ஐ.பி.எல். ரசிகர்களுக்கு ஜாக்பாட்; தினம் ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்குகிறது டாடா நெக்ஸான்
இந்தாண்டு நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் வீரர்கள் அடிக்கும் சிக்ஸர் பந்துகளை ஒற்றை கையால் கேட்ச் பிடிக்கும் ரசிகர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்குகிறது டாடா நிறுவனம்.
இந்தாண்டு நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் வீரர்கள் அடிக்கும் சிக்ஸர் பந்துகளை ஒற்றை கையால் கேட்ச் பிடிக்கும் ரசிகர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்குகிறது டாடா நிறுவனம்.

வரும் ஏப்ரல் மாதம் துவங்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் திருவிழாவால் இந்தியா முழுவதும் கொண்டாட்டத்தில் முழ்கவிருக்கிறது. அந்த கொண்டாடத்தில் பங்கெடுக்கும் விதமாக டாடா நிறுவனம் ஐ.பி.எல்., நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் துவங்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் திருவிழாவால் இந்தியா முழுவதும் கொண்டாட்டத்தில் முழ்க விருக்கிறது. அந்த கொண்டாடத்தில் பங்கெடுக்கும் விதமாக டாடா நிறுவனம் ஐ.பி.எல்., நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.

அதன் படி இந்தாண்டு ஐ.பி.எல்., போட்டிகள் நடக்கும் மைதானங்களில் டாடா நெக்ஸான் காரை காட்சிபடுத்தவிருக்கிறது. மேலும் வீரர்களுக்கு பார்வையாளர்களுக்கு பரிசுகளையும் வழங்க விருக்கிறது.

இந்தாண்டு ஐ.பி.எல்.,தொடரில் அதிக ரன் எடுக்கும் வீரருக்கு "டாடா நெக்ஸான் சூப்பர் ஸ்டிரைக்கர்" விருதையும், டாடா நெக்ஸான் காரையும் பரிசாக வழங்க விருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தினம் நடக்கும் போட்டிகளில் அதிக ரன் எடுக்கும் வீரர்களுக்கும் பரிசுகளையும் வழங்குகிறது.

மேலும் பார்வையாளராக வருபவர்கள் வீரர்கள் சிக்ஸர் அடிக்கும்போது அந்த பந்தை ஒற்றை கையால் பிடிக்கும் ரசிகர்களுக்கும் "டாடா நெக்ஸான் பேன் கேட்ச் " எனும் தலைப்பில் சுமார் ரூ 1 லட்ச ரூபாயை பரிசுசாக வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த தொடரில் அதிகமாக சிக்ஸர் பந்துகளை ஒற்றை கையால் கேட்ச் பிடிக்கும் ரசிகருக்கு டாடா நெக்ஸான் காரையும் பரிசாக வழங்குகிறது.

டாடா நிறுவனம் நடந்து முடிந்த ஆட்டோ எஸ்போ - 2018ல் அறிமுகப்படுத்திய நெக்ஸான் ஆட்டோ கியர் காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விலை சுமார் ரூ 6.30 லட்சத்தில் இருந்து ரூ 10 லட்சம் வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications