எந்த ஒரு டீச்சரும் மாணவனுக்கு இப்படி ஒரு தண்டனையை வழங்கி இருக்க மாட்டாங்க.. இவரு ஆசிரயரா?.. இல்ல அரக்கனா?..

மாணவன் - ஆசியருக்கு இடையே ஏற்பட்ட மோதல், மாணவன் மீது ஆசியரை காரை ஏற்ற செய்யும் அளவிற்கு முற்றி இருக்கின்றது. இந்தியாவில் அரங்கேறிய இந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிகழ்வு குறித்து மேலும் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாணவன் - ஆசிரியர் இடையே மோதல் ஏற்படுவது என்பது வழக்கம்தான். ஆனால், இங்கு நாம் பார்க்க இருக்கும் இந்த சம்பவம் முற்றிலும் மாறுபட்டதாகக் காட்சியளிக்கின்றது. ஆசிரியர் ஒருவர் மாணவன் உடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக, அந்த மாணவன் மீது காரையே ஏற்ற செய்திருக்கின்றார்.

Teacher arrested who hit student

அதுதவிர, அந்த மாணவனை காரின் மீது வைத்தபடி சுமார் 10 கிமீ தூரம் வரை ஆபத்தான நிலையில் காரை ஓட்டி இருக்கின்றார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. எக்ஸ் மற்றும் யுட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் இந்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, மாணவர்களையும், பெற்றோர்களையும் இந்த சம்பவம் மிகப் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. பஞ்சாப் மாநிலம், கபுர்தலாவில் உள்ள சுல்தான்பூர் லோதி எனும் பகுதியிலேயே இந்த ஆசிரியர் - மாணவன் மோதல் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ஹூண்டாய் வென்யூ எனும் இந்தியாவின் பிரபலமான கார் மாடலைக் கொண்டே இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை அந்த ஆசிரியர் நிகழ்த்தி இருக்கின்றார்.

மேலும், இந்த நிகழ்வு கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி அன்றே அரங்கேறியதாகக் கூறப்படுகின்றது. காரின் மீது தொங்கியபடி ஆபத்தான நிலையில் இருந்த மாணவர் ஐஇஎல்டிஎஸ் (IELTS) படிக்கும் ஹர்மன்ப்ரீத் என்பது தெரிய வந்துள்ளது. இவர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோதே அதிக வேகத்தில் வந்து ஆசிரியர் ஹூண்டாய் வென்யூ காரைக் கொண்டு மாணவன் மீது இருக்கின்றார்.

இந்த தாக்குதலில் அவர் காரின் மேற்கூரையை மீது தூக்கி வீசப்பட்டிருக்கின்றார். இந்த நிலையிலேயே சுமார் 10 கி.மீட்டருக்கும் அதிகமான தூரம் அந்த மாணவரை அப்படியே வைத்து வலம் வந்திருக்கின்றார். இந்த கொடூரமான ஆசிரியரின் பெயர் பல்ஜிந்தர் சிங் என கூறப்படுகின்றது. இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் பதியப்பட்டு நிலுவையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய நபரே தற்போது மீண்டும் தன்னுடைய கொடூர முகத்தை மாணவன் ஹர்மன்ப்ரீத் மீது காண்பித்து இருக்கின்றார். தற்போது மாணவன் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். அதிர்ஷ்டவசமாக அவரது உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை இல்லை என கூறப்படுகின்றது.

இந்த சம்பம் அனைத்தும் பட்ட பகலில் அரங்கேறி இருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது. தற்போது ஆசிரியரை கைது செய்திருக்கும் பஞ்சாப் காவல்துறை அவரை சிறையில் அடைத்திருக்கின்றனர். மேலும், அவரிடத்தில் தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த மோதலுக்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீப காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, போக்குவரத்து காவலர்கள் இதுபோன்ற சம்பவங்களில் அதிகம் சிக்கி வருகின்றனர். இந்த மாதிரியான சம்பவத்தின்போது நாம் எது செய்தாலும் அது ஆபத்தான சூழலையே ஏற்படுத்தும். ஆகையால், கைகளை அந்த காரை இறுகப் பற்றிக் கொள்வது மட்டுமே உயிரை காக்கும் செயல் ஆகும்.

மேலும், அந்த காரில் தன்னை விடுத்திக் கொள்ள வேண்டும் என்றால், தக்க நேரத்திற்காக காத்திருக்க வேண்டும். கார் பொறுமையாக திரும்புகின்றது என்றாலோ, வேகத்தைக் குறைக்கின்றது என்றாலோ அந்த நேரத்தில் காரின் மீதிருந்து பாதுகாப்பு கீழே குதித்து தப்பிக்கலாம். கவனம் இருக்கட்டும் சாலையோரம் அல்லது புற்தரையில் குதிப்பதனால் ஆபத்தை பெருமளவில் தவிர்த்துக் கொள்ள முடியும்.

Article Published On: Friday, November 3, 2023, 12:16 [IST]
English summary
Teacher arrested who hit the student and crawled dangerously in 10 km
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+