ஐபிஎல் போட்டியில் டாடா பஞ்ச் இவி காரை பெற்ற வீரர் இவரா? பந்துகளை சும்மா பறக்கவிட்டாரே!
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடந்து வந்தது. பரபரப்பான பல்வேறு திருப்பங்களை சந்தித்து இந்த போட்டிகள் நடைபெற்றது. சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர் ஒருவருக்கு டாடா நிறுவனம் தனது பஞ்ச் இவி காரை பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி இந்த ஐபிஎல் போட்டியில் இந்த டாடா பஞ்ச் இவி கார் பரிசை பெற்ற வீரர் யார்? இந்த காரில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன? என்ற விரிவான விபரங்களை தான் நாம் இங்கே காண போகிறோம்.
ஐபிஎல் போட்டிகளுக்கு நீண்ட ஆண்டுகளாக டாடா நிறுவனம் தான் முதன்மையான ஸ்பான்சராக இருந்து வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது ஒவ்வொரு கார்களை அனைத்து போட்டிகளிலும் காட்சிப்படுத்தி அந்த காரை சிறப்பாக விளையாடும் வீரர் ஒருவருக்கு பரிசாக வழங்கி வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போட்டிக்கும் இந்த பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி எலெக்ட்ரிக் ஸ்ட்ரைக்கர் அவார்டு என்ற பெயரில் இந்த விருது அறிவிக்கப்பட்டு, இந்த சீசன் முழுவதும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடிய வீரர் ஒருவருக்கு இந்த பரிசை வழங்க டாடா நிறுவனம் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்த சீசன் முடிந்த நிலையில் தற்போது. இந்த சீசனுக்கான அனைத்து பரிசுகளையும் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இப்படி இந்த சீசனில் எலெக்ட்ரிக் ஸ்ட்ரைக்கர் விருதை டெல்லி கேப்பிடல் அணியைச் சேர்ந்த பிரேசர் மெக்கார்க் என்ற வீரர் பெற்றுள்ளார். இவர் இந்த சீசன் முழுவதும் அடித்த ரன்களை வைத்து பார்க்கும் போது 234.04 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி உள்ளார். இதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் இந்தியாவில் இல்லை என்பதால் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிரவிஸ்ஹெட் இந்த விருதை வாங்கிச் சென்றார்.

பிரேசர் மெக்கர்க்கிற்கு வழங்கப்பட்ட டாடா பஞ்ச் எலெக்ட்ரிக் கார் என்பது லாங்க் ரேஞ்ஜ் எலெக்ட்ரிக் காராகும். இதில் 35 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் முழுமையாக சார்ஜ் செய்தால் 421 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகி வரும் சிறந்த எலெக்ட்ரிக் கார்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.
இந்த டாடா பஞ்ச் எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டுள்ள மோட்டாரை பொருத்தவரை 90 கிலோ வாட் பவரையும் 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள பேட்டரியை டிசி பாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் ஏற்றினால் வெறும் 56 நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.
இதுவே 7.2 கிலோ வாட் ஹவர் சார்ஜர் கொண்டு சார்ஜ் ஏற்றும்போது ஐந்து மணி நேரத்தில் சார்ஜ் ஏறிவிடும். சாதாரண 15 ஆம்ஸ் போர்ட்டபிள் சார்ஜர் கொண்டு சார்ஜ் ஏறும் போது 13.5 மணி நேரம் வரை தாராளமாக எடுத்துக் கொள்ளும்.
இந்த காரை பொறுத்தவரை 0-100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 9.5 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரேசர் மெக்கார்க்கிற்கு டாடா நிறுவனம் வழங்கிய இந்த பஞ்ச் இவி காரின் விலையைப் பொறுத்தவரை மார்க்கெட்டில் ரூபாய் 15.49 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த கார் மொத்தம் 5 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது, ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், அட்வெஞ்சர், எம்பவர்டு, எம்பவர்டு பிளஸ் ஆகிய வேரியன்ட்களில் இந்த கார் விற்பனையாகி வருகிறது. மேலும் கலர் ஆப்ஷனை பொருத்தவரை ஒரு சிங்கிள் கலர் ஆப்ஷனும் ஐந்து டூயல் டோன் கலர் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை காரின் உட்புறம் 10. 25 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இதுபோக 10.25 இன்ச் கொண்ட முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே இருக்கிறது. மேலும் காருக்குள் ஏர் பியூரிஃபையர், வெண்டிலேட்டட் சீட்டுகள் மற்றும் சன்ரூஃப் ஆப்ஷன்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு போட்டியின் போதும் மைதானத்திற்கு உள்ளே இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு போட்டியின் போதும் டிவி மற்றும் ஓடிடி தளங்களில் ஒளிபரப்பாகும் கிரிக்கெட் நிகழ்ச்சியில் இந்த கார் சில நொடிகள் காட்டப்பட்டது. இதன் மூலம் இந்த காருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் பஞ்ச் இவி கார் இடம் பெற்றுள்ளதால் இதன் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








