சுத்தம் செய்வதற்காக கார் சாவியை கொடுத்த தந்தைக்கு அதிர்ச்சியளித்த சிறுவன்..!!

Written By:

15 வயது மகனிடம் காரை சுத்தம் செய்வதற்காக சாவியை கொடுத்து அனுப்பிய தந்தைக்கு கடும் அதிர்ச்சியளித்துள்ளான் மகன் ஒருவன்.

சுத்தம் செய்வதற்காக கார் சாவியை கொடுத்த தந்தைக்கு அதிர்ச்சியளித்த சிறுவன்..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நாரான்புரா பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவரின் காரை சுத்தம் செய்யுமாறு கூறி தன் 15 வயது மகனிடம் சாவியை கொடுத்து அனுப்பியுள்ளார்.

கார் சாவி கொடுத்த தந்தைக்கு அதிர்ச்சியளித்த சிறுவன்..!!

வீட்டின் வெளியே பார்க்கிங் செய்யப்பட்டிருந்த காரை சுத்தம் செய்த சிறுவனுக்கு, பின்னர் அந்தக்காரை ஓட்டிப்பார்க்க ஆசை ஏற்பட்டுள்ளது.

கார் சாவி கொடுத்த தந்தைக்கு அதிர்ச்சியளித்த சிறுவன்..!!

ஹூண்டாய் சாண்ட்ரோ காரை ஸ்டார்ட் செய்த 15 வயது சிறுவன் கட்டுப்பாடு இல்லாமல் ஓட்டிச் சென்று அருகில் நிறுத்தப்பட்டிருந்த 5 கார்கள் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் மீதும் பலமாக மோதி சேதம் ஏற்படுத்தியுள்ளான்.

கார் சாவி கொடுத்த தந்தைக்கு அதிர்ச்சியளித்த சிறுவன்..!!

இதில் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை என்றாலும், மோதிய வாகனங்கள் பலமாக சேதமடைந்தன.

கார் சாவி கொடுத்த தந்தைக்கு அதிர்ச்சியளித்த சிறுவன்..!!

சம்பவம் குறித்து அறிந்து அங்கு கூடிய வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் மீது மோதிய காரின் கண்ணாடிகளை உடைத்து தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

கார் சாவி கொடுத்த தந்தைக்கு அதிர்ச்சியளித்த சிறுவன்..!!

சம்பவம் குறித்து கேள்விப்பட்டு அங்கு காவல்துறையினர் வந்த போதிலும், இது குறித்து வழக்குப்பதிவு ஏதும் செய்யப்படவில்லை.

கார் சாவி கொடுத்த தந்தைக்கு அதிர்ச்சியளித்த சிறுவன்..!!

சாண்ட்ரோ காரின் உரிமையாளர் சேதமடைந்த வாகனங்களுக்கான இழப்பீட்டை தருவதாக ஒப்புக்கொண்டதால் விஷயம் அத்துடன் முடிவுக்கு வந்தது.

கார் சாவி கொடுத்த தந்தைக்கு அதிர்ச்சியளித்த சிறுவன்..!!

கார்/ பைக் என எதுவாயினும் ஆட்டோமொபைல் என்பது எப்போதும் ஆபத்து வாய்ந்தது என்பதை அறியாத சிறுவர்களிடத்தில் அவை கிடைத்தால் இது போன்ற விபரீதம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

கார் சாவி கொடுத்த தந்தைக்கு அதிர்ச்சியளித்த சிறுவன்..!!

உரிய வயதை அடையாத சிறுவர்களிடத்தில் கார்/பைக் குறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.

கார் சாவி கொடுத்த தந்தைக்கு அதிர்ச்சியளித்த சிறுவன்..!!

சில நேரங்களில் அவர்கள் ஆர்வமிகுதியால் வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில் நண்பர்களுடன் இணைந்து சாகசங்களில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொண்டு கார் சாவிகளை அவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வது நல்லது.

English summary
Read in Tamil about father fives car key to clean, but his son takes the car for ride and damages 10 vehicles.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark