தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு ரூ.7 கோடியில் குண்டு துளைக்காத பஸ்!

Written By:

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்காக ரூ.7 கோடி மதிப்பில் குண்டு துளைக்காத வசதியுடன் புதிய ஆடம்பர பஸ் வாங்கப்பட இருக்கிறது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு ரூ.7 கோடியில் குண்டு துளைக்காத பஸ்!

அடுத்த ஆண்டு தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார் இந்த நிலையில், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் சந்திரசேகர ராவ் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெலங்கானா பாதுகாப்புத் துறை கருதுகிறது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு ரூ.7 கோடியில் குண்டு துளைக்காத பஸ்!

இதனையடுத்து, அவரது பயன்பாட்டிற்காக முழுவதும் குண்டுதுளைக்காத வசதி கொண்ட புதிய ஆடம்பர பஸ் ஒன்றை வாங்குவதற்கு தெலங்கானா போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. அம்மாநில தலைமை செயலாளர் சுனில் ஷர்மா தலைமையில் இதற்காக குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு ரூ.7 கோடியில் குண்டு துளைக்காத பஸ்!

சந்திரசேகரராவ் பஸ்சில் இடம்பெற வேண்டிய பாதுகாப்பு மற்றும் இதர வசதிகள் குறித்து இந்த குழு முடிவு செய்யும். இரண்டு முதல் மூன்று மாதங்களில் இந்த பஸ் தயாராகிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு ரூ.7 கோடியில் குண்டு துளைக்காத பஸ்!

துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணி வெடி தாக்குதல்களிலிருந்து பயணிகளை பாதுகாக்கும் வசதிகளுடன் இந்த புதிய ஆடம்பர பஸ் உருவாக்கப்பட இருக்கிறது. இதற்காக இந்த பஸ்சில் விசேஷ அ்டிச்சட்டம், தரைத்தளம் மற்றும் கண்ணாடி ஜன்னல்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு ரூ.7 கோடியில் குண்டு துளைக்காத பஸ்!

இதுதவிர, குளிர்சாதன வசதி, ஓய்வு அறை, சிறிய ஆலோசனை கூடம், உடன் வருபவர்களுக்கான இருக்கைகள் மற்றும் கழிவறை வசதியுடன் இந்த பஸ் தயாரிக்கப்பட இருக்கிறது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு ரூ.7 கோடியில் குண்டு துளைக்காத பஸ்!

தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு ஏதுவாக, திறந்து மூடும் கூரை அமைப்பு, ஹைட்ராலிக் நுட்பத்தில் இயங்கும் மேடை, விளக்குகள் மற்றும் மைக் செட் போன்றவற்றுடன் இந்த பஸ் சந்திரசேகர ராவுக்காக கஸ்டமைஸ் செய்யப்பட இருக்கிறது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு ரூ.7 கோடியில் குண்டு துளைக்காத பஸ்!

மெர்சிடிஸ் பென்ஸ் பஸ்சை கஸ்டமைஸ் செய்து வாங்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பஸ்சின் மதிப்பு ரூ.7 கோடியாக தெரிவிக்கப்படுகிறது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு ரூ.7 கோடியில் குண்டு துளைக்காத பஸ்!

கடந்த 2015ம் ஆண்டில் சந்திரசேகர ராவுக்காக ரூ.5 கோடியில் குண்டு துளைக்காத மெர்சிடிஸ் பென்ஸ் ஆடம்பர பஸ் ஒன்று வாங்கப்பட்டது. இந்த நிலையில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த புதிய பஸ் வாங்கப்பட இருப்பதாக அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Telangana CM Chandrasekarrao May Get New Bullet Proof Bus Soon.
Story first published: Wednesday, March 7, 2018, 11:11 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark