கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட காரா இருக்குமோ! உசுர எடுக்கற கார்களுக்கு மத்தில தங்க-மாட்டு உயிர்கள காப்பாத்துது!!
மிகவும் பிரமாண்டமான உருவம் கொண்ட வாகனங்களுக்கு இடையில் சிக்கிய பின்னரும் கார் ஒன்று அதற்குள் இருந்தவர்களை உயிருடன் பாதுகாத்து இருக்கின்றது. இது ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் அமைந்து உள்ளது. குறிப்பாக, இரண்டு ராட்சத உருவம் கொண்ட வாகனங்களுக்கு இடையில் சிக்கி, முழுமையாக நசுங்கிய பின்னரும் அது உயிர்களைக் காப்பாற்றி இருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே ஆச்சரியத்துடன் சேர்த்து, அதிர்ச்சியையும் இந்த விபத்து சம்பவம் நமக்கு வழங்கி இருக்கின்றது.
இதற்கு காரணமானது டாடா பஞ்ச் (Tata Punch) கார் மாடல் ஆகும். ஆமாங்க இந்த காரே அப்பளம் போல் நொறுங்கிய பின்னரும் உயிர்களைக் பாதுகாத்திருக்கின்றது. உயிர்களைப் பாதுகாப்பதில் வல்லமை மிக்க கார் மாடலே பஞ்ச் ஆகும். அதேவேளையில், விலை மிகவும் மலிவானதும் கூட.

இருப்பினும் உசுருகளைக் காப்பாற்றதுவதில் அது கடவுளை போல செயல்பட்டு வருகின்றது. இதனாலேயே பலரும் இந்த காரை கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட வாகனம் கூறத் தொடங்கி இருக்கின்றனர். விபத்து மிக மோசமானதாக இருப்பதால் காரில் பயணத்தவர்களுக்கு சற்றே காயங்கள் ஏற்பட்டு இருக்கின்றது. ஆனால், உசுருக்கு ஆபத்தான சூழல் ஏற்படவில்லை.
பெரிய டிரக் மற்றும் டிரெய்லர் வாகனங்களுக்கு இடையிலேயே அந்த கார் சிக்கி இருக்கின்றது. விபத்திற்கான துள்ளியமான காரணம் என்னவென்பது தெரியவில்லை. ஆனால், தானேவில் உள்ள கேட்பரி மேம்பாலத்திலேயே இந்த மோசமான விபத்து நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. டாடா பஞ்ச் காரில் மொத்தமாக ஆறு பேர் வரை பயணித்ததாகக் கூறப்படுகின்றது.

அதில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க இந்த குட்டியான காரே காரணமாக இருக்கின்றது. டாடா பஞ்ச் ஓர் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல் ஆகும். தன்னுடைய இந்த தரத்தையே நிஜ வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டியிருக்கின்றது.
இந்த காரின் ஆரம்ப விலையே ரூ. 6 லட்சம் மட்டுமே ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த கார் இந்திய சந்தையில் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் என பன்முக அவதாரங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் இருவர்களுக்குமான இது காட்சியளிக்கின்றது. பயணிகளின் பாதுகாப்பு தரத்திற்காக பன்முக ஏர்பேக், ஏபிஎஸ், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை ஆங்கர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமல்ல இஎஸ்சி எனப்படும் ஸ்டாண்டர்டு எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் அம்சமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, மும்முனை சீட் பெல்ட், கார்னரிங் வசதிக் கொண்ட முன் பக்க பனி மின் விளக்கு, ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, பெரிமெட்ரிக் அலாரம், டிரைவர் மற்றும் கோ-டிரைவர்களுக்கான சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட அம்சங்களையும் டாடா மோட்டார்ஸ் இந்த காரில் வழங்கி இருக்கின்றது.
தொடர்ந்து, பிரேக் ஸ்வே கன்ட்ரோல் மற்றும் டயர் பஞ்சர் ரிப்பேர் கிட் உள்ளிட்டவற்றையும் இந்த காரில் டாடா வழங்கி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, இதுபோன்று இன்னும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் தன்னுள் தாங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், கரடு - முரடான சாலைகளை சமாளிக்கும் திறன் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.
மேலும், வயதான பயணிகள் எளிதில் ஏறி-இறங்க ஏதுவாக விரிவாக திறக்கும் டோர்களும் இந்த காரில் வழங்கி இருக்கின்றனர். இதனால்தான் இப்போது இந்த கார் விற்பனையில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் மின்சார வெர்ஷனுக்கும் நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் அதிக பாதுகாப்பு திறன் கார் மாடலாக பஞ்ச் உள்ளது. இதற்கு சான்றாகவ இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. குறிப்பாக, அப்பளம் போல் நொறுங்கியும் அது பாதுகாப்பை வழங்கி இருப்பதுதான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. டாடாவின் பெரும்பாலான தயாரிப்புகள் இப்படியே அதிக பாதுகாப்பானதாக உள்ளது. சின்ன சின்ன விபத்துகளிலேயே உசுர எடுக்கற கார்களுக்கு மத்தியில இந்த கார் தங்க-மாட்டு உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றது என்பது இதன் கூடுதல் சிறப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications









