மாருதி ஐடியாவை தூக்கி குப்பையில போடுங்க.. டாடா திட்டம் தான் ஜெயிக்க போகுதுன்னு டாடாவே சொல்லுதுபா...
மாருதி, டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் கையில் எடுத்த ஹைபிரிட் இன்ஜின் மீது டாடாவிற்கு நம்பிக்கை இல்லை என்றும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஹைபிரிட் கார்களை தயாரிக்கும் திட்டம் இல்லை எனத் திட்டவட்டமாக தெரியவந்துள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம்.

இந்தியாவில் தற்போது பிஎஸ் 6 மாசுக் கட்டுப்பாடு அமலில் இருப்பதால் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையை மிகக் குறைவான அளவில் இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு இணங்க செயல்படும் இன்ஜின்களை தயாரிப்பதில் வாகன தயாரிப்பு நிறுவனம் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாகப் பல நிறுவனங்களின் டீசல்இன்ஜின்கள் இந்த மாசுக் கட்டுப்பாட்டு விதிக்குள் இருக்கும்படி தயாரிக்க முடியவில்லை. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் கார்களில் டீசல் இன்ஜினை நீக்கினர்.

பொதுமக்கள் அதிக மைலேஜிற்காக தான் பெட்ரோல்காரை விட டீசல்காரை தேர்வு செய்கின்றனர். பெட்ரோல் காரிலேயே இந்த மைலேஜை கொடுத்தால் மக்களுக்கு டீசல் கார்களுக்கான அவசியம் இருக்காது என எண்ணிய நிறுவனங்கள் பெட்ரோல் காரில் மைலேஜை கொடுக்க என்ன வழி என யோசித்தனர். இதற்காக மாருதி, டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் கண்டு பிடித்த வழி தான் ஹைபிரிட் இன்ஜின்.

அதாவது ஒரே காரில் எலெக்ட்ரிக் இன்ஜினும், பெட்ரோல் இன்ஜினும் சேர்ந்தே இருக்கும். இந்த ரக கார்களில் குறிப்பிட்ட பவர் வரை பெட்ரோல் இன்ஜினும் குறிப்பிட்ட பவருக்கு மேல் எலெக்ட்ரிக் இன்ஜினும் செயல்படும்படி டிசைன் செய்திருப்பார்கள். தற்போது மாருதி நிறுவனம் கிராண்ட் விட்டாரா என்ற காரையும், டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் என்ற காரையும் இந்தியச் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்த கார்களில் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தாலும், இதில் இருக்கும் எலெக்ட்ரிக் இன்ஜினால் அதிக மைலேஜ் தருகிறது. இதனால் பலர் எதிர்காலத்தில் ஹைபிரிட் கார்கள் தான் அதிகம் இருக்கும் எனப் பேசி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா நிறுவனம் இந்த ஐடியாவை வேண்டாம் என ஒதுக்கியுள்ளது. அந்நிறுவனம் ஹைபிரிட் கார்களை தயாரிக்கப்போவதில்லை என முடிவு செய்துள்ளது.

டாடா பயணிகள் மற்றும் எலெக்ட்ரிக் வாகன நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலேஷ் சந்திரா இது குறித்துப் பேட்டியளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : "ஹைபிரிட்டில் டாடா நிறுவனம் முதலீடு செய்யவில்லை. இதனால் திடீரென நாங்கள் ஹைபிரிட்டிற்கு மாற வேண்டிய அவசியமும் இல்லை. எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும், அதில் எங்கள் கவனத்தைச் செலுத்த நினைக்கிறோம். " எனக் கூறியுள்ளார்.

டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இதுவரை 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணத்தை முதலீடு செய்துள்ளது. மேலும் அவர் கூறும் போது "நாங்கள் இந்த தொழிற்நுட்பம்தான் எதிர்காலத்தில் பெரிய அளவில் விற்பனையாகும் என நினைக்கிறோம். அதே நேரம் ஏதேனும் காரணங்களால் இந்த எலெக்ட்ரிக் கார் தொழிற்நுட்பம் மக்களால் ஒதுக்கப்பட்டு,ஹைபிரிட் கார்கள் பிரபலமடைந்தால் எதிர்காலத்தில் அதை தயாரிக்க முடிவு செய்வோம். ஆனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஹைபிரிட்டை கையில் எடுக்கும் எண்ணம் துளி கூட இல்லை. " எனக் கூறினார்.

எலெக்ட்ரிக் வாகன மார்கெட்டில்தற்போது டாடா தான் கொடி கட்டி பறந்து வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ள நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் டாடா நிறுவனம் நெக்ஸான் இவி மேக்ஸ், மற்றும் டிகோர் இவி காரை அப்டேட் செய்வது என சில மாற்றங்களை அந்த கார்களில் கொண்டு வந்தது பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டாடா நிறுவனம் தனது டியாகோ காரின் இவி வெர்ஷனையும் அறிமுகப்படுத்தியது. இந்த கார் இந்தியாவிலேயே குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக ரூ8.49 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த காரிலும் ஏராளமான வேரியன்ட்கள் உள்ளன. இந்த கார் முழு சார்ஜில் 315 கி.மீ ரேஞ்ச் பயணிக்கும் திறன் கொண்டது என் எம்டிசி சான்றழித்துள்ளது.

இந்த காரில் 4 விதமான சார்ஜிங் ஆப்ஷன்கள், மல்டி ரீ-ஜென் மோட்கள், என பலஆப்ஷன்கள் இருப்பது மக்களை அதிகம் ஈர்த்தது இந்த காருக்கான புக்கிங் துவங்கிய அன்றே 10,000 கார்கள் புக் செய்யப்பட்டன. டாடா நிறுவனம் இந்நிறுவனம் குறிப்பிட்ட புக்கிங் பவருவம் மட்டுமே என அறிவித்த நிலையில் முதல் நாளே இந்த புக்கிங் வந்துவிட்டது. இதையடுத்து டாடா நிறுவனம் அடுத்த 10 ஆயிரம் கார்களுக்கும் இதே விலை என்ற அறிவிப்பைச் செய்துள்ளன. டாடா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் இன்னும் ஏராளமான எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








