கம்மி பட்ஜெட்டில் காரில் நீச்சல் குளத்தை உருவாக்கிய இளைஞர்! சூட்டை தணிக்க சூப்பரான வேலையை பாத்திருக்காங்க!
அடிக்கிற வெயிலுக்கு 24 மணி நேரமும் தண்ணியிலேயே இருக்கலாம் போலிருக்கு. அப்படி இருக்கு இந்த சம்மர். வெயில், மிகப் பெரிய அளவில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. பரவலாக மழை பொழிந்தாலும் பல பகுதிகளில் காற்று சுற்று சூடான நிலையிலேயே வீசிய வண்ணம் இருக்கின்றது.
இந்த நிலையே சிலருக்கு புதிய புதிய யோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்களுடைய காரில் மலிவு விலை நீச்சல் குளத்தை உருவாக்க இந்த சம்மர் தூண்டி இருக்கின்றது. காரில் நீச்சல் குளமா? என நீங்கள் வாயை பிளக்கலாம் இதை இளைஞர்கள் ஏற்கனவே உருவாக்கிவிட்டனர்.

மேலும், அந்த நீச்சல் குளத்தை வைத்து அவர்கள் எப்போதோ என்ஜாய் செய்யவும் ஆரம்பித்துவிட்டனர். இளைஞர்கள் நீச்சல் குளத்தை எந்த கார் மாடலில் உருவாக்கினார்கள்? எதைக் கொண்டு காரில் நீச்சல் குளத்தை உருவாக்கினார்கள்? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
டாடா காரின் பின்பகுதியிலேயே இளைஞர்கள் நீச்சல் குளத்தை உருவாக்கி இருக்கின்றனர். தார்பாயைக் கொண்டே அவர்கள் இந்த காரில் நீச்சல் குளத்தை உருவாக்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. கேரளாவிலேயே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. அவர்கள் பயன்படுத்தி இருப்பது டாடா சஃபாரி (Tata Safari) கார் மாடல் ஆகும்.

இந்தியாவில் இந்த கார் மாடல் ரூ. 16.19 லட்சம் என்கிற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் ஆரம்ப நிலை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஒட்டுமொத்தமாக 29 விதமான வேரியண்டுகளில் இந்த எஸ்யூவி கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இந்தியாவின் அதிக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அதிக பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடலாகவும் சஃபாரி காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலையே கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் தற்போது நீச்சல் குளம் கொண்ட காராக மாற்றி இருக்கின்றனர். நண்பர்கள் சிலரின் உதவியுடன் அவர் இந்த வேலையைச் செய்திருக்கின்றார்.
மேலும், அந்த டாடா காரின் உரிமையாளர் ஒரு யுட்யூபர் என கூறப்படுகின்றது. யுட்யூப்பில் பார்வையாளர்களைக் கவரும் நோக்கிலேயே அவர் நீச்சல்குளம் வசதியை டாடா சஃபாரி காரில் வழங்கி இருக்கின்றார். இதற்கு அவர் ஒரு சில ஆயிரங்களை மட்டுமே செலவு செய்திருப்பார் என தெரிவிக்கின்றது.
ரூ. 600இல் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் தார் பாயையே காரின் பின்பக்கத்தின் நான்கு மூலைகளிலும் கட்டி ஓர் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பை அவர் உருவாக்கி இருக்கின்றார். அதாவது, தார்பாய் மற்றும் கயிறு ஆகியவற்றை மட்டுமே கொண்டு சஃபாரி காருக்குள் அவர் நீச்சல் குளத்தை தயார் செய்திருக்கின்றார்.
இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. டாடா சஃபாரியின் பின் பக்கமும் இதற்கு மிக சிறப்பாக ஒத்துழைத்திருக்கின்றது. மிகப் பெரிய உருவம் கொண்டது சஃபாரி என்பதால் மிக சுலபமாக இளைஞர்கள் அதன் பின்பக்கத்தில் நீச்சல் குளத்தை உருவாக்கி இருக்கின்றனர். மூன்று வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட கார் மாடல் என்பதாலேயே இது சாத்தியமாகி இருக்கின்றது.
இதன் முன் வரிசை தவிர மற்ற அனைத்து இரண்டு வரிசை இருக்கைகளும் மடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையிலேயே மடிக்கப்பட்ட இருக்கைகள் மேலே தார்பாய் கட்டப்பட்டு இருக்கின்றது. நீர் நிரப்பட்டு இருக்கின்று. மேலும், அதில் மூன்று பேர் வரை குளிக்கவும் செய்தனர். இதைத்தொடர்ந்து அந்த காரை கொண்டு அவர் ஓர் சிறிய ரைடையும் செய்தனர்.
இந்த ரைடின்போது காரின் பக்கவாட்டு பகுதி ஏர்-பேக் திடீரென திறந்துவிட்டதை நம்மால் காண முடிகின்றது. எனவே இது ஓர் ஆபத்தான செயல் என்பதை நம்மால் அறிய முடிகின்றது. காரில் நீச்சல் குளம் உருவாக்கியதோடு, அதை அவர்கள் சாலையிலும் இயக்கி இருக்கின்றனர் என்பதால் யுட்யூபர் மீது விரைவில் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை இயக்குவது அல்லது மாடிஃபிகேஷனை செய்வது மோட்டார் வாகன சட்டத்தின் குற்றமாகும். இந்த செயலுக்கு வாகனம் பறிமுதல் மற்றும் உச்சபட்ச அபராதம் என கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மாதிரியான நடவடிக்கையே யுட்யூபர் மீது கேரளா எம்விடி எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








