ரூ.6 லட்சம் தானே விலைனு சாதாரணமா நினைச்சிடாதீங்க!! ஓனருக்கு மறுபிறவி கொடுத்த டாடா கார்!

டாடா பஞ்ச் (Tata Punch) விபத்தில் இருந்து தனது உயிரை காப்பாற்றியதாக அந்த காரின் உரிமையாளர் மகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். விபத்தின்போது கார் பலமுறை ரோல்ஓவர் ஆன போதிலும் பஞ்ச் காரின் தரம் தனது உயிரை காப்பாற்றியுள்ளதாக பெரிமிதத்துடன் அவர் தெரிவித்துள்ளார்.

காரில் என்னென்ன பாதுகாப்பு தொழிற்நுட்பங்கள் உள்ளன என பார்த்து வாங்குவதை போல், காரின் கட்டமைப்பு எந்த அளவிற்கு வலிமையானதாக உள்ளது என்பதை அறிவதும் அவசியமாகும். இந்த விஷயத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எந்தவொரு சமரசமும் இன்றி நடந்துக் கொள்கிறது. இதனால்தான், க்ளோபல் என்சிஏபி-இல் நிறைய டாடா கார்கள் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளன.

tata punch owner thanked quality

இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட பாரத் என்சிஏபி-யிலும் டாடா மோட்டார்ஸின் ஹெரியர் மற்றும் சஃபாரி கார்கள் முதல் கார்களாக சோதனை செய்யப்பட்டு, முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளன. ஆனால், கடந்த டிசம்பர் 15ஆம் தேதி துவங்கிய பாரத் என்சிஏபி-இல் முதல் காராக டாடா மோட்டார்ஸின் பஞ்ச் சோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில், டாடா பஞ்ச் க்ளோபல் என்சிஏபி-இல் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. மக்கள் அதிக பேரால் வாங்கப்படும் சிறிய அளவிலான & விலை குறைவான கார் க்ளோபல் என்சிஏபி-இல் 5 ஸ்டார்களை பெற்றது இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனாலேயே பாரத் என்சிஏபி-யிலும் முழு 5 ஸ்டார்களை பெற்று பஞ்ச் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tata punch owner thanked quality

விபத்தின்போது டாடா பஞ்ச் கார், உள்ளே இருந்த பயணிகளின் உயிரை காப்பாற்றிய சம்பவங்கள் பலவற்றை இதற்குமுன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில், குஜராத்தில் டாடா பஞ்ச் காருடன் விபத்தில் சிக்கிய அந்த காரின் உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். குஜராத்தில், அங்க்லேஷ்வர் - பார்டோலி என்ற இரு பகுதிகளுக்கு இடையேயான நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

கார் தனது கண்ட்ரோலை இழந்ததால் விபத்து நடந்துவிட்டதாக கூறும் இந்த பஞ்ச் கார் உரிமையாளர், கார் எவ்வாறு தனது கண்ட்ரோலை இழந்தது என்பதை விளக்கமாக கூறவில்லை. வெள்ளை நிறத்திலான இந்த பஞ்ச் கார் விபத்தின்போது, சாலையில் பலமுறை உருண்டு சென்றதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

tata punch owner thanked quality

இந்த விபத்து தொடர்பான வீடியோவில் பார்க்கும்போது, கார் பலத்த சேதமடைந்து உள்ளது. காரின் முன் சக்கரம் ஒன்று தனியாக கழன்றுள்ளது. அப்படியென்றால், நிச்சயமாக சஸ்பென்ஷன் செட்-அப்கள் பலத்த அடிவாங்கி இருக்கும். ரோல் ஓவர் ஆனதில் காரின் ஷோல்டர்கள் கொஞ்சம் மடங்கி போகியுள்ளன.

விபத்து தொடர்பான வீடியோவில், காரினுள் ஏர்பேக் நல்லபடியாக விரிந்து கிடப்பதை காண முடிகிறது. விபத்தின்போது காரினுள் டிரைவர் மட்டுமே இருந்துள்ளார். அவர்தான் காரின் உரிமையாளரும். தான் சீட்பெல்ட் அணிந்திருந்ததால் காயம் எதுவும் இல்லாமல் தப்பித்துள்ளேன் என கூறும் இவர், தொழிற்நுட்ப வசதிகளை காட்டிலும் பாதுகாப்பான காரை மக்கள் வாங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

tata punch owner thanked quality

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அளவில் சிறிய கார்கள் பெரிய அளவில் வலுவான உடற்கூட்டை கொண்டிருக்காது என்கிற பேச்சு சந்தையில் நீண்ட காலமாகவே உள்ளது. ஆனால், அதனை டாடா பஞ்ச் உடைத்து தவிடுப்பொடி ஆக்கி வருகிறது. க்ளோபல் என்சிஏபி அமைப்பு 5 ஸ்டார்களை சும்மா தூக்கி கொடுத்திடாது என்பதற்கு குஜராத்தில் நடந்துள்ள இந்த விபத்து சரியான உதாரணம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 23, 2023, 14:51 [IST]
English summary
Tata punch owner thanked his car build quality check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X