காதலர் தின ஸ்பெஷல்: டபுள் மீனிங் விளம்பரம் வெளியிட்ட டாடா... கொந்தளிப்பில் காதலர்கள்...
உலகமெங்கும் பிப்ரவரி 14ம் தேதி காதலர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த நாளில், இரட்டை அர்த்தமுள்ள விளம்பரத்தை டாடா கார் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் இந்த விளம்பரம் காதலர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா, அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பட்ஜெட் மற்றும் விலையுயர்ந்த ரக கார்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அனைத்து வாகனங்களும் மிகவும் பிரபலமானவை.
அதன்படி, டாடா நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்த கான்செப்ட் மாடலின் டிசைனில் சற்று மாற்றங்களைச் செய்து டாடா நெக்ஸான் என்ற எஸ்யூவி மாடலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இது, 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் காம்பேக்ட் ரக காராகும்.

இம்பேக்ட் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் எஸ்யூவி மற்றும் கூபே ரக கார்களின் வடிவத்தை பெற்று, பார்வையாளர்களை முதல் லுக்கிலேயே கவரும் வகையில் அமைந்து உள்ளது. ஆகையால் இது வழக்கமான எஸ்யூவி மாடல்களிலிருந்து சற்று மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளிக்கிறது.
அதிநவீன வசதிகளைக்கொண்ட இந்த டாடா நெக்ஸான், ஆட்டோமொபைல் துறையில் முக்கிய பங்காற்றுவதுடன், டாட்டா நிறுவனத்தின் இரண்டாவது அதிகளவில் விற்பனையாகும் மாடலாக இருந்து வருகிறது. சராசரியாக மாதத்திற்கு 4 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாவதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற பாதுகாப்பு பரிசோதனையில் டாடா நெக்ஸான் ஐந்து ஸ்டார்கள் பெற்று சாதனைப் படைத்தது. ஒவ்வொரு வருடமும் சர்வதேச அளவில் நடைபெறும் 'புதிய கார்களுக்கான மதிப்பீடு திட்டம்' (NCAP) இந்தியாவுக்கான கார்களில் பாதுகாப்புமிக்க கார் என டாடா நெக்ஸானுக்கு அங்கீகாரம் வழங்கியது.

இந்த கார் கடந்த 2017ம் ஆண்டு நான்கு ஸ்டார்கள் மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, பல அப்டேட்களுடன் மீண்டும் களமிறங்கிய டாடா நெக்ஸான், பயணிகள் மற்றும் டிரைவருக்கான பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் 5 ஸ்டார்களைப் பெற்று சர்வதேச அளவில் சாதனைப் படைத்தது. இதன்மூலம், இந்தியாவில் தயாராகும் காரும் சர்வதேச அளவில் சாதனை படைக்கும் என டாடா நிறுவனம் நிரூபணம் செய்தது.
ரூ. 6.31 என்ற மலிவான விலையில் அதிகளவில் பாதுகாப்பு அம்சம் கொண்ட காராக டாடா நெக்ஸான் பார்க்கப்டுகிறது. இந்த காரில், ஏபிஎஸ் மற்றும் இபிடி பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர, டிவின் ஏர்பேக், பார்க்கிங் சென்ஸர் மற்றும் கேமிராக்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின்களில் டாடா நெக்ஸான் கிடைக்கிறது. அதன்படி, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின், 108Bhp பவரையும், 170Nm டார்க்யூ திறனையும் வெளிப்படுத்தும். அதேபோல 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின் 108Bhp பவருடன் 260Nm டார்க்யூ திறனை வெளிப்படுத்தும்.
இந்நிலையில், பிப்ரவரி 14ம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் டாடா நிறுவனம் புதிய விளம்பரம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், ஒரு இளம்ஜோடிகள் படுக்கை அறைக்குள் இருந்தபடி, பாதுகாப்பு குறித்து இரட்டை மீனிங்கில் கிளுகிளுப்பாக பேசிக் கொள்ளவதைப்போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. திடீரென, அவர்கள் இருவரும் காருக்குள் இருந்தபடி, பயணத்தின் பாதுகாப்பைக் குறித்து பேசுவதைப் போல் காட்சி நகர்த்தப்படுகிறது.
டாடா நெக்ஸானின் இந்த இரட்டை மீனிங் விளம்பரம் வைரலாகி பலரிடையே நகைப்பையும், முனுமுனுப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம், இது காதலர் தினத்தில் வெளி வந்திருப்பதால், காதலர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications









