டாடா - இந்தியன் ஆயில் இடையே கூட்டணி.. ஃப்ரீ அல்லது கம்மி விலையில் பெட்ரோல் தர போறாங்களா?.. இதோ முழு விபரம்!
இந்தியாவின் மாபெரும் ஆயில் உற்பத்தி நிறுவனமான இந்தியன் ஆயிலும், டாடா-வும் கூட்டணியைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டணியின்கீழ் இரு நிறுவனங்களும் என்ன மாதிரியான பணிகளை நாட்டில் மேற்கொள்ள இருக்கின்றன என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
நாட்டின் மாபெரும் ஆயில் உற்பத்தி நிறுவனமான இந்தியன் ஆயில் (Oil Corporation)-ம், டாடா பவர் குழுமம் (Tata Power Group)-இன் டாடா பவர் இவி சார்ஜிங் சொல்யூசன் லிமிடெட் (Tata Power EV Charging Solutions Limited), ஆகிய இரு நிறுவனங்களும் இந்தியாவில் இணைந்து செயல்படுவதற்காக கை கோர்த்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடு முழுவதும் பரந்த அளவில் எரிபொருள் விற்பனையகங்களைக் கொண்டிருக்கும் ஓர் ஆயில் உற்பத்தி நிறுவனமே இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகும். தன்னுடைய முக்கியமான ஆயில் விற்பனையகங்களில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்துக் கொள்வதற்கான வசதியை உருவாக்கும் பொருட்டே தற்போது டாடா பவர் இவி செல்யூசன்ஸ் லிமிடெட் உடன் இந்தியன் ஆயில் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது.
நாட்டில் தற்போது மின்சார வாகனங்களுக்கான தேவை பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. மேலும், தொடர்ச்சியாக நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அதேவேளையில், மின்சார வாகனங்களுக்கான அடிப்படை வசதி நாட்டில் போதிய அளவு இல்லாத நிலையே தென்படுகின்றது. குறிப்பாக, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையில் மிகப் பெரிய பற்றக்குறை நிலவுகின்றது.
இந்தமாதிரியான சூழலிலேயே தன்னுடைய முக்கிய பகுதிகளில் ஆயில் விற்பனையகங்களில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்துக் கொள்வதற்கான வசதிகளை உருவாக்கும் முயற்சியில் இந்தியன் ஆயில் களமிறங்கி இருக்கின்றது. இதற்காக டாடா பவர் குழுமத்துடன் அது கூட்டணியையும் தொடங்கி இருக்கின்றது. இந்த கூட்டணியின் வாயிலாக சுமார் 500 க்கும் மேற்பட்ட சார்ஜிங் பாயிண்டுகளை அது உருவாக்கி இருக்கின்றது.
ஃபாஸ்ட் மற்றும் அல்ட்ரா ஃபாஸ்ட் மின்வாகன (Fast and Ultra Fast EV) சார்ஜிங் மையங்களையே அது உருவாக்க இருக்கின்றது. இந்த மையங்கள் இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என இந்தியன் ஆயில் தெரிவித்து இருக்கின்றது. ஆனால், படிப்படியாக மட்டுமே அவை பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன.
அந்தவகையில், முதல் கட்டமாக மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, அஹமதாபாத், புனே மற்றும் கொச்சி உள்ளிட்ட நகரங்களிலும மற்றும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளான மும்பை- புனே எக்ஸ்பிரஸ்வே, சேலம்- கொச்சி மற்றும் சென்னை- குண்டூர் நெடுஞ்சாலைகளில் இந்த மையங்கள் அமைய இருக்கின்றன.
மின்சார வாகனத்தில் லாங் டிரிப் செல்பவர்கள் பயமின்றி (சார்ஜ் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சிமின்றி) பயணிக்க டாடா பவர் குழுமம் மற்றும் இந்தியன் ஆயிலின் இந்த முயற்சி உதவியாக இருக்கும். டாடா இதுபோன்று ஆயில் நிறுவனங்களுடன் கூட்டணியைத் தொடங்குவது முதல் முறையல்ல.
சமீபத்தில் டாடா பயணிகள் மின்சார வாகன நிறுவனம் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் உடன் கூட்டணியைத் தொடங்கியது. இந்த கூட்டணயின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள பாரத் பெட்ரோல் பங்க்குகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான பங்க்குகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.
இதற்கான பணிகளைத் தொடங்கும் விதமாகவே சமீபத்தில் இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் தொடங்கின. ஒட்டுமொத்த உலகமே மாசில்லா சுற்றுச்சூழலை உருவாக்கும் பொருட்டு மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றன. இதன் அடிப்படையில் காற்று மாசை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கம் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை அடியோடு ஒழிப்பதில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியாவும் இந்த முயற்சியை காலடியை எடுத்து வைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதன் ஆரம்பக்கட்டமாக நாட்டில் பழைய 10 மற்றும் 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இத்துடன் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியிலும் அரசு தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிக்கு உதவியளிக்கும் விதமாகவே டாடா பவர் - பிபிசிஎல் இணைவு மற்றும் டாடா பவர் - இந்தியன் ஆயில் நிறுவனங்களின் இணைவு அமைந்திருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








