தட்கல் டிக்கெட் புக் பண்ணுறது இனி ஈஸி கிடையாது! இந்த இதை பண்ணவங்கதான் டிக்கெட் எடுக்கலாம்!
இந்தியாவில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வதில் புதிய விதிமுறைய ரயில்வே நிர்வாகம் வரும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு கொண்டு வரப்போகிறது. தற்போது பல தரகர்கள் தட்கல் டிக்கெட் எடுத்து குடுத்து சம்பாதிக்கும் நிலையில் அதை தடுப்பதற்காக இந்த இந்த விதிமுறையை அமல் படுத்துகிறது. இனி இப்படியான இஷ்டப்படி டிக்கெட் புக் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தற்போது ரயில் டிக்கெட் விற்பனை ஐஆர்சிடிசி தளம் மூலம் நடந்து வருகிறது. இந்தியாவில் கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட் பயணம் செய்ய நினைப்பவர்கள் தற்போது தட்கல் மற்றும் பிரிமியம் தட்கல் ஆகிய முறைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சாதாரண டிக்கெட்டை எப்படி பெறுகிறார்களோ அதே போலவே தட்கல் மற்றும் பிரிமயம் தட்கல் ஆகிய டிக்கெட்களை விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் வரும் ஜூலை மாதம் முதல் ஐஆர்சிடிசி வெப்சைட் அல்லது மொபைல் ஆப் மூலம் தட்கல் டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றால் ஏற்கனவே ஆதார் அடிப்படையிலான ஓடிபி வெரிஃபிகேஷன் செய்த பயணிகள் மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் புதிய பெயர்களில் தட்கல் டிக்கெட்களை புக் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது.
தற்போது எந்த பெயர் வேண்டுமானாலும் போட்டு டிக்கெட்களை புக் செய்யலாம். அப்படி புக் செய்தால் பயணத்தின் போது டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட்டில் உள்ள பெயரையும், பயணியின் ஆவணத்தையும் சரி பார்ப்பார்கள். இந்நிலையில் இதை டிக்கெட் புக் செய்யும் போதே செய்ய ஆதார் அடிப்படையிலான வெரிஃபிகேஷனை செய்தவர்கள் மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே போக்குவரத்து துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக டிக்கெட் புக்கிங் செய்தவர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து ஆர்ஏசி, அல்லது கன்ஃபார்ம் செய்யப்பட்ட டிக்கெட்டைபெறுகிறார்களா என்பது சார்ட் தயாராகும் போது தான் தெரியவரும். தற்போது ரயி்ல கிளம்புவதற்கு சுமார் 4 மணி நேரத்திற்கு முன்புதான் சார்ட் தயாரிக்கப்படுகிறது. இதை இதை மாற்றி ரயில் கிளம்புவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே சார்ஜ் தயாரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தற்போது இந்த முயற்சியை ஏற்கனவே துவங்கிவிட்டது. ராஜஸ்தான் மாநிலம் பிக்கேனர் பகுதியில் இதை சோதனை முயற்சியாக துவங்கியுள்ளது. இது எப்படியான முடிவை தருகிறதோ அதை பொருத்து நாடு முழுவதும் இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜூலை மாதம் முதல் இனி ஆதார் ஓடிபி மூலம் வெரிஃபிகேஷன் செய்த பயணிகள் மட்டுமே தட்கல் டிக்கெட்களை புகு் செய்ய முடியும். இதனால் இப்பொழுதே உள்ள ஐஆர்சிடிசி கணக்கிற்குள் சென்று உங்கள் ஆதார் மூலம் ஓடிபி வெரிஃபிகேஷன் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அப்பொழுது தான் டிக்கெட் புக் செய்யும் நேரத்தில் நீங்கள் விரைவாக தட்கல் டிக்கெட்டை புக் செய்ய முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஐஆர்சிடிசி தளத்தில் மட்டுமே ரயில் டிக்கெட்டை புக் செய்யப்படும் நிலையில் தற்போது தட்கல் டிக்கெட்டை புக் செய்ய புதிய விதிமுறை வந்துள்ள நிலையில் இது தரகர்கள் டிக்கெட்களை விற்று சம்பாதிப்பதை தடுக்க உதவும். இதனால் சரியான நபர்களுக்கு டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications









