டிவி சீரியலில் பருத்த உடல் உடன் வருபவர் தானே இது... மொத்தமா ஆளே மாறிய நடிகர் புதுசா வாங்கிய லம்போர்கினி கார்!!

லம்போர்கினி (lamborghini) கார் ஒன்றை சாலையில் காண்பதே நம்மில் பெரும்பாலானோருக்கு பெரிய கனவு ஆகும். அப்படியிருக்கையில், லம்போர்கினி கார் ஒன்றை வாங்குவதை எல்லாம் கனவில் கூட நிறைய பேர் நினைத்து பார்ப்பது இல்லை. ஏனெனில் அந்த அளவிற்கு மிடில்-கிளாஸ் மக்களுக்கு எட்டாக் கனியாகவே லம்போர்கினி கார்கள் உள்ளன. ஆனால், சினிமா நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக லம்போர்கினி கார்களை அடுத்தடுத்து புதியது புதியதாக வாங்கி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஒரு பிரபல பாலிவுட் நடிகர் (Bollywood Actor) பிராண்ட்-நியூ லம்போர்கினி கார் ஒன்றை டெலிவிரி பெற்றுள்ளார்.

பொதுவாகவே, பாலிவுட் பிரபலங்கள் அவ்வப்போது புது, புது விலையுயர்ந்த கார்களை மாதத்திற்கு ஒன்று என வாங்கி வருவதை நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்போது லம்போர்கினி காரை வாங்கியிருக்கும் பாலிவுட் நடிகரின் பெயர், 'ராம் கபூர்' (Ram Kapoor) ஆகும்.

television actor ram kapoor

ராம் கபூர், இந்த பெயரை கேள்விப்படா விடினும், இவரது முகத்தை நிச்சயம் நம்மில் நிறைய பேர் பார்த்திருப்பீர்கள். பாலிவுட் நடிகராக இருப்பினும், தமிழ்நாடு வரையிலும் இவரது முகம் மக்கள் பலருக்கு பரீட்சையமானதாக உள்ளது. அப்படியிருக்கையில், வட இந்திய மக்கள் மத்தியில் சொல்லவே வேண்டாம். 1998ஆம் ஆண்டில் இருந்து டிவி சீரியல்களில் நடித்துவரும் நடிகர் ராம் கபூர், 2001ஆம் ஆண்டிலேயே பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி விட்டார்.

ஆனால், இவரது முகம் இந்தியா முழுவதும் பிரபலமாகியது எப்போது என்றால் 2011ஆம் வருடத்திற்கு பின்பே ஆகும். 2011இல் இருந்து 2014ஆம் ஆண்டு வரையில் நடிகை சாக்‌ஷி தன்வருடன் இணைந்து 'படே அச்சே லக்டே ஹயின்' என்கிற டிவி சீரியலில் நடிகர் ராம் கபூர் நடித்தார். இளமை பருவத்தை தாண்டிய பெண்மணிக்கும், சற்று உடல் பருத்த நடிகருக்கும் இடையேயான காதலை கதைக்களமாக கொண்ட இந்த டிவி சீரியல் தமிழிலும் 'உள்ளம் கொள்ளை போகுதடா" என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

television actor bought lamborghini urus

உள்ளம் கொள்ளை போகுதடா என சீரியலின் பெயரை சொன்னவுடன் யாரை பற்றி பேசுகிறோம் என்பது இந்நேரம் நிறைய பேருக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால், அப்போது இருந்த ராம் கபூருக்கும், இப்போதுள்ள ராம் கபூருக்கும் உருவத்தில் மிக பெரிய வித்தியாசம் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இருவரும் ஒருவரே என்பதை பலராலும் நம்பவே முடியாது.

அந்த அளவிற்கு பருமனான உடல் தோற்றத்தில் இருந்து, ஒல்லியான உடலுக்கு மாறியுள்ள நடிகர் ராம் கபூர் புதியதாக லம்போர்கினி கார் ஒன்றை வாங்கியுள்ளார். இவர் வாங்கியிருப்பது, லம்போர்கினி உருஸ் எஸ்.இ (Urus SE) என்கிற பிளக்-இன் ஹைப்ரீட் எஸ்யூவி கார் ஆகும். ஷோரூமுக்கு நேரில் சென்று உருஸ் எஸ்இ காரை ராம் கபூர் வாங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

television actor bought lamborghini urus

பிரீமியம் தரத்திலான 'வெர்டே கேயா' (Verde Gea) என்கிற சில்வர் நிறத்தில் உருஸ் எஸ்இ காரை நடிகர் ராம் கபூர் வாங்கியுள்ளார். காரின் அலாய் சக்கரங்களும் கருமையான வெண்கல நிறத்தில் உள்ளன. ஆனால், அதேநேரம் காருக்கு உள்ளே பளிச்சிடும் ஆரஞ்ச் நிறம் உள்ளது. பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் பவர் என இரண்டிலும் இயங்கக்கூடிய இந்த லம்போர்கினி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் சுமார் ரூ.4.57 கோடியாக உள்ளது.

பவர்ஃபுல்லான 4 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் மற்றும் 800 சிவி ஹைப்ரீட் சிஸ்டம் உருஸ் எஸ்இ ஹைப்ரீட் காரில் பொருத்தப்படுகிறது. அதன் உதவியுடன் 0-இல் இருந்து 100km/h வேகத்தை வெறும் 3.4 வினாடிகளிலும், 200km/h வேகத்தை 11.2 வினாடிகளிலும் இந்த காரில் எட்டிவிடலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ராம் கபூரிடம் ஏற்கனவே போர்ஷே 911, ஃபெர்ராரி போர்டோஃபினோ எம், ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 உள்ளிட்ட விலையுயர்ந்த கார்கள் உள்ளன. இந்த வரிசையில் புதியதாக லம்போர்கினி உருஸ் எஸ்இ கார் இணைந்துள்ளது. உடல் பருமனான தோற்றத்துடன் சினிமாவிற்குள் நுழைந்தவர் இன்று அம்பானிக்கு இணையாக விலையுயர்ந்த கார்களை வாங்கி குவித்து வருகிறார்.

More from DriveSpark

Article Published On: Sunday, June 15, 2025, 5:00 [IST]
English summary
Television actor ram kapoor bought lamborghini urus se hybrid car
மேலும்... #celebrity cars #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X