300 கிமீ வேகத்தில் அனாயசமாக செல்லும் 'அசுர' கார்!
ஐரோப்பாவில் 'கும்பால் 3000' ராலி கார் பந்தயம் மிகவும் பிரபலம். கிட்டதட்ட 5,000 கிமீ., தூரத்துக்கு பல நாடுகளை ஐரோப்பிய நாடுகளை கடந்து செல்லும் வகையில், நடத்தப்படும் இந்த ராலி பந்தயத்தில் பணமும், நேரமும் உள்ளவர்கள் தங்களது சூப்பர் கார்களுடன் கலந்துகொள்வது வழக்கம். இந்த நிலையில், 15ம் ஆண்டு கும்பால் ராலி பந்தயம் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் வரும் 18ந் தேதி துவங்குகிறது.
இந்த பந்தயத்தில் லம்போர்கினி, பென்ஸ் எஸ்எல்எஸ் ரோட்ஸ்டெர் உள்ளிட்ட கார்கள் இந்த போட்டியில் பங்கேற்பது வழக்கம். இந்தநிலையில், வழக்கம்போல் இல்லாமல் அனைவரையும் ஈர்க்கும் வகையில், பேட்மேன் படத்தில் வரும் 'டம்ளர்' காரை போன்ற புதிய ராட்சத கார் ஒன்றை சவூதி அரேபியாவிலிருந்து கலந்து கொள்ளும் டீம் கலக் அணியினர் வடிவமைத்துள்ளனர்.

கான்செப்ட்
பார்க்கர் பிரதர்ஸ் கொடுத்த கான்செப்ட் அடிப்படையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செம வெயிட்
டிஜி1 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கார் 2.5 டன் எடை கொண்டது.

கார்பன் ஃபைபர் பாடி
இந்த கார் கார்பன் ஃபைபர் பாடி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீளம்
ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காருக்கு இணையாக இந்த கார் 5.3 மீட்டர் நீளம் கொண்டது.

எஞ்சின்
750 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.8 லிட்டர் வி6 டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

உந்துசக்தி
0-96 கிமீ வேகத்தை 2.7 வினாடிகளிலும், 0-192 கிமீ வேகத்தை 5.65 வினாடிகளிலும் எட்டிவிடும் திறன் கொண்டது.

டாப் ஸ்பீடு
மணிக்கு இந்த கார் 321 கிமீ வேகம் வரை செல்லும் தகவமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரேக்
இந்த காரின் வேகத்தை எளிதாக கட்டுப்படுத்துவதற்கு செராமிக் பிரேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

விலை
இந்த காரை ரூ.10 கோடி விலையில் உருவாக்கியுள்ளனர்.

பேட்மேன் ஸ்டைல் கார்

பேட்மேன் ஸ்டைல் கார்

பேட்மேன் ஸ்டைல் கார்

பேட்மேன் ஸ்டைல் கார்

பேட்மேன் ஸ்டைல் கார்

பேட்மேன் ஸ்டைல் கார்

பேட்மேன் ஸ்டைல் கார்

பேட்மேன் ஸ்டைல் கார்



Click it and Unblock the Notifications








