ரொம்ப காஸ்ட்லி... ஆடி சொகுசு காரை சொந்தமாக்கிய பிரபல டிவி நடிகை... விலையை கேட்டதும் வாயை பிளக்கும் ரசிகர்கள்!

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர், விலை உயர்ந்த ஆடி காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப காஸ்ட்லி... ஆடி சொகுசு காரை சொந்தமாக்கிய பிரபல டிவி நடிகை... விலையை கேட்டதும் வாயை பிளக்கும் ரசிகர்கள்!

இந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தேஜஸ்வி பிரகாஷ் (Tejasswi Prakash). இவர் புதிய ஆடி க்யூ7 (Audi Q7) காரை தற்போது வாங்கியுள்ளார். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். வெள்ளை நிற ஆடி க்யூ7 காரை தேஜஸ்வி பிரகாஷ் தேர்வு செய்துள்ளார். இது அனைவரையும் கவரும் வகையில் மிடுக்காக உள்ளது.

ரொம்ப காஸ்ட்லி... ஆடி சொகுசு காரை சொந்தமாக்கிய பிரபல டிவி நடிகை... விலையை கேட்டதும் வாயை பிளக்கும் ரசிகர்கள்!

பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காராக ஆடி க்யூ7 திகழ்கிறது. சஞ்சய் கபூரின் மகளான ஷனாயா கபூரும் கூட சமீபத்தில் ஆடி க்யூ7 காரை வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ராகேஷ் பாபட்டும் கூட ஆடி க்யூ7 காரை வாங்கிய செய்திகள் சமீபத்தில் வெளிவந்தன. ஆனால் அவர் வாங்கியிருப்பது புதிய கார் அல்ல. அது யூஸ்டு கார் ஆகும்.

ரொம்ப காஸ்ட்லி... ஆடி சொகுசு காரை சொந்தமாக்கிய பிரபல டிவி நடிகை... விலையை கேட்டதும் வாயை பிளக்கும் ரசிகர்கள்!

இவர்கள் தவிர சஞ்சய் தத், யாமி கௌதம், ஸ்ருதி ஹாசன், கீர்த்தி சனோன் ஆகியோரிடமும் ஆடி க்யூ7 கார் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. க்யூ7 காரில், 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வை ஆடி நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 340 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

ரொம்ப காஸ்ட்லி... ஆடி சொகுசு காரை சொந்தமாக்கிய பிரபல டிவி நடிகை... விலையை கேட்டதும் வாயை பிளக்கும் ரசிகர்கள்!

ஆடி க்யூ7 காரில், 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரில், 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. அத்துடன் ஆடியின் க்வாட்ரோ ஆல்-வீல் டிரைவ் சிஸ்டமும் (Audi's Quattro All-wheel-drive System) வழங்கப்படுகிறது.

ரொம்ப காஸ்ட்லி... ஆடி சொகுசு காரை சொந்தமாக்கிய பிரபல டிவி நடிகை... விலையை கேட்டதும் வாயை பிளக்கும் ரசிகர்கள்!

ஆடி க்யூ7 சொகுசு எஸ்யூவி காரின் எடை 2.2 டன்கள். அதிக எடை கொண்டதாக இருந்தாலும் கூட, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டி விடும் திறனை இந்த கார் பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஆடி க்யூ7 சொகுசு எஸ்யூவி காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்கள் ஆகும்.

ரொம்ப காஸ்ட்லி... ஆடி சொகுசு காரை சொந்தமாக்கிய பிரபல டிவி நடிகை... விலையை கேட்டதும் வாயை பிளக்கும் ரசிகர்கள்!

க்யூ7 சொகுசு எஸ்யூவி காரில் ஆடி நிறுவனம் 5 டிரைவிங் மோடுகளை வழங்குகிறது. ஆட்டோ, இன்டிவீஜூவல் (Individual), கம்ஃபோர்ட், டைனமிக் மற்றும் எஃபீசியண்ட் ஆகியவைதான் அந்த 5 டிரைவிங் மோடுகள் ஆகும். ஜாகுவார் எஃப்-பேஸ் (Jaguar F-Pace), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes-Benz GLE), வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) உள்ளிட்ட கார்களுடன் ஆடி க்யூ7 போட்டியிட்டு வருகிறது.

ரொம்ப காஸ்ட்லி... ஆடி சொகுசு காரை சொந்தமாக்கிய பிரபல டிவி நடிகை... விலையை கேட்டதும் வாயை பிளக்கும் ரசிகர்கள்!

அத்துடன் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வெலார் (Land Rover Range Rover Velar), லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் (Land Rover Discovery Sport) ஆகிய கார்களுக்கும் ஆடி க்யூ7 விற்பனையில் சவால் அளிக்கிறது. ஆடி நிறுவனம் க்யூ7 சொகுசு எஸ்யூவி காரில் ஏராளமான வசதிகளை வழங்கியுள்ளது.

ரொம்ப காஸ்ட்லி... ஆடி சொகுசு காரை சொந்தமாக்கிய பிரபல டிவி நடிகை... விலையை கேட்டதும் வாயை பிளக்கும் ரசிகர்கள்!

இதில், 360 டிகிரி பார்க்கிங் கேமரா ஒன்றாகும். நெருக்கடியான இடங்களில் இந்த பெரிய எஸ்யூவி காரை எளிமையாக பார்க்கிங் செய்வதற்கு இந்த வசதி உதவி செய்கிறது. அத்துடன் ஆடியின் விர்ச்சூவல் காக்பிட் வசதியும் க்யூ7 காரில் வழங்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகும். மேலும் 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் வசதியையும் இந்த கார் பெற்றுள்ளது.

ரொம்ப காஸ்ட்லி... ஆடி சொகுசு காரை சொந்தமாக்கிய பிரபல டிவி நடிகை... விலையை கேட்டதும் வாயை பிளக்கும் ரசிகர்கள்!

இதுதவிர ஆம்பியண்ட் லைட்டிங், க்ரூஸ் கண்ட்ரோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளும் ஆடி க்யூ7 சொகுசு எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ளது. இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ரொம்ப காஸ்ட்லி... ஆடி சொகுசு காரை சொந்தமாக்கிய பிரபல டிவி நடிகை... விலையை கேட்டதும் வாயை பிளக்கும் ரசிகர்கள்!

க்யூ7 காரில் ஆடி நிறுவனம் இரண்டு வேரியண்ட்களை வழங்குகிறது. இதன்படி ஆரம்ப நிலை வேரியண்ட்டான பிரீமியம் ப்ளஸ் (Premium Plus), 79.99 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டான டெக்னாலஜி (Technology), 88.33 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

ரொம்ப காஸ்ட்லி... ஆடி சொகுசு காரை சொந்தமாக்கிய பிரபல டிவி நடிகை... விலையை கேட்டதும் வாயை பிளக்கும் ரசிகர்கள்!

இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆடி க்யூ7 சொகுசு எஸ்யூவி காரின் ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். இவ்வளவு விலை உயர்ந்த ஒரு காரைதான் தேஜஸ்வி பிரகாஷ் தற்போது சொந்தமாக்கியுள்ளார். ஆனால் தேஜஸ்வி பிரகாஷ் ஆடி க்யூ7 காரின் எந்த வேரியண்ட்டை வாங்கியுள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, April 8, 2022, 12:04 [IST]
English summary
Tejasswi prakash buys a audi q7 luxury suv details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+