பார்த்தவுடன் கூகுள் மேப் மீதுதான் தப்புனு தோணும்... பல லட்ச ரூபாய் கொடுத்து கார் வாங்கியவருக்கு இது தெரியலயே!!

இன்றைய கால உலகில் தொழிற்நுட்பம் பெரிய அளவிற்கான வளர்ச்சியை கண்டுள்ளது. பூமிக்கு வெளியே சுற்றும் செய்ற்கைகோள்களின் உதவியினால் உலகமே கைக்குள் அடங்கிவிட்டது. உலகின் ஏதோ ஒரு மூலையில் கால சூழல் எப்படி உள்ளது என்பதை இருக்கும் இடத்தில் இருந்தே செல்போன், லேப்டாப் மூலமாக பார்க்க முடியும் என்றால் எந்த அளவிற்கு அட்வான்ஸாக சென்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை யோசித்து பாருங்கள். செயற்கைகோளினால், என்னென்ன ஊரில் எந்தெந்த பக்கம் சாலைகள், சந்துகள் உள்ளன என்பதை உடனுடக்குடன் பார்க்க முடிவதால், எதாவது தெரியாத இடங்களுக்கு செல்லும்போது அங்குள்ளவர்களிடம் வழிக்கேட்டு செல்வது மிகவும் குறைந்துவிட்டது.

இதனால், தைரியமாக மக்கள் நிறைய பேர் வாகனங்களில் தொலைத்தூர பயணங்களை அதிகமாக மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதன் எதிரொலியாக, வாகனங்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பைக்குகள், கார்களை அதிகம் பேர் வாங்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், என்னதான் தொழிற்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்தாலும், அதனை தவறாக பயன்படுத்தும் மக்களும் இருக்கதானே செய்கின்றனர்.

அத்தகையவர்களால் உலகம் முழுக்கவே அவ்வப்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அந்த வரிசையில், கோவாவில் கூகுள் மேப்பை பார்த்துக் கொண்டு வாகனம் ஓட்டிய கியா செல்டோஸ் (Kia Seltos) கார் டிரைவர் சிறிய விபத்தில் சிக்கியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவரான இந்த வெள்ளை நிற கியா செல்டோஸ் கார் டிரைவர் கோவாவிற்கு காரில் பயணம் செய்துள்ளார்.

அப்போது கோவாவில் ஒரு சிறிய குக் கிராமத்தில் கூகுள் மேப்பை பார்த்தப்படி சென்றுள்ளார். கோவா ஒரு சிறிய யூனியன் பிரதேசம் என்றாலும், முக்கியமான பனாஜி உள்ளிட்ட நகரங்களில் இருந்து மிகவும் தொலைவில் அமைந்த சாவுரி என்கிற கடற்கரை நகரத்திற்கு அருகில் உள்ள சிறு கிராமங்களுக்கு இவர் சென்றுள்ளார்.

அவற்றை சுற்றி பார்த்துவிட்டு சாவுரி நகரத்திற்குள் இந்த செல்டோஸ் கார் டிரைவர் சென்று கொண்டிருந்த போது, அருகில் இருந்த முக்கியமான நகர சாலைக்கு கூகுள் மேப் காட்டிய வழியில் சென்றுள்ளார். ஆனால் அது வழியே கிடையாது, அது ஒரு கிறித்துவ தேவாலயம் ஆகும். சாவுரி நகரத்தில் இரு சாலைகளை இணைக்கக்கூடிய இடத்தில் அமைந்திருக்கும் செண்ட் தெரெசா தேவாலயத்தின் வளாகத்தை சாலையாக நினைத்து இந்த செல்டோஸ் கார் டிரைவர் கடக்க முயற்சித்துள்ளார்.

அதாவது, இதில் கூகுள் மேப்பின் தவறு எதுவுமே கிடையாது. மொத்த தவறும் கார் டிரைவர் மீதுதான் உள்ளது. சாலையை சுற்றிக் கொண்டு செல்ல சோம்பேறித்தனப்பட்டு தேவாலயத்தின் வளாகத்திற்குள் புகுந்து மெயின் ரோடுக்கு செல்ல முயற்சியித்துள்ளார். ஊர் பேர் தெரியாத புதிய நகரத்தில் இவ்வாறு நடந்துக் கொள்வது எப்போதுமே ஆபத்தில் சென்றுதான் முடியும் என்பதற்கு இவ்வாறான நிகழ்வுகளே சாட்சியாகும்.

தேவாலயத்தின் வளாகத்திற்குள் ஒரு பக்கம் எளிதாக நுழைந்துவிட்ட இந்த கார் டிரைவர், மறுப்பக்கம் மெயின் ரோடை வந்தடைவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார். ஏனெனில், அந்த முக்கியமான சாலை ஆனது சற்று தாழ்வாக அமைந்துள்ளதினால், தேவாலயத்தில் இருந்து அந்த சாலையை இணைக்க படிக்கட்டு அமைத்துள்ளனர். ஆனால், இதை அறியாமல் வந்துவிட்ட செல்டோஸ் கார் டிரைவர் படிக்கட்டை பார்த்து மிரண்டுள்ளார்.

அப்போதாவது, மீண்டும் யு-டர்ன் அடித்து சாலையை சுற்றிக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், இவ்வளவு தொலைவு வந்துவிட்டோம், இந்த படிக்கட்டு மட்டும்தானே என அதனை தனது செல்டோஸ் காரில் கடக்க முயற்சித்துள்ளார். ஆனால், கியா செல்டோஸ் ஆனது அளவில் பெரியதான கார் என்பதால், கீழே இறக்கும்போது காரின் அடிப்பகுதி சாலையில் மோதி நின்றுள்ளது. இதனால், முன்னோக்கியும் செல்ல முடியாமல், பின்னோக்கியும் செல்ல முடியாமல் இந்த செல்டோஸ் கார் டிரைவர் தவித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உள்ளூர் மக்கள் உதவவில்லை என்றால், இந்த தெலுங்கானா நபரின் பாடு திண்டாட்டமாகி இருக்கும். முன், பின் தெரியாத, முதல்முறையாக செல்லும் பகுதிகளில் வழக்கத்தை காட்டிலும் சாலையில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், அத்தகைய நேரங்களில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்களை மட்டுமில்லை, உங்களது பல லட்ச ரூபாய் மதிப்பிலான காரையும் சார்ந்தது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 10, 2025, 15:49 [IST]
English summary
Telangana man stuck in kia seltos car in goa check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+