தெய்வம்யா நீங்க! பேஸ்புக், ட்விட்டரில் இருந்து தூக்கப்பட்ட ஊழியர்களுக்கு கடவுளாக மாறிய டாடா! உலகமே பாராட்டுது!

உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளன. அந்த ஊழியர்களுக்கு டாடா நிறுவனம் உதவிக்கரம் நீட்டியிருப்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முன்னணி சமூக வலை தள நிறுவனங்களும், பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளும் தற்போது ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதனால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தெய்வம்யா நீங்க! பேஸ்புக், ட்விட்டரில் இருந்து தூக்கப்பட்ட ஊழியர்களுக்கு கடவுளாக மாறிய டாடா! உலகமே பாராட்டுது!

மார்க் ஜூக்கர்பெர்க் (Mark Zuckerberg) தலைமையில் செயல்பட்டு வரும் மெட்டா (Meta) நிறுவனம் ஒட்டுமொத்தமாக 11 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இதுதான் ஃபேஸ்புக்கின் (Facebook) தாய் நிறுவனமாகும். மறுபக்கம் ட்விட்டர் (Twitter) நிறுவனமும் தற்போது திடீரென ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ள எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டர் நிறுவனத்தை வெகு சமீபத்தில் வாங்கினார்.

எலான் மஸ்க்கின் கைகளுக்கு ட்விட்டர் நிறுவனம் வந்த பிறகு, அந்த நிறுவனத்தில் இருந்து திடீரென 50 சதவீத ஊழியர்களை அவர் வேலையில் இருந்து நீக்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதவிர இன்னும் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில், அமேசான் (Amazon), மைக்ரோசாஃப்ட் (Microsoft) மற்றும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

ஆனால் இத்தகைய பெரிய நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இந்தியாவை (India) சேர்ந்த டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தற்போது உதவிக்கரம் நீட்டியுள்ளது. மெட்டா மற்றும் ட்விட்டர் போன்ற நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு தனது ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளை வழங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவர் இங்கிலாந்தை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனம் ஆகும். செயல்திறன் மிக்க சொகுசு கார்களை தயாரிப்பதில் ஜாகுவார் லேண்ட் ரோவர் உலகப்புகழ் பெற்றது. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம், இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமாகதான் இயங்கி வருகிறது. இன்னும் தெளிவாக சொல்வதென்றால், டாடா மோட்டார்ஸ்தான், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆகும்.

அட்டானமஸ் டிரைவிங் (Autonomous Driving), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற துறைகளில் வளர்ச்சி அடைவதற்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் விரும்புகிறது. இந்த வளர்ச்சிக்கு உதவுவதற்காக 800க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்களை பணியில் அமர்த்த உள்ளதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் தற்போது அறிவித்துள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) தயாரிப்பதற்கு இவர்கள் உதவுவார்கள்.

இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து, ஹங்கேரி போன்ற நாடுகளில் புதிய தொழில்நுட்ப வல்லுனர்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் பணியமர்த்தவுள்ளது. ஒரு கதவு மூடினால், இன்னொரு கதவு திறக்கப்படும் என்ற பழமொழிக்கு ஏற்ப மெட்டா மற்றும் ட்விட்டர் போன்ற நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கதவுகள் திறந்துள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிய தொடங்கியுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tata will give jobs to employees fired from meta twitter
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X