மோதிய லாரி கரப்பான் பூச்சி போல கிடக்கு!! கல்லுப் போல் நின்ற டாடா கார் - இதுக்கு மேல வேறென்ன வேணும்?

டாடா பஞ்ச் (Tata Punch) கார் ஒன்று லாரி உடன் நேருக்கு நேர் மோதலுக்கு உள்ளான போதிலும் பயணிகள் அனைவரையும் காப்பாற்றி உள்ளது. இதனை கண்டு, காரின் உரிமையாளர் டாடா கார்களின் தரத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். எங்கு இந்த விபத்து நடந்து? எவ்வாறு நடந்தது? என்பது உள்ளிட்ட விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் சாலை விபத்துகளுக்கு பஞ்சமே இல்லை. தினந்தோறும் செய்திகளில் குறைந்தது ஒரு சாலை விபத்தையாவது பார்க்க முடிகிறது. இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது, அதிவேக பயணம் தான். அதேபோல், சாலையில் போதிய விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை உடன் வாகனம் ஓட்டாததும் பெரும்பாலான நேரங்களில் விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது.

car owner praises build quality

இதனாலேயே கார்களில் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்குங்கள் என மத்திய அரசு கேட்டுக் கொண்டு வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒருபடி மேலே போய் அதன் கார்களின் உடல் வலிமையையும் சிறப்பாக வழங்குகிறது. இதன் காரணமாக, சாலை விபத்துகளின் போது பல டாடா கார்கள் பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவங்களை பற்றி இதற்குமுன் பார்த்துள்ளோம்.

அந்த வரிசையில், டாடா பஞ்ச் கார் உரிமையாளர் ஒருவர், விபத்தில் இருந்து தன்னை பாதுகாத்ததாக தனது பஞ்ச் காரை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக, இணையத்தில் நமக்கு கிடைக்க பெற்றுள்ள வீடியோவின்படி பார்க்கும்போது, இந்த பஞ்ச் கார் உரிமையாளர் கவனிக்காமல் எதிரே வந்த லாரி உடன் தனது காரை தவறுதலாக மோதவிட்டுள்ளார்.

car owner praises build quality

காரின் முன்பக்கத்துடன் மோதிய அந்த லாரி, டயர் வெடித்ததினால் கண்ட்ரோலை இழந்து சாலையில் கவிழ்ந்தது. ஆனால், விபத்திற்கு காரணமான பஞ்ச் கார் கல்லு போல் சாலையில் நின்றுள்ளது. இந்த மோதலில் காரின் முன்பக்கம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. லாரிக்கு அந்த அளவிற்கு சேதாரம் ஆரம்பத்தில் இல்லையென்றாலும், கண்ட்ரோலை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட மணல் சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்திற்கு முழுக்க முழுக்க காரணம், பஞ்ச் கார் டிரைவர் தான். இதனை அவரும் ஒப்புக் கொண்டுள்ளார். தனது தவறினால் ஏற்பட்ட இந்த விபத்தில் இருந்து தன்னை தனது டாடா பஞ்ச் கார் காப்பாற்றி உள்ளதாகவும் ஆச்சிரியத்துடன் தெரிவித்துள்ளார். விபத்தின்போது, நல்லவேளையாக லாரியை பார்த்தவுடன் பஞ்ச் கார் டிரைவர் காரை நிறுத்தி உள்ளார்.

car owner praises build quality

ஆனால், நிறுத்துவதற்குள் கார் லாரியின் பாதைக்கு சென்றுவிட்டதால், விபத்து நடந்துவிட்டது. லாரி டிரைவரும் குறுக்கே காரை வருவதை கண்ட உடன் பிரேக் கொடுத்துள்ளார். ஆனால், அதற்குள் லாரி காரின் மீது மோதிவிட்டது. ஆதலால், இந்த விபத்தின்போது சம்பந்தப்பட்ட இரு வாகனங்களும் சற்று குறைவான வேகத்திலேயே மோதிக் கொண்டுள்ளன.

இருப்பினும், ஒரு பக்க டயர் வெடித்ததினால் லாரி கண்ட்ரோலை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த நிகழ்வுகள் யாவும் காரின் டேஸ்போர்டில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளன. டாடா பஞ்ச் கார் உரிமையாளர் தனது மனைவி மற்றும் 5 வயது மகனுடன் திருப்பதிக்கு சென்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

car owner praises build quality

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நெக்ஸான் கார்கள் இவ்வாறு விபத்தின்போது உள்ளே இருந்த பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவங்களை நிறைய முறை பார்த்துள்ளோம். இந்த முறை டாடா பஞ்ச் கார் ஒன்று பயணிகளின் உயிரை தனது உடல் வலிமையால் காப்பாற்றி உள்ளது. என்னதான் கார்களின் உடல் தரம் சிறப்பாக இருந்தாலும், வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் தேவை என்பதை மறக்காதீர்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, December 11, 2023, 17:04 [IST]
English summary
Tata punch car owner praises his car build quality check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X