கூகுள் மேப்பை நம்பாதீங்க.. இவங்களுக்கு நடந்தது நாளைக்கு யாருக்கு வேணாலும் நடக்கலாம்! உபிலதான் எல்லாமே நடக்குது

ஆட்டோ ஓட்டுநர்களிடமும், உள்ளூர் வாசிகளிடமும் ரூட் கேட்டு சென்ற காலகட்டத்தில் ஒருத்தரும் வழித்தடம் மாறி போயிருக்க மாட்டார்கள். அதேபோல், ஆபத்தான சூழலிலும் அவர்கள் சிக்கியிருக்க மாட்டார்கள். ஆனால், ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்து இந்த சூழல் அப்படியே மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. இதேபோல் மற்றவர்களிடம் ரூட் கேட்டு பயணிப்பவர்களும் இப்போது மிகப் பெரிய அளவில் குறைந்துவிட்டனர். பிறரிடத்தில் கேட்பதற்கு பதிலாக பலர் கூகுள் மேப்பைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். போகும் இடத்தை உட்செலுத்திவிட்டால் போதும், அது ஏற்கனவே பழக்கப்பட்டவர்களைப் போல நமக்கு ரூட்டைக் காண்பிக்கும்.

இது பல நேரங்களில் சரியான ரூட்டைக் காண்பிக்கும் என்றாலும், சில நேரங்களில் மிக மோசமான ரூட்டுகளை எல்லாம் காண்பிக்கும். குறிப்பாக, இல்லாத ரூட்டுகளை இருப்பதாகக் கூட அது காண்பிக்கும். எனவேதான் கண் மூடித்தனமாக கூகுள் மேப்பை நம்பக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது.

Tata tigor plunged into canal

Image Courtesy: abcnewsmedia இந்த நிலையிலேயே கூகுள் மேப்பை முழுசாக நம்பி சென்றவர்கள் மிக மோசமான விபத்தில் சிக்கி இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூகுள் மேம்பை மேம்பாலத்தில் சென்ற மூன்று பேர் விபத்தில் சிக்கி பலியாகினர்.

முழுசாக கட்டப்படாத மேம்பாலத்தில் சென்றதன் விளைவாகவே அந்த கார் விபத்தில் சிக்கியது. 100க்கும் அதிகமான ஆழம் கொண்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்ததால் நிகழ்விடத்திலேயே காரில் பயணித்த மூவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உபியிலேயே அரங்கேறியது. இந்த சோகத்தின் வடுக்கள் மறைவதற்குள்ளாக, மற்றுமொரு மோசமான கார் விபத்து சம்பவம் அந்த மாநிலத்தில் அரங்கேறி இருக்கின்றது.

இந்த விபத்தும் கூகுள் மேப்பை நம்பி வந்ததாலேயே அரங்கேறி இருக்கின்றது. ஆனால், அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டிருக்கின்றனர். அந்த கார் ஆழமான நிறைந்த கால்வாயில் விழுந்தும் பயணிகள் உயிர் பிழைத்திருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இதற்கு அந்த காரின் பாதுகாக்கும் திறனே முக்கிய காரணம் ஆகும். டாடா டிகோர் கார் மாடலே அது ஆகும். பாதுகாப்பிற்கு பெயர்போன கார் மாடல்களில் டிகோர்-ம் ஒன்றாகும். ஐந்திற்கு நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே இது பெற்றிருக்கின்றது. தன்னுடைய இந்த பாதுகாப்பு திறனையே ரியல் லைஃப் விபத்தின் வாயிலாக டிகோர் நமக்கு மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

கார் மீட்க முடியாத பள்ளத்தில் விழுந்ததனால், அதனை கயிறு கட்டி கிரேன் வாகனம் வாயிலாக மேலே எடுத்திருக்கின்றனர். இந்த மிகப் பெரிய விபத்தில் சிறு சிறு காயங்களுடன் டிகோர் காரில் பயணித்தவர்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர். கார் பாதுகாப்பானதாகவே இருக்கவே பயணிகள் அனைவரும் தப்பியிருக்கின்றனர்.

இல்லை எனில் அனைவருக்கும் மிக மோசமான நிலை ஏற்பட்டிருக்கும். இதனால்தான் வெளி இடங்களுக்கு செல்லும்போது முழுக்க முழுக்க கூகுள் மேப் போன்ற வழிக்காட்டி செயலிகளை நம்பி பயணிப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு முறையும், உள்ளூர் வாசிகளிடமும் ஒரு முறை ரூட் கேட்டு பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

முக்கியமாக நீங்கள் செல்வது பரீட்சையம் இல்லாத வழித்தடம் என்றால் கட்டாயம் இதை செய்வது மிகவும் நல்லது. இந்தியாவில் டாடா டிகோர் ரூ. 6 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மேலும், இந்த கார் மாடலை பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் என பலதரப்பட்ட அவதாரங்களில் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கூகுள் மேப் பயன்படுத்தி விபத்தில் சிக்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த புதிய விபத்து சம்பவமும் அரங்கேறி இருக்கின்றது. மேலும், இந்த நிகழ்வின் வாயிலாகவும் டாடாவின் தயாரிப்பு அதிக பாதுகாப்பானது என்பது தெரிய வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 8, 2024, 21:00 [IST]
English summary
Tata tigor plunged into a canal in uttar pradesh while following google maps directions
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+