இது டாடா கார் என்று சொன்னால் சத்தியமா யாரும் நம்ப மாட்டாங்க!! ஒரு காலத்தில் எப்படி இருந்த கார்...!

டாடா சுமோ (Tata Sumo) கார் ஒன்று இன்றைய கால மாடர்ன் கார்களுக்கு போட்டியளிக்கும் அளவிற்கு சிறப்பானதாக மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பலரது கவனத்தை பெற்றுள்ளது. இந்த மாடிஃபை சுமோ காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவில் ஒரு காலத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற எம்யூவி கார்களுள் ஒன்று டாடா சுமோ ஆகும். 1994ஆம் ஆண்டில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட டாடா சுமோ கார்கள் 2019ஆம் ஆண்டு வரையில் கிட்டத்தட்ட 25 வருடங்களாக விற்பனையில் இருந்தன. இந்த 25 வருடங்களில் பலமுறை சுமோ கார்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

tata sumo grande car modifed

மேலும், இந்த 25 வருடங்களில் பல்வேறு விதமான பயன்பாடுகளுக்காக டாடா சுமோ கார்கள் வாங்கப்பட்டன. அதாவது, சொந்த பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, டாக்ஸி உள்ளிட்ட கமர்ஷியல் பயன்பாடுகளுக்காகவும் சுமோ கார்கள் அதிகம் விற்பனை செய்யப்பட்டன. ஏற்கனவே கூறியதுபோல், விற்பனையில் இருந்த 25 வருடங்களில் பல்வேறு விதமான சுமோ கார்கள் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டன.

அதில் ஒன்றுதான், சுமோ கிராண்டே ஆகும். ஆனால், சாதாரண சுமோ கார்கள் பெற்ற அளவிற்கு சுமோ கிராண்டே காரினால் வாடிக்கையாளர்களை பெற முடியவில்லை. இத்தனைக்கும், வழக்கமான சுமோ காரின் விற்பனையை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக சுமோ கிராண்டே காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆனால், சுமோ கிராண்டே காருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால், மீண்டும் பழைய சுமோ காரை டாடா விற்பனைக்கு கொண்டுவந்தது.

tata sumo grande car modifed

இதனால்தான், சுமோ கார்களை பார்க்க முடிந்த அளவுக்கு சுமோ கிராண்டே கார்களை தற்போது சாலைகளில் காண முடிவதில்லை. ஆனால், அப்படிப்பட்ட சுமோ கிராண்டே காரை இப்போதும் வைத்திருக்கும் கஸ்டமர் ஒருவர் தனது சுமோ கிராண்டே காரை பிரத்யேகமான தோற்றத்தில் மாடிஃபிகேஷன் செய்துள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கருப்பு நிறத்திலான சுமோ கிராண்டே காரை காணலாம்.

சுமோ கிராண்டே முழுவதுமாக மாடிஃபை செய்யப்பட்டு, முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், அதற்கேற்ப காருக்கு முழுவதுமாக கருப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது. காரின் முன்பக்க கிரில் பகுதி கூட கருப்பு நிறத்தில் உள்ளதை வீடியோவில் காணலாம். முன்பக்க கிரில்லிற்கு மேற்பகுதியிலும், காரின் மேற்கூரையிலும் துணை விளக்குகள் பொருத்தப்பட்டு இருப்பதை காணலாம்.

இந்த குறிப்பிட்ட சுமோ கிராண்டே காரில் ஸ்மோக்டு எஃபெக்ட் உடன் ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. எல்இடி டி.ஆர்.எல்-கள் ரிங்-டைப்பில் நிறத்தை மாற்றக்கூடியவைகளாக உள்ளன. இவற்றை வைத்து பார்க்கும்போதே, இது மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனம் என்பதை எளிதாக அடையாளம் காண முடிகிறது. முன்பக்க பம்பர் மாற்றப்படவில்லை என்றாலும், பம்பர் பாதுகாப்பான் புதியதாக பொருத்தப்பட்டுள்ளது.

இந்த சுமோ கிராண்டே காரில் மிக முக்கிய அம்சமாக, புதிய டிசைனிலான அலாய் சக்கரங்களும், ஆஃப்-ரோடு டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் காரணமாகவே, வழக்கமான உயரத்தை காட்டிலும் இந்த குறிப்பிட்ட சுமோ கிராண்டே கார் கூடுதல் உயரமானதாக உள்ளது. அதுமட்டுமின்றி, காரை உயரமாக தூக்கிக் காட்ட வேண்டும் என்பதற்காக லிஃப்ட் கிட்டை இந்த சுமோ கிராண்டே கார் ஓனர் வாங்கியுள்ளார்.

tata sumo grande car modifed

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாதாரண டாடா சுமோ கார்களை இன்றைய காலத்தில் சாலையில் காண்பதே அரிதானதாக இருக்கும் நிலையில், இது அதனை காட்டிலும் அரிதான சுமோ கிராண்டே கார் ஆகும். அதுமட்டுமின்றி, இது மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. ஆதலால், இவ்வாறான ஒரு சுமோ காரை நீங்கள் உங்கள் வாழ்வில் பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த மாடிஃபிகேஷன்களுக்கு மொத்தம் ஆன செலவு குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, May 16, 2024, 23:59 [IST]
English summary
Tata sumo grande car modified to rugged look check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X