ஆர்பரித்து ஓடும் ஆறு, இடையில் சிக்கிய லாரி... பல மணிநேர போராட்டம், இறுதியில் நடந்தது...

சேற்றில் சிக்கிய, மிக பெரிய தோற்றம் கொண்ட டாடா லாரி ஒன்று வால்வோ அகழ் எந்திர வாகனத்தின் (Excavator) உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆர்பரித்து ஓடும் ஆறு, இடையில் சிக்கிய லாரி... பல மணிநேர போராட்டம், இறுதியில் நடந்தது...

வாகனங்கள் சேற்றில் சிக்குவது இயல்பான ஒன்று. வாகனத்தை சேற்றில் இருந்து எவ்வளவு விரைவாக மீட்கின்றோம் என்பதை பொறுத்துதான் அது பெரிய பிரச்சனையா அல்லது சிறிய பிரச்சனையா என்பது உள்ளது.

ஆர்பரித்து ஓடும் ஆறு, இடையில் சிக்கிய லாரி... பல மணிநேர போராட்டம், இறுதியில் நடந்தது...

எடை குறைவான கார்கள் சேற்றில் சிக்கினால் பெரிய அளவில் சிரமப்பட தேவையில்லை. இருவர், மூவரது உதவி கிடைத்தாலே போதும், அந்த காரை மீட்டுவிடலாம். ஆனால் பெரிய பெரிய லாரிகள் சேற்றில் சிக்கினால், அதில் ஒரு நாள் முழுவதும் பணியாற்ற வேண்டிய நிலைமை கூட ஏற்பட வாய்ப்புண்டு.

ஆர்பரித்து ஓடும் ஆறு, இடையில் சிக்கிய லாரி... பல மணிநேர போராட்டம், இறுதியில் நடந்தது...

அப்படியொரு சம்பவத்தை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். ஆர்பரித்து ஓடும் ஆற்றில் டாடா 2518 டிப்பர் லாரி ஒன்று சிக்கி கொண்டது. அதனை எவ்வாறு வால்வோ அகழ் எந்திர வாகனம் மீட்டது என்பதை கீழேயுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

இந்த சம்பவம் சரியாக எந்த இடத்தில் நிகழ்ந்துள்ளது என்பது தெரியவில்லை. சுற்றிலும் காடு, மலை இடையில் ஆறு, இதையெல்லாம் வைத்து பார்த்தோமேயானால், வடகிழக்கு இந்தியாவில் ஏதேனும் ஒரு பகுதியாக இருக்கலாம்.

ஆர்பரித்து ஓடும் ஆறு, இடையில் சிக்கிய லாரி... பல மணிநேர போராட்டம், இறுதியில் நடந்தது...

இந்த டாடா டிப்பர் லாரி சரியாக ஆற்றின் மையத்தில் சிக்கி கொண்டுள்ளது. வால்வோ அகழ் எந்திர வாகனம் லாரியை பின்னால் இருந்தப்படி தள்ளி ஆற்றில் இருந்து வெளியேற்றியுள்ளது. அகழ் இயந்திர வாகனங்கள் பொதுவாகவே இவ்வாறான பயன்பாடுகளுக்காகவே வடிவமைக்கப்படுவதால் அவை சேற்றில் சிக்கி கொள்ள வாய்ப்பில்லை.

ஆர்பரித்து ஓடும் ஆறு, இடையில் சிக்கிய லாரி... பல மணிநேர போராட்டம், இறுதியில் நடந்தது...

அவ்வளவு பெரிய லாரி எவ்வாறு ஆற்றில் இறங்கியது, எதற்காக இறங்கியது என்பது போன்ற எந்த விபரங்களும் இல்லை. ஆற்றில் நீரின் வேகத்தை குறைக்கும் விதத்தில் சேர்ந்துள்ள மண்ணை அப்புறப்படுத்தி தூர்வார இந்த லாரி பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

ஆர்பரித்து ஓடும் ஆறு, இடையில் சிக்கிய லாரி... பல மணிநேர போராட்டம், இறுதியில் நடந்தது...

டாடா 2518, இந்தியாவில் பிரபலமான டிப்பர் லாரிகளுள் ஒன்று. இதில் அனைத்து-சக்கர ட்ரைவ் வசதி கிடையாது. மூன்று அச்சுகளின் மூலமாக இந்த லாரி இயங்குகிறது. சேற்றில் சிக்கிய இந்த லாரியில் சுமைகள் எதுவும் ஏற்றப்படவில்லை என்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

ஆர்பரித்து ஓடும் ஆறு, இடையில் சிக்கிய லாரி... பல மணிநேர போராட்டம், இறுதியில் நடந்தது...

இதனால் தான் லாரியை ஆற்றில் பெரிய அளவில் எந்த சிரமமும் இன்றி வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது. இல்லையென்றால், மேலே ஏற்றப்பட்ட சுமைகளை மீண்டும் இறக்கிவிட்டு லாரியை மீட்க வேண்டியதாகி இருந்திருக்கும்.

ஆர்பரித்து ஓடும் ஆறு, இடையில் சிக்கிய லாரி... பல மணிநேர போராட்டம், இறுதியில் நடந்தது...

மற்ற இடங்கள் என்றால் பிரச்சனை இல்லை, ஆனால் இது ஓடும் ஆறு என்பதால் ஏற்றிய பொருட்களை அவ்வளவு எளிதாக இறக்கியிருக்கவும் முடியாது. அதுமட்டுமில்லாமல் ஆற்றில் ஆழம் குறைவாகவே உள்ளது. இதுவும் எளிதாக லாரி மீட்கப்பட்டதற்கு காரணங்களுள் ஒன்றாகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Massive Tata Truck stuck in river rescued by a Volvo excavator.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X