சென்னைக்காகவா இவங்க கை கோர்த்திருக்காங்க!.. டாடாவின் TCSம், ஐஐடி மெட்ராஸ்-இன் இ-பிளேன் கம்பெனியும் கூட்டணி!
டாடா குழுமத்தின் ஓர் அங்கமாக உள்ளது டிசிஎஸ் (TCS) எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services). இதுவும், ஐஐடி மெட்ராஸால் இயக்கப்பட்டு வரும் இ-பிளேன் கம்பெனி (ePlane Company)-யும் தற்போது கூட்டணியைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இ-பிளேன் கம்பெனி, இது ஓர் மின்சாரத்தில் பறக்கும் திறன் கொண்ட வானூர்தி டாக்சி-யை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். இதுவே, டிசிஎஸ் உடன் தற்போது கை கோர்த்து இருக்கின்றது. இந்த கூட்டணியின்கீழேயே பறக்கும் மின்சார வாகனம் இந்திய நகரங்களில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது.
இவர்கள் இருவர்களும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை புரட்சிகரமானதாக மாற்ற இருக்கின்றனர். அதாவது, சாலை மார்க்கமாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வரும் இவற்றை பறக்கு டாக்சிகள் வாயிலாக மேற்கொள்ள இருக்கின்றனர். இதன் அடிப்படையிலேயே அவர்கள் தற்போது கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றனர். ஆமாங்க, இவர்கள் இருவரும் இணைந்தே வாடகை பறக்கும் கால் டாக்சி சேவையை சென்னை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர இருக்கின்றனர்.

இ-பிளேன் கம்பெனி பறக்கும் மின்சார டாக்சிகளையும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இதற்கு தேவையான மென் பொருளையும் உருவாக்க இருக்கின்றது. இதுதவிர, இன்னும் சில முக்கிய தேவைகளையும் இந்த கூட்டணியின்கீழ் டிசிஎஸ் நிறுவனம், இ-பிளேன் கம்பெனிக்கு செய்ய இருக்கின்றது. ஐஓடி மற்றும் ஏஐ சப்போர்ட் போன்றவற்றையும் இந்த கூட்டணியின்கீழ் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இ-பிளேன் கம்பெனிக்கு வழங்க இருக்கின்றது.
இந்தியாவில் வெகு விரைவில் பறக்கும் டாக்சிகள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. அந்தவகையில், இந்தியாவின் முதல் நகரமாக சென்னை பறக்கும் டாக்சி சேவையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான முயற்சியிலேயே அண்மைக் காலமாக மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது, இ-பிளேன் கம்பெனி. இதன் ஓர் முயற்சியாகவே தற்போது டிசிஎஸ் உடன் அது கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது.
இ-பிளேன் கம்பெனி அதன் பறக்கும் மின்சார டாக்சியின் முன்னோட்ட பணிகளை இந்த ஆண்டு மே மாதத்தில் தொடங்க திட்டமிட்டு இருக்கின்றது. முழுமையாக 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அது தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதல் கட்டமாக ஆம்புலன்ஸாகவே இந்த பறக்கும் மின்சார டாக்சியானது இயக்கப்பட இருக்கின்றது.
இதற்கு பின்னரே பயணிகளுக்கான டாக்சியாக அது பயன்படுத்தப்படும் என கூறப்படுகின்றது. இந்த சேவைகளை அசத்தலானதாக மாற்றும் பொருட்டே டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இ-பிளேன் கம்பெனி கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றன. இ-பிளேன் கம்பெனி, இ200 (e200) மின்சாரத்தில் பறக்கும் வாகனத்தை தயாரித்து வருகின்றது.
இது ஹெலிகாப்டர்களை போல செங்குத்தாக பறக்கும் திறன் கொண்டவை ஆகும். ஆகையால், சீரான தரையே இ-பிளேன் இயக்கத்திற்கு போதுமானதாக உள்ளது. டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகியவற்றை அது சிறப்பாக செய்திரும். இத்தகைய பறக்கும் டாக்சிகளே விரைவில் சென்னை வான்வெளியில் பறக்க இருக்கின்றன.
சென்னையில் மட்டுமல்ல நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் பறக்கு டாக்சிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. இதற்காக சில முன்னணி விமான போக்குவரத்து நிறுவனங்களும் முயற்சி செய்து வருகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவின் அனைத்து நகரங்களும் டிராஃபிக்கால் மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இந்த மாதிரியான சூழலைச் சமாளிக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே பறக்கு டாக்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் பறக்கும் டாக்சியை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பொருட்டே இ-பிளேன் கம்பெனியும், டிசிஎஸ்-ம் கை கோர்த்து உள்ளன. இவர்கள் இணைந்திருப்பது இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இவர்களின் இந்த நடவடிக்கையால் சீக்கிரமே இந்தியாவில் பறக்கும் டாக்சி சேவை செயல்பாட்டிற்கு வந்துவிடும் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் எழும்பியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








