2 ட்ரக்குகளுக்கு இடையில் சிக்கியும் பயணிகள் சேஃப்.. டாடாவோட தயாரிப்ப பாத்து எல்லா மிரண்டு நிக்குறாங்க!

ரெண்டு ட்ரக்குகளுக்கு இடையில் சிக்கியும் காரில் பயணித்தவர்களுக்கு ஒன்னுமே ஆகவில்லை. இவ்வளவு மோசமான விபத்தில் இருந்து பயணிகளை காத்தது எந்த கார்? அந்த கார் பட்ஜெட் விலையில் விற்பனைக்குக் கிடைப்பதாக கூறப்படுவது உண்மைதானா? இதுபற்றிய முழு விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மிக மிக மோசமான விபத்து சம்பவம் ஒன்று சமீபத்தில் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. கார் ஒன்று இரண்டு ராட்சத உருவம் கொண்ட லாரிகளுக்கு இடையில் சிக்கி முற்றிலுமாக உருக்குலைந்து போயிருக்கின்றது. இத்தகைய மோசமான விபத்தில் சிக்கியும். அந்த காருக்குள் பயணித்த பயணிகள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tata tiago crushed

இந்த தகவல் ஒட்டுமொத்த வாகன பிரியர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. இந்த ஆச்சரியத்திற்கு சற்றும் குறைச்சலில்லாத வகையிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இரண்டு டிரக்குகளுக்கு இடையில் சிக்கியதனால் அந்த கார் முற்றிலுமாக உருக்குலைந்திருக்கின்றது. எழுத்து பிழையான காகிதத்தை கசக்கி தூக்கி எறிந்தததைப் போல் இதனால் அந்த கார் மாறி இருக்கின்றது.

இத்தகைய மிகக் கடுமையான சேதங்களுக்கு இடையிலும் அந்த வாகனம் தனக்குள் பயணித்த பயணிகளை பத்திரமாக பாதுகாத்து இருக்கின்றது. இத்தகைய ஆச்சரியமான சம்பவத்தை செய்திருப்பது டாடா மோட்டார்ஸின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றான டியாகோ என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

Tata tiago

5.60 லட்ச ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய மலிவு விலை கார் மாடலே விலை உயரிய கார்களுக்கு இணையான பாதுகாப்பை நமக்கு வழங்கி இருக்கின்றது. இத்தகைய பாதுகாப்பை இந்த கார் வழங்குவது என்பது புதிதல்ல.

ஆமாங்க, இதுபோன்ற விபத்துகளின் போது அதிக பாதுகாப்பை வழங்குவதற்கு பெயர்போன கார் மாடலாக டாடா டியாகோ இருக்கின்றது. இதற்கு சான்றாக பல்வேறு விபத்து சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. அனைத்திலும் இந்த கார் இரும்பு பெட்டகம் போல் இருந்து அதன் பயணிகளைக் காத்திருக்கின்றது.

டாடாவின் இந்த தயாரிப்பு மட்டுமில்லைங்க, டாடாவின் ஒட்டுமொத்த தயாரிப்புகளும் அதிக பாதுகாப்பானவை ஆகும். குறிப்பாக, நெக்ஸான் எஸ்யூவி பாதுகாப்பிற்கு மிகவும் பெயர்போன கார் மாடலாக இருக்கின்றது. இந்த நிலையிலேயே இரண்டு லாரிகளுக்கு இடையில் சிக்கிய டாடா டியாகோ பற்றிய விபரங்கள் கசிந்திருக்கின்றன.

இந்த கார் விபத்திற்கு பின்னாலும் அதீத வேகமாக காரணமாக இருக்கின்றது. ஆமாங்க இந்த கார் அதிக வேகத்தில் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. கட்டுப்பாட்டை இழந்த கார் முதலில் சாலையில் பல முறை உருண்டு சென்றிருக்கின்றது.

இதற்கு பின்னரே சாலையின் எதிர்புறத்தில் வந்த இரண்டு லாரிகளுக்கு இடையில் அந்த கார் சிக்கி இருக்கின்றது. ஆக மொத்தத்தில் இந்த கார் சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவிற்கு மிக மோசமான விபத்தில் சிக்கி இருக்கின்றது. இத்தகைய மோசமான விபத்தில் இருந்தே டியாகோ கார் அதன் பயணிகளை பாதுகாத்திருக்கின்றது.

ஆனால், விபத்தினால் காரில் இருந்த கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு கை எலும்பு முறிந்திருக்கின்றது. மற்றொருவருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. விபத்தின்போது பயணிகள் இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்த காரணத்தினாலேயே மிகப் பெரிய ஆபத்துகளில் இருந்து தப்பி இருக்கின்றனர். இதனால்தான் கார்களில் பயணிக்கும்போது சீட் பெல்ட் கட்டாயம் என்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா டியாகோ ஓர் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனமாகும். குட்டியான ஹேட்ச்பேக் காராக இது இருந்தாலும் பாதுகாப்பு வசதிகளை மிக தாராளமாக இக்கார் மாடலில் டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது. இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது பாதுகாப்பான கார் என்கிற சான்றை குளோபல் என்சிஏபி இடம் இருந்தே பெற்றிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, November 27, 2023, 14:41 [IST]
English summary
Tata tiago crushed between two trucks here is unexpected result
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+