பாலத்துல இருந்து விழுந்தும் கூட யாருக்கும் ஒன்னும் ஆகல! இந்த காரோட விலை தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு போயிருவீங்க

இந்திய சந்தையி மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ் (Tata Motors). பாதுகாப்பான கார்களை தயாரிப்பதால்தான், இந்திய வாடிக்கையாளர்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களை விரும்பி வாங்குகின்றனர். அப்படி வாடிக்கையாளர்களால் அதிகளவில் வாங்கப்படும் கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago).

ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த கார், குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில், 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) பெற்றுள்ளது. இதன் காரணமாக கடந்த காலங்களில், பயங்கரமான சாலை விபத்துக்களில் (Road Accidents) இருந்து பலமுறை பயணிகளின் உயிரை டாடா டியாகோ காப்பாற்றியுள்ளது.

Tiago Accident

இந்த வரிசையில் தற்போது மற்றொரு பயங்கரமான சாலை விபத்து ஒன்றில் இருந்து, 6 பேரின் உயிரை டாடா டியாகோ கார் காப்பாற்றியுள்ளது. மஹாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் உள்ள சிக்லதாரா (Chikhaldara) வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று டாடா டியாகோ காரின் உரிமையாளர் உள்பட மொத்தம் 6 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது மழை பெய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் சாலையில் வந்த வளைவு ஒன்றை, டிரைவர் கவனிக்க தவறி விட்டார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த டாடா டியாகோ கார், பாலம் ஒன்றின் மேலே இருந்து கீழே விழுந்தது. பாலத்தில் இருந்து தலைகீழாக கவிழ்ந்த காரணத்தால், டாடா டியாகோ கார் பலத்த சேதத்தை சந்தித்தது.

Tata Tiago Accident

குறிப்பாக 4 டயர்களும் தனியாக கழன்று சென்று விட்டன. இருப்பினும் காரின் உள்ளே இருந்த 6 பயணிகளும், உயிர் தப்பி விட்டனர். அதுவும் காயங்கள் இன்றி என்பது சற்று ஆச்சரியமான ஒரு விஷயம்தான். இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு, இந்த டியாகோ காரின் உரிமையாளர் நன்றி தெரிவித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பயங்கரமான சாலை விபத்துக்களில் இருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் பயணிகளை காப்பாற்றுவதற்கு, அவற்றின் சிறப்பான கட்டுமான தரம் ஒரு முதன்மையான காரணம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த சாலை விபத்துக்களில் உயிர் பிழைப்பவர்களுக்கு சற்று அதிர்ஷ்டமும் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், அதிர்ஷ்டம் அனைத்து நேரங்களிலும் கை கொடுக்காது. எனவே வாகனங்களை ஓட்டும்போது மிகவும் கவனமாக இருங்கள். குறிப்பாக வன பகுதிகளிலும், மழை பெய்யும் சமயங்களிலும் வாகனம் ஓட்டும்போது கூடுதல் முன்னெச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது.

இந்த சமயங்களில் டிரைவரின் கவனம் ஒரு வினாடி சிதறினால் கூட, அதன் பின் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கலாம். நல்ல வேளையாக இந்த சம்பவத்தில் இப்படி நடக்கவில்லை. இதற்கு டாடா டியாகோ காருக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். இது அதிக பாதுகாப்பான கார் என்றாலும் கூட, ஓரளவிற்கு குறைவான விலையிலேயே கிடைக்கிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா டியாகோ காரின் ஆரம்ப விலை வெறும் 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 8.90 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 20, 2024, 14:15 [IST]
English summary
Tata tiago saves 6 passengers in massive accident viral video maharashtra all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+