டெஸ்ட் டிரைவிங்கின் போது விபத்தில் சிக்கிய கார்!! ஒரு ரூபாய் கூட ஷோரூம் கேட்கல - கஸ்டமர் அடுத்து செய்த காரியம்

டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்ததில் திருப்தி இல்லாமல் பலர் தங்களது கார் வாங்கும் கனவை மாற்றி கொண்டுள்ளனர். ஆனால் இங்கு ஒரு நபர் டெஸ்ட் டிரைவின் போது கார் விபத்தில் சிக்கிய போதிலும், அடுத்த நாளே புதிய காரை அதே ஷோரூமில் வாங்கியுள்ளார். யார் அந்த நபர்? விபத்தில் முடிந்த பின்பும் அவரை வசீகரித்துள்ள கார் எது? என்பது குறித்த விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.

புதிய காரை வாங்கும்போது அதனை டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் நம்மில் பலருக்கு ஆட்டோமொபைல் குறித்த தகவல்கள் அதிகளவில் தெரியாது. ஆனால் மற்றவர்களின் கார்களை இயக்கி இருப்போம். புதியதாக காரை வாங்குவதற்காக ஷோரூமிற்கு சென்றால், அங்கு டீலர்கள் கார்களை பற்றி பல விஷயங்களை கூறுவர்.

tata punch crashes while test drive

அவற்றுள் சில விஷயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும், சிலவற்றை அப்படியென்றால் என்ன என்பது கூட நமக்கு தெரிந்திருக்காது. ஆதலால், காரை வாங்குவதற்கு முன் ஒருமுறை ஓட்டி பார்த்தால் நன்றாக இருக்கும் என தோன்றும். எனவே, புதிய காரை வாங்கும்போது டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க அனுமதி கேட்பது ஒன்றும் கூச்சப்பட வேண்டிய விஷயம் அல்ல. இன்னும் சொல்லப்போனால், வாங்க விரும்பும் காரை பற்றி தெரிந்துக்கொள்ள டெஸ்ட் டிரைவ் அவசியமான ஒன்றே.

அவ்வாறு குஜராத்தில், டாடா பஞ்ச் காரை வாங்க டீலர்ஷிப் ஷோரூமிற்கு சென்ற ஒருவர், டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து கொண்டிருந்த சமயத்தில் கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதனால், அந்த வாடிக்கையாளர் மீண்டும் வந்து காரை வாங்குவாரா? என்ற கேள்வியுடன் இருந்த டீலர்ஷிப் அதிகாரிகளுக்கு ஆச்சிரியமளிக்கும் விதமாக, அடுத்த நாளே மீண்டும் ஷோரூமிற்கு வந்து தான் வாங்க விரும்பிய டாடா பஞ்ச் காரை வாங்கி சென்றுள்ளார்.

tata punch crashes while test drive

இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இந்த வாடிக்கையாளர் புதிய காரை வாங்க தனது சகோதரருடன் அருகில் இருந்த டாடா டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்ததில், டாடா பஞ்ச் கார் அவர்களுக்கு பிடித்துப்போக, டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க விரும்பியுள்ளனர். இதன்படி, சகோதரர்கள் இருவருடன் ஷோரூம் அதிகாரி ஒருவரும் ஷோரூமில் இருந்து டெஸ்ட் டிரைவ் பஞ்ச் காரை எடுத்து சென்றுள்ளனர்.

4-வழி நெடுஞ்சாலையில் 80-90kmph வேகத்தில் சென்று கொண்டிருந்த போது, இவர்களது காருக்கு முன்பாக சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டுள்ளது. லாரியில் மோதிவிடக்கூடாது என்பதற்காக டெஸ்ட் டிரைவ் பஞ்ச் காரை ஓட்டியவர் பிரேக்கை அழுத்தியப்படி, ஸ்டேரிங்கை வலதுப்பக்கம் நோக்கி திருப்பியுள்ளார். வலதுப்பக்கம் நீர் கால்வாய்கான குழாய் இருந்துள்ளது. அதனுடன் மோதியதில் 2-3 முறை கார் புரண்டுள்ளது.

tata punch crashes while test drive

இவ்வளவு பெரிய மோதலுக்கு பின்பும் காரினுள் இருந்து மூவரும் சிறு சிறு காயங்களுடன் வெளியே வந்துள்ளனர். இந்த ஒரு சம்பவமே காரை வாங்க வந்த வாடிக்கையாளரை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் காரணமாகவே அடுத்த நாளே ஷோரூமிற்கு மறுபடியும் வந்து, புத்தம் புதிய பஞ்ச் கார் ஒன்றை அந்த நபர் வாங்கியுள்ளார். டெஸ்ட் டிரைவ் காரை சேதப்படுத்தியதற்காக வாடிக்கையாளரிடம் இருந்து எந்த தொகையும் பெறப்படவில்லை என்று வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கார் ஷோரூம்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள் என்ற பேச்சு பரவலாக உள்ள நிலையில், டெஸ்ட் டிரைவ் காரை விபத்தில் சேதப்படுத்தியதற்காக வாடிக்கையாளரிடம் இருந்து பணம் வாங்காதது உண்மையில் ஆச்சிரியப்படுத்துகிறது. அதை விட ஆச்சிரியம் என்னவென்றால், 2-3 முறை பெல்டி அடித்தும் டாடா பஞ்ச் கார் பெரியதாக எந்தவொரு சேதாரமும் இன்றி வீடியோவில் காட்சி தருவதுதான்.

Source: Prateek Singh/YouTube

More from DriveSpark

Article Published On: Saturday, June 17, 2023, 15:29 [IST]
English summary
Tata punch crashes while test drive however customer buys new car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X