ஹூண்டாய் சாண்ட்ரோ காரோடு டாடா சஃபாரியை மோத விட்டா இதுதான் நடக்கும்!! எல்லாம் காசு இருக்குற திமிரு!
டாடா சஃபாரி ஸ்டோர்ம் (Tata Safari Storme) என்ற மிக பெரிய காருடன் டிரிஃப்ட் செய்யும்போது மோதலுக்கு உள்ளான ஹூண்டாய் சாண்ட்ரோ காரின் முன்பக்கம் அப்பளம் போல் நசுங்கியுள்ளது. எங்கு இந்த சம்பவம் நடைபெற்றது? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலாக இந்த சம்பவம் குறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
வாகனங்களில் சாகசங்களை செய்வது கடந்த பல வருடங்களாகவே ஓர் பொழுதுப்போக்காக விளங்கி வருகிறது. வெளிநாடுகளில்தான் இவ்வாறான செயல்களில் ஈடுப்படுவோர் அதிகம் என்றாலும், சமீப வருடங்களாக நம் இந்தியாவிலும் பலர் டிரிஃப்ட் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். எப்போதும், எந்தவொரு நேரத்திலும் வாகனங்களில் சாகசங்கள் ஆபத்தானதே ஆகும்.

அவ்வாறு சாகசம் செய்து ஆபத்தில் சிக்கிக்கொண்ட வாகன ஓட்டிகள் பலரை இதற்குமுன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில் மற்றொரு சம்பவம் டாடா சாஃபரி மற்றும் ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களுக்கு இடையே நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து நமக்கு கிடைக்கப்பெற்றுள்ள வீடியோவில் சிறு சிறு துண்டுகளாக பல்வேறு விதமான காட்சிகளை பார்க்க முடிகிறது.
வீடியோவின் 2ஆம் பாதியில் சாண்ட்ரோ கார் உடன் முன்பக்கமாக சஃபாரி ஸ்டோர்ம் கார் மோதுவதை காணலாம். மஹிந்திரா பொலேரோ கார் ஒன்றுடன் டிரிஃப்ட் சாகசத்தில் ஈடுப்பட்டிருந்த இந்த டாடா சஃபாரி ஸ்டோர்ம் காருக்கு குறுக்கே கருப்பு நிற ஹூண்டாய் சாண்ட்ரோ கார் வந்துள்ளது. இந்த எதிர்பாராத மோதலில் ஹூண்டாய் சாண்ட்ரோ காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்துள்ளது.
மோதலுக்கு உள்ளான சாண்ட்ரோ காரிலும் முன்னதாக தனியாக சாகசம் செய்துள்ளனர். ஆனால் மோதலுக்கு உள்ளான சமயத்தில் பொலேரோவும், சஃபாரி ஸ்டோர்ம் கார்கள் மட்டுமே வட்டம் போல் சுற்றி கொண்டிருந்தன. பொலேரோவுக்கும், சஃபாரி காருக்கும் இடையே நன்கு இடைவெளி இருந்தது. இருப்பினும், குறுக்கே வேறொரு வாகனம் வரலாம் என்பதை இந்த சாகச செயலில் ஈடுப்பட்டவர்கள் யோசிக்கவில்லை போலும்.
இந்த மோதலில் எவரொருவருக்கும் காயம் ஏற்பட்டதுபோல் தகவல் இல்லை. இந்த மோதலில் டாடா சஃபாரி காரின் முன்பக்கமும் சேதாரத்திற்கு உள்ளாகியுள்ளது என்றாலும், சஃபாரி ஸ்டோர்ம் அளவில் பெரிய கார் என்பதால் சேதாரங்கள் அவ்வளவாக இல்லை. அளவில் சிறிய கார் என்பதாலேயே சாண்ட்ரோ காரின் முன்பக்கம் அப்பளம் போல் நசுங்கி உள்ளது.
நல்லவேளையாக இந்த சாகசங்களை காலி மைதானத்தில் செய்துள்ளனர். அதனால் சேதாரம் இரு கார்களுடன் நின்றுள்ளது. பொது சாலையில் செய்திருந்தால் பாதிப்புகள் இன்னும் அதிகமாக ஏற்பட்டிருக்கலாம். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள இரு கார்களும் தற்சமயம் சந்தையில் விற்பனையில் இல்லை. பட்ஜெட் விலை காரான சாண்ட்ரோவின் விற்பனையை சமீபத்தில்தான் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுத்தியது. சஃபாரி என்ற பெயரில் டாடா மோட்டார்ஸ் ஒரு எஸ்யூவி காரை விற்பனை செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவ்வாறான சம்பவங்கள் ஏன் ஆபத்தானவை என்பதை இந்த சாண்ட்ரோ காரின் முகத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த சம்பவம் எங்கு நடைபெற்றுள்ளது என்பதை அறிய முடியவில்லை. ஏனெனில் மோதலுக்கு உள்ளான கார்களில் சாண்ட்ரோ டெல்லி பதிவெண்ணையும், டாடா சஃபாரி ஸ்டோர்ம் ராஜஸ்தான் மாநில பதிவெண்ணையும் கொண்டுள்ளன. ஆகையால், இந்த இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒரு பகுதியில்தான் இந்த விபத்து நடந்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








