டாடா பிக்-அப் டிரக் யோதாவா இது! தாஜ், தி பார்க் நட்சத்திர விடுதிகளின் சொகுசு அறையையே இந்த வாகனம் விஞ்சிரும்!

டாடா (Tata) இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் புகழ் பெற்ற பிக்-அப் டிரக்குகளில் யோதா (Yodha)-வும் ஒன்று. இந்த பிக்-அப் டிரக்கையே இந்தியாவைச் சேர்ந்த முன்னணி வாகன மாடிஃபிகேஷன் நிறுவனம் ஒன்று அடுக்குமாடி சொகுசு பங்களாவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் மினி வீடாக மாற்றியிருக்கின்றது. ஆமாங்க, அந்த பிக்-அப் டிரக்கை அவர் நகரும் வீடாகவே உருமாற்றி இருக்கின்றார். இந்த வாகனம்குறித்த கூடுதல் சிறப்பு தகவல்களை இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் புகழ்பெற்ற பிக்-அப் ட்ரக் வாகனங்களில் டாடா மோட்டார்ஸின் யோதாவும் ஒன்றாகும். வர்த்தக ரீதியாக மட்டுமே இந்த வாகனத்தைப் பயன்படுத்த முடியும் என அனைவரும் நம்பி வந்தவேளையில், அந்த வாகனத்தை மினி வீடாகவும் மாற்ற முடியும் என அதனைச் செய்தும் காட்டி இருக்கின்றனர்.

Tata yodha pick up truck with flatbed back side view

இந்த வாகனம் நீண்ட தூரம் மற்றும் ட்ரெக்கிங் பயணங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். நீண்ட தூர டிராவல் மற்றும் டிரெக்கிங்கின் போது தங்கும் வசதி என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது. ஆனால், இந்த வாகனத்தில் இந்த விஷயத்தில் எந்த சிக்கலும் இருக்காது.

ஏனெனில், ஓர் வீட்டில் இருக்கும் அனைத்து வசதிகளும் பிக்-அப் ட்ரக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. உதாரணமாக, படுக்கை அறை தொடங்கி கழிவறை என சகல வசதிகளும் யோதா பிக்-அப் ட்ரக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. தேவைப்படும் நேரத்தில் சமைத்து சாப்பிட உதவும் விதமாக சிறிய சமையலறை மற்றும் குட்டி ஸ்டோரேஜ்கூட இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Tata yodha pick up truck with flatbed

ஆகையால், வெளியில் செல்லும்போது தங்குவதற்கு தோதுவான இடம் கிடைக்கவில்லை என்றால் கவலையே பட வேண்டும். சவுகரியமாக இந்த வாகனத்திலேயே குடும்பத்துடன் ராத்திரி நேரத்தைக் கழித்துக் கொள்ள முடியும். வாகனத்திற்குள் ஓர் படுக்கை வசதியும், மேற்கூரையில் ஓர் படுக்கை வசதியும் இந்த வாகனத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

அந்த படுக்கையை காற்றை நிரப்பி விரித்துக் கொள்ள முடியும். மேலும், டெண்டையும் மேற்கூரையில் அமைத்துக் கொள்ள முடியும். இதுதவிர, காடுகளில் டிரெக்கிங் செய்யும்போது வெளியில் வந்து பார்க்க ஏதுவாக சிறிய திறப்பு மேற்கூரையில் வழங்கப்பட்டு இருக்கின்றது. விலங்கு மற்றும் இயற்கை அழகை ரசிக்க இது ஏதுவாக இருக்கும்.

Tata yodha pick up truck with flatbed front view

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாகன மாடிஃபிகேஷன் பணியில் ஈடுபட்டு வரும் மோட்டார் ஹோம் அட்வென்சுரஸ் நிறுவனமே இந்த அளவு அதிக சிறப்புகள் தாங்கிய வாகனத்தை உருவாக்கி இருக்கின்றது. அதாவது, டாடா யோதாவை இந்த நிறுவனமே நடமாடும் குட்டி சொகுசு பங்களாவாக மாற்றி இருக்கின்றது.

இந்த வாகனத்தின் வெளிப்புற தோற்றத்திற்கு கவர்ச்சி சேர்க்கும் விதமாக கன் மெட்டல் கிரே நிறம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. வெளிப்பக்கம் முழுக்கவும் இந்த நிறமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. துரதரிஷ்டவசமாக இந்த வாகனத்தின் டிரைவர் பக்கத்தில் எந்தவொரு மாற்றத்தையும் அதன் உரிமையாளர் செய்யவில்லை. யோதாவில் கொடுக்கப்பட்ட அம்சங்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

Tata yodha pick up truck with flatbed top view

வாகனத்தின் பின் பக்கம் ஆட்டோ-கிரேட் அலுமினியத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, இதன் பக்கவாட்டு பகுதியிலேயே வேனுக்குள் நுழைவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஸ்லைடிங் வகை டோரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. பயனாளிகள் சுலபமாக வாகனத்தை அனுபவிக்க ஏதுவாகவே இந்த வகை கதவு யோதாவில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், 100 ஏஎச் பேட்டரி பேக் வாகனத்திற்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் விதமாக கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை சார்ஜ் செய்ய மேற்கூரையில் குட்டி சோலார் பேனல் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. சிறிய ஃப்ரிட்ஜ், பாத்திரங்களை கழுவ ஏதுவாக சிங்க், லக்கேஜ் மற்றும் உணவு பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ள ஏதுவாக ஸ்டோரேஜ் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மோட்டார்ஹோம் கலாச்சாரம் இப்போதே மெல்ல மெல்ல வளர்ந்து வர தொடங்கி இருக்கின்றது. இந்த நிலையிலேயே மோட்டார்ஹோம் காதலர்களைக் கவரும் பொருட்டு இந்திய நிறுவனம் சூப்பராக டாடாவின் யோதாவை மாடிஃபை செய்திருக்கின்றது. இதற்கான செலவு பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், 2 அல்லது 3 லட்ச ரூபாய்க்கும் குறைவான செலவிலேயே இது உருவாக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 7, 2023, 18:55 [IST]
English summary
Tata yodha pick up truck modified into motorhome
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X