டாடா சுமோவை இப்படிப்பட்ட தோற்றத்தில் வைத்திருப்பவர் உலகத்திலேயே இவர் மட்டும்தான்... எதுக்காக தெரியுமா?

டாடா சுமோ (Tata Sumo) கார் ஒன்று மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 4x4 டிரைவ் சிஸ்டம் உடன் இயங்கும் என கூறப்படும் இந்த டாடா சுமோ காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் ஓர் ஐகானிக் கார் என்றால் அதில் டாடா சுமோவும் ஒன்று. குறிப்பாக 1994இல் அறிமுகப்படுத்தப்பட்ட சுமோவின் முதல் தலைமுறை மாடலுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் தற்போதைக்கு உள்ள மிகவும் சில சுமோ கார்களில் பெரும்பாலானவை அதன் முதல் தலைமுறை மாடல் ஆகும்.

modified Tata Sumo looks super rugged

சுமோ கார்கள் 4x2 டிரைவ் சிஸ்டத்துடனே உருவாக்கப்பட்டன. சுமோவின் 4x4 வெர்சன் இராணுவ பயன்பாட்டிற்காக மட்டுமே தயாரிக்கப்பட்டு, இந்திய இராணுவத்திடம் வழங்கப்பட்டது. இருப்பினும், இப்போது இராணுவத்திலும் அவ்வளவு சுமோ 4x4 கார்கள் பயன்பாட்டில் இல்லை. பழையதாகிய காரணத்தால் பல சுமோ 4x4 கார்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டன. பயன்பாட்டில் இருக்கும் மிகவும் சில சுமோ 4x4 கார்களில் ஒன்றுதான் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

இந்த சுமோ 4x4 வாகனம் ஆனது ராஜஸ்தானில் காட்வட் சஃபாரி கேம்ப் என்ற சுற்றுலா நிறுவனத்தை நடத்திவரும் பரிக்‌ஷிட் சிங் டெயோரா என்பவருக்காக இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது. காரில் முன் & பின்பக்கத்தில் வழக்கமான பம்பர்கள் நீக்கப்பட்டு, அவற்றிற்கு பதிலாக ஆஃப்-ரோடு பம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்காகவே இத்தகைய பம்பர்களை உருவாக்கினார்களா அல்லது வேறொரு வாகனத்தில் இருந்து கழற்றி இந்த பம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

modified Tata Sumo looks super rugged

சுமோவின் 15-இன்ச் சக்கரங்களில் அளவில் பெரியதான 33/12.5 ஆர்15 இன்ச் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கேற்ப சக்கரத்திற்கு மேல் வழங்கப்படும் வளைவுகள் பெரியதாக்கப்பட்டுள்ளன. இந்த மாடிஃபிகேஷன் மாற்றங்களே இந்த சுமோ காரை மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் காட்சியளிக்க வைத்துள்ளது. மேலும், டயர்களின் அளவு அதிகமாகியுள்ளதன் காரணமாக காரின் உயரமும் அதிகரித்துள்ளது. இதனால் மற்ற சுமோ கார்களை காட்டிலும் இந்த சுமோ வாகனம் கூடுதல் கம்பீரமான தோற்றத்தை பெற்றுள்ளது.

இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, டாடா லாரிகளில் பொருத்தப்படும் பெரிய விங் மிரர்கள் இந்த சுமோவில் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற மாடிஃபிகேஷன் மாற்றங்கள் என்று பார்த்தால், ஸ்னோர்கில் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. 14-லிட்டர் ட்ரோபிகூல் குளிர்சாதனை பெட்டி, 5-ஆம்பியர் பவர் அவுட்புட் சாக்கெட் உடன் 0.5 கிலோ வோல்ட்.ஆம்பியர் இன்வெர்டர் மற்றும் ராக் ஸ்லைடர் போன்றவையும் புதியதாக இடம்பெற்றுள்ளன.

modified Tata Sumo looks super rugged

காரை சுற்றிலும் ஹெட்லைட்களை எல்இடி-ஆக மாற்றியுள்ளனர். காரின் உட்பக்க கேபினில் கூட எல்இடி விளக்குகளை பார்க்க முடிகிறது. உட்பக்கத்தில் லெதர் இருக்கைகள், கப் ஹோல்டர்கள், செண்டர் கன்சோல் மற்றும் நாவிகேட்டர் விளக்கு உள்ளிட்டவற்றையும் பார்க்க முடிகிறது. இந்த படங்களில் காட்சித்தரும் சுமோ காரில் லிட்டருக்கு 9-10 கிமீ மைலேஜை பெறலாம் என கூறப்படுகிறது. இந்த சுமோவில் 2.0 லிட்டர் இன்-டைரக்ட் டர்போசார்ஜ்டு, இண்டர்கூல்டு டீசல் என்ஜின் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: டாடா சுமோ 4x4 காரை பெறுவதே அரிதான ஓர் விஷயமாகும். இந்திய இராணுவத்தின் சார்பில் ஏலம் விடும்போது வாங்கினால் மட்டுமே உண்டு. அதிலிலும் இந்த காலத்தில் ஏலத்தில் கூட சுமோ 4x4 காரை பார்க்க முடியாது. இப்படிப்பட்ட தற்போதைய சூழலில் சுமோ 4x4 காரை இவ்வாறான முரட்டுத்தனமான தோற்றத்தில் பெற்றிருப்பவர் உண்மையில் அதிர்ஷ்டசாலி என்றுதான் சொல்ல வேண்டும். இந்த மாடிஃபிகேஷனுக்கு மொத்தம் எவ்வளவு செலவாகியது என்பது தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 9, 2023, 14:19 [IST]
English summary
Tata sumo 4x4 modified to rugged look
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X