மீண்டும் பூச்சூடி பயணிக்க தயாரானது இந்தியாவின் அதிவேக இரயில்: தேஜஸ் எக்ஸ்பிரஸ்!

5வது பயணத்திற்காக தேஜஸ் எக்ஸ்பிரஸ் மீண்டும் புணரமைக்கப்பட்டுள்ளது

By Azhagar

முதல் பயணம் தந்த அனுபவத்தால் திக்குமுக்காடிப்போன தேஜஸ் எக்ஸ்பிரஸ் இரயிலில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு,மீண்டும் அது பயணிக்க தயாராகி விட்டது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்: மீண்டும் புதுப் பொலிவுடன்!

மும்பை முதல் கோவா இடையிலான அதிவேக தேஜஸ் எக்ஸ்பிரஸ் இரயில் சேவையை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்: மீண்டும் புதுப் பொலிவுடன்!

மணிக்கு சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் இந்த ரயில், கடந்த 22ம் தேதி தனது முதல் பயணத்தை மும்பையில் இருந்து தொடங்கியது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்: மீண்டும் புதுப் பொலிவுடன்!

தானியங்கி கதவுகள், குஷன் இருக்கைகள், இருக்கைகளுக்கு தாராள இடம், எல்.இ.டி திரைகள், அதற்கு ஹேட்ஃபோன்ஸ், வைஃபை வசதி, என ஆடம்பர பயணத்திற்கான அனைத்து வசதிகளும் இதில் உள்ளன.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்: மீண்டும் புதுப் பொலிவுடன்!

மேலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் இரயிலின் அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்: மீண்டும் புதுப் பொலிவுடன்!

ஆடம்பர வசதிகளும், அதிவேக பயணத்தையும் தரும் இந்த ரயிலில் பயணிக்க இந்தியளவில் மிக எதிர்பார்ப்பு இருந்தது. பல பயணிகள் புக்கிங் செய்துவிட்டு காத்திருக்கின்றனர்.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்: மீண்டும் புதுப் பொலிவுடன்!

பலரது கனவுகள் மட்டும் எதிர்பார்ப்புகளை சுமந்துகொண்டு கிளம்பிய தேஜஸ் எக்ஸ்பிரஸ், கோவா சென்று மீண்டும் மும்பை திரும்புகையில் அதன் நிலை கண்டு ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்: மீண்டும் புதுப் பொலிவுடன்!

எல்.இ.டி திரைகள் உடைக்கப்பட்டு இருந்தன, ஹெட் ஃபோன்கள் திருடப்பட்டு இருந்தன, கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தன, கழிவறைகள் முகம் சுழிக்க வைக்கும் அளவிற்கு அசுத்தம் செய்யப்பட்டு இருந்தன.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்: மீண்டும் புதுப் பொலிவுடன்!

முதல் பயணம் நிறைவடைந்த நேரத்தில் இந்தியாவில் அதிவேக தேஜஸ் இரயில் மொத்தமாக சிதறடிக்கப்பட்டு இருந்தது.

இந்த ரயிலின் நிலை இப்படி சீரழிக்கப்பட்டு இருப்பதை அறிந்த பலர், இணையதளங்களில் வெகுண்டு எழுந்தனர்.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்: மீண்டும் புதுப் பொலிவுடன்!

தேஜஸ் எக்ஸ்பிரஸ் இப்படி ஆனதற்கு காரணம் பயணிகள் தான் எனவும், அவர்களே இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் பல இணையதள வாசிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்: மீண்டும் புதுப் பொலிவுடன்!

ஆர்வத்துடன் புக்கிங் செய்துவிட்டு, தேஜஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்ய காத்திருந்தவர்களுக்கு இந்த சம்பவம் மிகுந்த வேதனையை அளித்தது. ஆனால் இதெல்லாம் பழைய கதை.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்: மீண்டும் புதுப் பொலிவுடன்!

தற்போது மீண்டும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. முதல் பயணத்தின் போது நடந்த அனைத்து சம்பவங்களும் தற்போது ஐ.ஆர்.சி.டி.சி-யால் புணரமைக்கப்பட்டுள்ளன.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்: மீண்டும் புதுப் பொலிவுடன்!

இரயிலில் ஏற்பட்ட அனைத்து பழுதுகளையும் சரிசெய்து, ஐஆர்சிடிசி மீண்டும் தேஜஸ் எக்ஸ்பிரஸை புது பொலிவிற்கு மாற்றியுள்ளது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்: மீண்டும் புதுப் பொலிவுடன்!

முதல் பயணத்தின் போது தேஜஸ் எக்ஸ்பிரஸ் இரயிலில் சுமார் 337 ஹெட் ஃபோன்கள் திருடுபோனதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

ஒவ்வொரு பயணத்தின் போதும் 84 ஹெட்ஃபோன்கள் வரை திருடப்பட்டு வந்ததாக அதற்கு இந்திய ரயில்வே விளக்கமளித்தது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்: மீண்டும் புதுப் பொலிவுடன்!

இரயிலில் மீண்டும் புணரமைப்பு பணிகள் மேற்கொண்ட நிலையில், திருடப்பட்ட ஹெட்ஃபோன்களுக்கு மாற்றாக 1000 ஹெட்ஃபோன்களை ஐ.ஆர்.சி.டி.சி வாங்கியுள்ளது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்: மீண்டும் புதுப் பொலிவுடன்!

தேஜஸ் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்தின் போது பொருத்தப்பட்டு இருந்த ஹெட்ஃபோன்களின் விலை ரூ.200/-. ஆனால் புணரமைப்பு பணிகளுக்கு பிறகு தற்போது ஐ.ஆர்.சி.டி.சி வாங்கி இருக்கும் ஹெட்ஃபோன்களின் விலை ரூ.30/-

தேஜஸ் எக்ஸ்பிரஸ்: மீண்டும் புதுப் பொலிவுடன்!

முதல் பயணம் தந்த அனுபவத்தால், அதிக விலைக்கொண்ட பொருட்களை வாங்கி இரயில் பொருத்த இந்திய இரயில்வே நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது.

அதனாலேயே குறைந்த தரம் மற்றும் மலிவான பொருட்களை பயன்படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்: மீண்டும் புதுப் பொலிவுடன்!

இந்நிலையில் புணரமைக்கப்பட்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ் மீண்டும் பயணத்திற்கு தயாரான நிலையில், அதில் பயணிக்க பலரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்: மீண்டும் புதுப் பொலிவுடன்!

அதே சமயத்தில், மலிவான பொருட்களை கொண்டு தேஜஸ் எக்ஸ்பிரஸின் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதற்கு வருத்தம் இந்தியளவில் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Article Published On: Wednesday, May 31, 2017, 12:02 [IST]
English summary
Tejas Express, India's High Speed Train replaced with Cheaper products for its Fifth Trip. Click For details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+