங்க!

இந்திய சாலைகளில் வாகனம் ஓட்டு வேண்டுமென்றால் உண்மையில் தனி திறமை வேண்டும். ஏனெனில் இங்கு நிறைய பேர் விதிமுறைகள் எதையும் கடைபிடிப்பதில்லை. மனம் போன போக்கில் நடந்து கொள்கின்றனர். இது பயங்கரமான சாலை விபத்துக்களுக்கு (Road Accidents) காரணமாக அமைந்து விடுகிறது.

ஆனால் சில சமயங்களில் பயங்கரமான சாலை விபத்துக்கள் கூட, அதிர்ஷ்டம் காரணமாக தவிர்க்கப்படுகின்றன. அப்படி நூலிழையில் தவிர்க்கப்பட்ட ஒரு சாலை விபத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

Tata Nexon Narrowly Misses Hitting Pedestrian

டாடா நெக்ஸான் (Tata Nexon) காரின் முன் மற்றும் பின் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று, டாடா நெக்ஸான் காரில், 5 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து வாரணாசி நோக்கி அவர்களின் கார் சென்று கொண்டிருந்தது.

நெடுஞ்சாலை சற்று காலியாக இருந்த காரணத்தால், டிரைவர் அதிவேகத்தில் காரை ஓட்டினார். மணிக்கு 100 கிலோ மீட்டர்களுக்கும் மேலான வேகத்தில் கார் பறந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் மணிக்கு 108 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, பாதசாரி ஒருவர் திடீரென குறுக்கே வந்தார்.

Tata Nexon Dashcam Footage

ஆனால் நல்ல வேளையாக அவர் மீது கார் மோதவில்லை. இதனால் அவரும், காருக்கு உள்ளே இருந்த 5 பேரும் காயங்கள் இன்றி உயிர் தப்பினர். பாதசாரியின் மீது கார் மோதுவது நூலிழையில் தவிர்க்கப்பட்டது. இந்த செய்தியின் இறுதியில் வீடியோவை பார்க்கும்போது, இந்த சம்பவத்தின் தீவிரத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் மீது கார் மோதுவது தவிர்க்கப்பட்டது நல்ல விஷயம். அவர் மீது கார் மோதியிருந்தால், அதன் விளைவுகள் பயங்கரமானதாக இருந்திருக்கலாம். எனினும் நல்ல வேளையாக அப்படி நடக்கவில்லை. சாலைக்கு வந்து விட்டால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த நிகழ்விற்கு, 2 தரப்புமே காரணம் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. பாதசாரி வலது பக்கம், இடது பக்கம் என எங்குமே கவனிக்காமல் மனம் போன போக்கில் சாலையை கடக்க முயற்சி செய்திருப்பது வீடியோவில் நமக்கு நன்றாக தெரிகிறது.

இது போன்ற அலட்சியங்கள் தவிர்க்கப்பட வேண்டும். சாலையை கடப்பதற்கு முன் வலது பக்கம், இடது பக்கம் என இரண்டு பக்கங்களையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக வாகனங்கள் மிகவும் வேகமாக வரக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகளை கடக்கும்போது மிகவும் முன்னெச்சரிக்கையாக இருப்பது, விபத்துக்களை தவிர்க்க உதவும்.

இந்த சம்பவத்தில், கார் டிரைவர் அதிவேகத்தில் வந்ததும் கூட தவறுதான். வேக வரம்புகளை (Speed Limit) எக்காரணத்தை கொண்டும் மீறக்கூடாது. இந்திய மக்கள் பலருக்கும் இன்னும் சாலைகளை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது தெளிவாக புரியவில்லை. குறிப்பாக சாலைகளை கடக்கும்போது நிறைய தவறு செய்கின்றனர்.

இப்படிப்பட்ட மக்கள் நிறைந்த ஒரு நாட்டில் வாகனத்தை அதிவேகத்தில் ஓட்டுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அப்போதுதான் திடீரென யாராவது குறுக்கே வந்தாலும் கூட, வாகனத்தை கட்டுப்படுத்தி நிறுத்த முடியும். இந்திய சாலைகளில் கால்நடைகளும் கூட திடீர் திடீரென குறுக்கே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு வாகனத்தை கவனமாக ஓட்டுங்கள்.

Article Published On: Friday, October 6, 2023, 13:20 [IST]
English summary
Tata nexon suv at 108 kmph narrowly misses hitting pedestrian watch viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+