பழய சியாரா காரா இது! ஷோரூம்ல இருந்து புதுசா இறக்கினத போலிருக்கு! ரத்தன் டாடா இருந்தா இவங்கள பாராட்டியிருப்பாரு
டாடாவின் மிக சிறந்த தயாரிப்புகளில் சியாரா-வும் ஒன்று. இந்த கார் மாடல் இப்போது விற்பனையில் இல்லை. அதேவேளையில், இது விற்பனையில் இருந்த காலகட்டத்திலும் பெரிய அளவில் மார்க்கெட்டை கவரவில்லை. அதற்காக சியாரா காரை தரமற்ற தயாரிப்பு என்று கூறிவிட முடியாது. சற்று உயரிய விலையில் இருந்த காரணத்தினாலும், சந்தையில் நிலவிய கடுமையான போட்டியின் காரணமாகவும் அது இந்தியர்களின் கவனத்தைக் கவர தவறிவிட்டது. ஆனால், இப்போது இந்த காருக்கு மிகப் பெரிய மார்க்கெட் கிடைக்கும் என டாடா மோட்டார்ஸ் நம்புகின்றது.
இதன் அடிப்படையிலேயே அதை மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் டாடா மோட்டார்ஸ் களமிறங்கி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மிகவும் பழைய டாடா சியாரா கார் ஒன்று ஷோரூமில் இருந்து இப்போதுதான் இறக்கியதைப் போல புதிதாக மாற்றப்பட்டு இருக்கின்றது. அதன் வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, கேரளாவிலேயே பழைய சியாரா கார் புதிதுபோல் மாற்றப்பட்ட சம்பவம் அரங்கேறி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. மிக முக்கியமாக வீடியோவின் வாயிலாக வெறும் 3.25 லட்சம் ரூபாய் செலவிலேயே அக்கார் புதிதுபோல் மாற்றப்பட்டு இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.
இந்த தகவல் பழைய கார் காதலர்களின் கவனத்தை மிகப் பெரிய அளவில் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. இரண்டு விதமான வண்ணங்களில் இந்த கார் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும், மிக சிறப்பான வகையில் அது புதிய நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டு இருப்பதும் இந்த வீடியோ வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.
பச்சை மற்றும் வெள்ளை நிறங்களாலேயே இந்த கார் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, இந்த காரில் ஆஃப்-ரோடு பயணங்களுக்கான அம்சங்கள் சிலவும் சேர்க்கப்பட்டு உள்ளன. அந்தவகையில், பம்பர், வீல் மற்றும் டயர்கள் ஆகியவை ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கானதாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதுபோல் இன்னும் பல அம்சங்கள் டாடா சியாராவில் மாற்றப்பட்டு இருக்கின்றன.
இதனால்தான், புத்தம் புதிய சியாராவாக இந்த பழைய சியாரா தற்போது காட்சியளிக்கின்றது. அதேவேளையில், காரின் உள்பக்கத்தில் எந்தவொரு பெரிய மாற்றமும் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சியாராவின் ஒரிஜினல் பாகங்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. உதாரணமாக, ஸ்டியரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் இன்னும் சில பாகங்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
தொடர்ந்து, பயணிகளின் சௌகர்யமான பயண அனுபவத்திற்கான சில அம்சங்களும் இந்த வாகனத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன. அந்தவகையில், ஹெட்ரெஸ்ட்டுகள் மற்றும் 2 ஸ்பீக்கர்கள் - 1 ஊஃபர் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றையும் இந்த கார் பெற்றிருக்கின்றது. காரை போலவே இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் மறு சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது.
இது அந்த காருக்கு மிகப் பெரிய சிறப்பை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது. ஸ்பீடோ மீட்டர், டேக்கோ மீட்டர், ஓடோ மீட்டர் மற்றும் எரிபொருளின் அளவு ஆகியவற்றின் தகவல்களை வழங்கும். டாடா சியாராவில் முன்னதாக நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் 2.0 லிட்டர் 483 டிஎல் டீசல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 63 எச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. பின்னாளில் டர்போ டீசல் இன்-லைன் 4 எஞ்சின் சியாராவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இதில் எந்த எஞ்சினை இந்த சியாரா கொண்டிருக்கின்றது என்பது துள்ளியமாக தெரியவில்லை. அதேவேளையில், டாடா மோட்டார்ஸ் விரைவில் இந்த சியாராவை புதிய அவதாரத்தில் விற்பனைக்குக் களமிறக்கும் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதலில் அது மின்சார வெர்ஷனிலேயே சியாரா விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. தற்போது டாடா சஃபாரிக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே மிக சிறப்பான வரவேற்பு சியாராவிற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








